பின்னையர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பின்லாந்தின் மிகப்பெரிய விமானச் சேவை ஃபின்னையர் (Finnair) விமானச் சேவையாகும். இது வாண்ட்டா நகரைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது. இதன் முக்கிய மையம் ஹெல்சிங்கி – வாண்டா விமான நிலையம் ஆகும். 1923 ஆம் ஆண்டில் கான்சுல் ப்ருனோ லுகான்டெர் என்பவர், ஃபின்னையர் விமானச் சேவை நிறுவனத்தினை ஏரோ லிமிடெட் என்ற பெயருடன் தொடங்கினார். நிறுவனம் என்று பொருள்படக்கூடிய ஃபின்லாந்தின் மொழி, முதன்முதலாக வைக்கப்பட்ட அந்த முதல் பெயரில் இடம்பெற்றிருந்தது.

ஃபின்னையர் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் ஃபின்லாந்தின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு என இரு வான்வழிப் போக்குவரத்தினையும் தனது கட்டுக்குள் வைத்துள்ளன. இந்த விமானச் சேவையின் முக்கிய பங்குதாரர் ஃபின்லாந்து அரசாங்கம் ஆகும். ஃபின்லாந்து அரசு ஃபின்னையர் விமானச் சேவையினில் 55.8 சதவீதம் பங்குகளைப் பெற்றுள்ளது.[1] 2013 ஆம் ஆண்டில், ஃபின்னையர் விமானச் சேவையின் மூலம் சுமார் 9.2 மில்லியன் பயணிகள் 60 ஐரோப்பிய பகுதிகள் மற்றும் 13 ஆசியப் பகுதிகளுக்குச் சென்றுள்ளனர்.[2] மார்ச் 2014 இன் படி ஃபின்னையர் விமானச் சேவையில் சுமார் 5,473 மக்கள் வேலை செய்கின்றனர்.[3]

இடையூறில்லாமல் இயங்கும் பழம்பெரும் விமானச் சேவைகளில் ஃபின்னையர் விமானச் சேவை ஐந்தாவது இடத்தில் உள்ளது. 1963 ஆம் ஆண்டு வரை இதன் சேவையில் எவ்வித விபத்துக்களும் ஏற்படவில்லை. 2014 ஆம் ஆண்டில் ஃபின்னையர் விமானச் சேவை பாதுகாப்பான விமானச் சேவைக்கான நிறுவனங்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருந்தது.[4]

உயர்தர வழித்தடங்கள்[தொகு]

ஃபின்னையர் விமானச் சேவையின் உயர்தர வழித்தடங்களாக நியூயார்க் – லண்டன், லண்டன் – நியூயார்க், ஹெல்சிங்கி – ஸ்டாக்ஹோல்ம் மற்றும் ஹெல்சிங்கி – லண்டன் ஆகிய வழித்தடங்களைக் கொண்டுள்ளது. இந்த வழித்தடங்களுக்கு முறையே வாரத்திற்கு 69, 95, 51 மற்றும் 46 விமானங்களைச் செயல்படுத்துகிறது. இவை தவிர குறிப்பிட்ட காரணங்களுக்காகச் செயல்படுத்தப்படும் விமானங்களை ஹெல்சிங்கி – ஏதென்ஸ் மற்றும் லண்டன் – சேன் டியேகோ ஆகிய வழித்தடங்களிலும் செயல்படுத்துகிறது.[5]

இலக்குகள்[தொகு]

ஹெல்சிங்கி – வான்டா பகுதியினை முதன்மையாகக் கொண்டு ஆசியா, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் அதிகப்படியான உள்ளூர் பிணைய அமைப்பிற்கான விமானச் சேவைகளை செயல்படுத்துகிறது.

கோட்ஷேர் ஒப்பந்தங்கள்[தொகு]

ஜூலை 2015 இன் படி, ஃபின்னையர் பின்வரும் ஒன்வேர்ல்டு உறுப்பினர்களுடன் கோட்ஷேர் ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது.[6]

ஏர் பெர்லின் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் பிரிட்டிஷ் ஏர்வேஸ் கத்தே பசுபிக் இபேரியா ஏர்லைன்ஸ் மலேசியா ஏர்லைன்ஸ் குவாண்டாஸ் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் [7] யுஎஸ் ஏர்வேஸ் [8]

ஃபின்னையர் விமானச் சேவை, ஒன்வேர்ல்டு நிறுவனத்துடன் மட்டுமல்லாது, பிற நிறுவனங்களுடனும் கோட்ஷேர் ஒப்பந்தங்களைப் பகிர்ந்துள்ளது.

