பிரஞ்சித் சிங்க ராய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரஞ்சித் சிங்க ராய்
Pranjit Singha Roy
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2023
விவசாயம், சுற்றுலா, போக்குவரத்து-அமைச்சர்
பதவியில்
9 மார்ச்சு 2018 – 2023
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
பிரஞ்சித் சிங்க ராய்

திரிபுரா, இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
மந்திரி சபைதிரிபுரா அரசு

பிரஞ்சித் சிங்க ராய் (Pranjit Singha Roy) இந்தியாவின் திரிபுராவைச் சேர்ந்த அரசியல்வாதியும் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற திரிபுரா சட்டமன்றத் தேர்தலில், கோமதி மாவட்டத்தில் உள்ள இராதாகிசோர்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினர் ஆனார்.[1][2][3][4]

2016ஆம் ஆண்டில், மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) உடன் இந்தியத் தேசிய காங்கிரசில் இணைந்ததால் கட்சியில் ஏற்பட்ட அதிருப்தியால், அகில இந்திய திரிணாமுல் காங்கிரசில் இணைந்த இந்தியத் தேசிய காங்கிரசின் ஆறு சட்டமன்ற உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.[5]

ஆகத்து 2017-ல், அகில இந்திய திரிணாமுல் காங்கிரசிலிருந்து பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த ஆறு சட்டமன்ற உறுப்பினர்களில் இவரும் ஒருவர். இவர்கள் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த பின்னர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Assembly Since 1963" (PDF). p. 50.
  2. MLAs refuse to accept Roy as CLP leader
  3. Congress hit by next big crisis in Tripura, 6 MLAs quit party
  4. My Neta
  5. Six Congress MLAs in Tripura join Trinamool
  6. "Recognise Ex-TMC MLAs as BJP Members in Tripura: BJP". பார்க்கப்பட்ட நாள் 23 September 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரஞ்சித்_சிங்க_ராய்&oldid=3817715" இலிருந்து மீள்விக்கப்பட்டது