பிடல் காஸ்ட்ரோவின் இறப்பு மற்றும் அரசு இறுதிச் சடங்கு
2003-ல் காஸ்ட்ரோ | |
இறந்த நாள் | 25 நவம்பர் 2016ஒ.ச.நே - 05:00) | 22:29 (
---|---|
பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்ட நாள் | 26 நவம்பர் 2016 |
அடக்கம் செய்யப்பட்ட நாள் | 4 டிசம்பர் 2016 |
90 வயதான கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் முதல் செயலாளரும், மன்றத்தின் தலைவருமான பிடல் காஸ்ட்ரோ 25 நவம்பர் 2016 மாலை 22:29 ( CST ) அளவில் இயற்கை எய்தினார். அவரது சகோதரர், மாநில மன்றத்தின் அப்போதைய தலைவரும், முதல் செயலாளருமான ராவுல் காஸ்ட்ரோ, அவரது மரணம் குறித்து அரசு தொலைக்காட்சியில் அறிவித்தார். [1] அவரது சகாப்தத்தின் மிகவும் சர்ச்சைக்குரிய அரசியல் தலைவர்களில் ஒருவரான, [2] காஸ்ட்ரோ தனது வாழ்நாளில் உலகம் முழுவதும் உள்ள மக்களை ஊக்கமும் துயரப்படவும் செய்தார். [2] லண்டன் தி அப்சர்வர் "வாழும் போது இருந்ததைப் போலவே மரணத்திலும் பிரிவினைவாதி" என்று நிரூபித்தார், மேலும் இவரது "எதிரிகள் மற்றும் அபிமானிகள்" ஒப்புக்கொண்ட ஒரே விடயம் இவர் உலக விவகாரங்களில் "ஒரு குறிப்பிடத் தகுந்த நபர்" என்று ஒப்புக்கொண்டனர். "ஒரு சிறிய கரிபியன் தீவை உலக அளவில் குறிப்பிடத்தகுந்த சக்தியாக மாற்றியவர்" என்று குறிப்பிட்டது. [3] த டெயிலி டெலிகிராப், உலகம் முழுவதும் இவர் "மக்களின் துணிச்சலான வாகையாளராகவோ , அல்லது ஒரு அதிகார வெறி கொண்ட சர்வாதிகாரியாகவோ கருதப்பட்டார்" என்று குறிப்பிட்டுள்ளது. [4] காஸ்ட்ரோவின் உடல் தகனம் செய்யப்பட்ட பின்னர் எரிசாம்பல் 4 திசம்பர் 2016 அன்று சாண்டியாகோ டி கியூபாவில் அடக்கம் செய்யப்பட்டது, மேலும் பல்லாயிரக்கணக்கான கியூபா மக்கள் இந்த நிகழ்வை நினைவுகூர்ந்தனர்.
சான்றுகள்
[தொகு]- ↑ "Cuba's Fidel Castro, former president, dies aged 90". BBC News. 26 November 2016. https://www.bbc.com/news/world-latin-america-38114953.
- ↑ 2.0 2.1 Balfour 1995.
- ↑ "Fidel Castro: leader proves as divisive in death as he was in life". The Observer. 26 November 2016. https://www.theguardian.com/world/2016/nov/26/fidel-castro-dies-cuba-revolutionary-icon.
- ↑ "Fidel Castro: As Divisive in Death as he was in Life". The Daily Telegraph. 26 November 2016. https://www.telegraph.co.uk/news/2016/11/26/fidel-castro-divisive-death-life/.