ஏரோஃப்ளோட் ஃபிளைபீ [8] ஏர் சீனா நோர்டிக் உள்ளூர் ஏர்லைன்ஸ் பாங்காக் ஏர்வேஸ் ஐஸ்லாண்டையர் பெலவியா ரோஸ்ஸியா [9] செக் ஏர்லைன்ஸ் டி ஏ பி போர்ச்சுக்கல்

விமானக் குழு[தொகு]

தற்போதைய விமானக் குழு[தொகு]

மார்ச் 2015 இன் படி, ஃபின்னையர் விமானக்குழுவின் விமானங்கள் பின்வருமாறு.[10][11][12]

விமானம் சேவையில்

இருப்பவை

ஆர்டர் தேர்வுகள் பயணிகள்
J W Y மொத்தம்
ஏர்பஸ்

A319-100

9 0 0 138 138
ஏர்பஸ்

A320-200

10 0 0 168 168
ஏர்பஸ்

A321-200

6 0 0 196 196
5 0 0 209 209
ஏர்பஸ்

A330-300

5 45 40 178 263
3 32 40 213 285
ஏர்பஸ்

A340-300

1 42 36 185 263
4 45 40 170 255
2 42 39 192 273
ஏர்பஸ்

A350-900

19 46 43 208 297
எம்பெரர்

170

2 0 0 76 76
எம்பெரர்

190

12 0 0 100 100
மொத்தம் 59 19

முந்தைய விமானக் குழு[தொகு]

ஃபின்னையர் இதற்கு முன் பின்வரும் விமானங்களைப் பயன்படுத்தியுள்ளது. [14]

  • ஏர்பஸ் A300B4-200FF (1986–2004)
  • போயிங்க் 757-200 (1997-2014)
  • போயிங்க் 737-200C (1989–1995)
  • கான்வாயர் CV-440 மெட்ரோபொலிட்டன் (1953–1980)
  • டி ஹாவில்லான்ட் டிராகன் ராபிட் (1937–1947)
  • டக்ளஸ் DC-2 (1941–1948)
  • டக்ளஸ் DC-3 (1947–1969)
  • டக்ளஸ் DC-8-62CF (1969–1981)
  • டக்ளஸ் DC-8-62 (1975–1985)
  • டக்ளஸ் DC-9-14 / -15F / -15MC / -15RC / -41 / -51 (1971–2003)
  • எம்பெரர் E-170 (2005–2012)
  • ஃபோக்கர் F27 (1980–1987)
  • ஜங்கர்ஸ் F.13 (1924–1935)
  • ஜங்கர்ஸ் G.24 (1926–1935)
  • ஜங்கர்ஸ் Ju 52/3m (1932–1949)
  • மெக்டொனல் டக்ளஸ் DC-10-30 / -30ER (1975–1996)
  • மெக்டொனல் டக்ளஸ் MD-11 (பயணிகள் ரகம்) (1990–2009, வாடிக்கையாளர்கள்); (சரக்குகள் ரகம் செயல்பாடு 2010–2011)
  • மெக்டொனல் டக்ளஸ் MD-82 / -83 / -87 (1983–2006)

குறிப்புகள்[தொகு]

  1. Major Shareholders Finnairgroup.com. Retrieved on 25th July 2015.
  2. Annual report 2013 Finnairgroup.com. Retrieved on 25th July 2015.
  3. Finnair in Brief Finnairgroup.com. Retrieved on 25th July 2015.
  4. JACDEC SAFETY RANKING 2014 பரணிடப்பட்டது 2016-11-27 at the வந்தவழி இயந்திரம் retrieved 25th July 2015
  5. "On-Board Finnair". cleartrip.com. 2016-11-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 25th July 2015 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
  6. "Finnair codeshare partners". oneworld.com. 2015-07-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 25th July 2015 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
  7. "Finnair SriLankan Airlines codeshare". srilankan.com. 25th July 2015 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
  8. "Finnair Flybe codeshare". www.exeterexpressandecho.co.uk. 2015-07-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 25th July 2015 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
  9. "Finnair Rossiya codeshare". finnairgroup.com. 25th July 2015 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
  10. Finnair official fleet page
  11. "Orders & deliveries". Airbus. Airbus SAS. 2012-07-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 25th July 2015 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
  12. Finnair fleet at ch-aviation.ch
"https://ta.wikipedia.org/w/index.php?title=பின்னையர்&oldid=3633355" இருந்து மீள்விக்கப்பட்டது