உள்ளடக்கத்துக்குச் செல்

பிபாசா அயாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிபாசா அயாத்
தாய்மொழியில் பெயர்বিপাশা হায়াত
பிறப்பு23 மார்ச்சு 1971 (1971-03-23) (அகவை 53)
தேசியம்வங்கதேசத்தவர்
கல்விநுண்கலையில் முதுகலைப் பட்டம்
படித்த கல்வி நிறுவனங்கள்தாக்கா பல்கலைக்கழகம்
பணி
வாழ்க்கைத்
துணை
தௌகிர் அகமது
பிள்ளைகள்அரிஷா அகமது
ஆரிப் அகமது
உறவினர்கள்நடிகை நடாஷா அயாத்து (சகோதரி)
விருதுகள்வங்காளதேச தேசியத் திரைப்ப்ட விருதுகள்
மெரில் பபுரொதம் அலோ விருது

பிபாசா அயாத் (Bipasha Hayat; பிறப்பு 23 மார்ச் 1971) வங்காளதேசத்து நடிகையும், வடிவழகியும், ஓவியரும், பின்னணி பாடகியும் ஆவார். [1] அகுனர் பொரோஷ்மோனி (1994) என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக இவர் சிறந்த நடிகைக்கான வங்கதேச தேசியத் திரைப்பட விருதை வென்றார். [2] இவர் 1998, 1999 மற்றும் 2002 இல் மெரில் பபுரொதம் அலோ விருதுகளைப் பெற்றார். இவர் ஒரு ஓவியரும் கூட. இவரது கலைப்படைப்புகள் 1996 இல் டாக்காவில் உள்ள கலைக் கூடமான மினியேச்சர் ஓவியக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டன

கல்வி

[தொகு]

அயாத் 1998 இல் டாக்கா பல்கலைக்கழகத்தின் நுண்கலை பீடத்தில் தனது முதுகலைப் படிப்பை முடித்தார் [3]

தொழில்

[தொகு]

90களில் இவர் பல பிரபலமான தொலைக்காட்சி நாடகங்களில் நடித்தார். இவர் "சுதுய் டோமகே ஜானி" என்ற தனது முதல் தொலைக்காட்சி நாடகத்தை 1997இல் எழுதினார். [3]

அகுனர் பொரோஷ்மோனி மற்றும் ஜாய்ஜத்ரா என்ற இரண்டு வங்காள தேச விடுதலைப் போர் தொடர்பான திரைப்படங்களில் நடித்தார். வங்காள எழுத்தாளரும், திரைப்பட இயக்குநரும், நாடக ஆசிரியருமான ஹுமாயூன் அகமது இயக்கிய முதல் படமான இதில், டாக்கா நகருக்குள் தனது குடும்பத்துடன் தனது வீட்டில் தடுத்து வைக்கப்பட்ட ஒரு இளம் பெண்ணின் பாத்திரத்தை இவர் சித்தரித்தார். படத்தில் ராத்திரி தனது கதாபாத்திரத்தின் பெயராக, கெரில்லா சுதந்திரப் போராளியை (நடிகர் அசாதுசமான் நூர் ) காதலிக்கும் பெண்ணாக நடித்திருந்தார். தனது குடும்பம் தடுத்து வைக்கப்பட்டபோது அருகில் வசித்துவந்த போராளி மீதான இவரது பாசம் போரின் கெரில்லா போராளிகளுக்கு பொதுமக்களின் ஆதரவையும் பங்களிப்பையும் பிரதிபலிக்கிறது. ஜாய்ஜத்ரா என்ற படத்தில், இராணுவத் தாக்குதலில் இருந்து தப்பிக்க முயன்றபோது மகனை இழந்த நடுத்தர வயது தாயாக இவர் நடித்ததால் இவரது கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமாக அக்காலத்தில் பேசப்பட்டது.

ஓவியம்

[தொகு]

அயாத்தின் கலைப்படைப்புகள் 1996 இல் டாக்காவில் உள்ள காட்சிக் கூடமான மினியேச்சர் ஓவியக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டன. 1998 ஆம் ஆண்டில், பான் பசிபிக் சோனர்கான் விடுதியில் உள்ள தெய்வீக கலைக்கூடத்தில் ஒரு குழு கலை கண்காட்சியிலும் பங்கேற்றார். பின்னர், 2002 இல் எஃப்எஃப்ஏவின் ஜைனுல் கலைக்கூடத்தில் ஒன்பது சமகால இளம் கலைஞர்கள் கண்காட்சியில் பங்கேற்றார்.[4]

அயாத்தின் 6 வது தனி கலை கண்காட்சி "மைண்ட்ஸ்கேப்" என்ற தலைப்பில் 14-24 சனவரி 2017 இல் உரோமில் நடைபெற்றது. இது அக்ரிலிக்ஸ், வரைபடங்கள் மற்றும் அட்டை அக்ரிலிக்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய இவரது 50 வேலைகளை காட்சிப்படுத்தியது.

சொந்த வாழ்க்கை

[தொகு]

அயாத், வங்க தேசக் கட்டிடக் கலைஞரும், நடிகரும், தொலைக்காட்சி, திரைப்படன் ஆகிய இரண்டிலும் இயக்குனராக இருக்கும் தௌகிர் அகமது என்பவரை மணந்தார். இவர் நடிகரும் இயக்குநருமான அபுல் ஹயாத் என்பவரின் மகளாவார். [5] இவருடைய சகோதரி நடாஷா அயாத் மற்றும் மைத்துனர் ஷமிம் ஷாஹெட் கான் இருவரும் நடிப்புத் தொழிலைக் கொண்டுள்ளனர். பிபாசா மற்றும் நடாஷா 2008 இல் ஒரு நவநாகரீக ஆடை, ஆடம்பரப் பொருள்களை விற்கும் சிறிய கடையில் முதலீடு செய்தனர். [6] இவருக்கு அரிஷா அகமது என்ற மகளும், ஆரிப் அகமது என்ற மகனும் உள்ளனர்.

சான்றுகள்

[தொகு]
  1. https://www.imdb.com/name/nm1463819/
  2. জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২) [List of the winners of National Film Awards (1975-2012)]. Government of Bangladesh (in Bengali). Bangladesh Film Development Corporation. பார்க்கப்பட்ட நாள் 2019-03-25.
  3. 3.0 3.1 ""Acting is like mathematics"-- Bipasha Hayat". http://archive.thedailystar.net/2006/06/12/d606121401159.htm. பார்த்த நாள்: 2017-01-21. 
  4. "Bipasha Hayat's solo painting exhibition begins today". http://reflectionnews.com/bipasha-hayat%E2%80%99s-solo-painting-exhibition-begins-today/. பார்த்த நாள்: 2017-01-21. 
  5. . 10 July 2015. 
  6. . 15 August 2015. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிபாசா_அயாத்&oldid=3290773" இலிருந்து மீள்விக்கப்பட்டது