பிட்டர் கணிகா தேசியப் பூங்கா
Appearance
இந்த கட்டுரையோ அல்லது பகுதியோ பிதர்கனிகா தேசியப் பூங்கா உடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது. (உரையாடுக) |
கட்டாக் மாவட்டத்திலான இப்பூங்கா .367 ச.கி.மீ. பரப்பில் அமைந்துள்ளது. அருகிலான விமான நிலையம் புவனேஷ்வர், சுமார் 200 கி.மீ. தூரத்திலும், அருகிலான ரயில் நிலையம் பத்ரக் சுமார் 100 கி.மீ. தூரத்திலும் இருக்கின்றன. இப்பூங்கா தென்னை மரங்களும் உப்பு நீர்த் தாவரங்களும் கொண்ட அலை வீச்சுச் சேற்றுக் காடுகளை உடையது. பூங்காவில் காணும் பிராணிகள் வேங்கை, வராகம், கழுதைப்புலி, காட்டுப்பூனை, சாம்பர், ராட்சச அணில், உப்பு நீர் முதலை, நீர்மானிட்டர், கடலாமை, ராஜநாகம், மலைப்பாம்பு முதலியனவாகும். கொக்குகள், வாத்துகள் முதலிய பறவைகளும் உள்ளன.பூங்காவுக்குச் செல்ல உகந்த பருவம் குளிர்காலம் ( நவம்பரிலிருந்து பிப்ரவரி வரை ) ஓய்வில்லங்கள் உண்டு. [1]
- ↑ இந்தியாவின் தேசிய பூங்காக்கள் - ஆர். எஸ். பிஷ்ட் - பப்ளிகேஷன்ஸ் டிவிஷன் - தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் - 2000 - பக். 85