பிக்மி மனிதர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆப்பிரிக்காவின் பிக்மி இனத்தவர்களுடன் ஓர் ஆய்வாளர்.

பிக்மி மனிதர்கள் அல்லது குள்ள மனிதர்கள் (Pygmy) என்பது ஆப்பிரிக்காவைத் தோற்றுவாயாகக் கொண்ட பழங்குடிகளின் இனக் குழு ஆகும். பிக்மி இனக் குழு என்பது சராசரி உயரம் பொதுவாகக் குறைவாக இருக்கும் பல இனக்குழுக்களின் பொதுப்பெயராகவும் கூறப்படுகின்றது. இதனால் மானிடவியலாளர்கள் இவ்வினத்தவர்களில் வயதுவந்த ஆண் சராசரியாக 150 செமீ (59 அங்குலம்) இருப்பதாக வரையறுப்பர்.[1] குழுவில் ஓரளவு உயரம் கூடிய உறுப்பினர்கள் பிக்மொயிட் என அழைக்கப்படுவர் [2] மத்திய ஆப்பிரிக்காவின் அக்க, எபே, (இ)ம்பியுடி ஆகிய இனக் குழுவினர் அதிகம் அறியப்பட்ட பிக்மிகளாவர். அவுத்திரேலியா, தாய்லாந்து, மலேசியா[3], இந்தோனேசியா, பிலிப்பின்ஸ், பப்புவா நியூகினி, பிறேசில்[4] ஆகிய நாடுகளில் பிக்மி இனத்தவர் வாழுகின்றனர்.


மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிக்மி_மனிதர்கள்&oldid=3312258" இருந்து மீள்விக்கப்பட்டது