உள்ளடக்கத்துக்குச் செல்

பாஸ்டர் விளைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாஸ்டர் விளைவு எனப்படுவது நொதித்தல் வினை உயிர்வளியால் தடுக்கப்படுவதாகும்.

கண்டறியப்படுதல்:

[தொகு]

இவ்விளைவு 1857இல் லூயி பாஸ்டரால் கண்டறியப்பட்டது.

விளக்கம்:

[தொகு]

ஈஸ்ட்டு பூஞ்சை ஒரு சமயத்திற்கேற்ப மாறும் காற்றிலிச் சுவாசியாகும். எனவே இது காற்றுச் சுவாசம் மற்றும் காற்றிலிச் சுவாசம் எனும் இரு வளர்சிதை மாற்ற வழிகளிலும் ஆற்றலை உண்டாக்க முடியும். உயிர்வளிச் செறிவு குறைவாக இருக்கும் போது குளுக்கோசு சிதைவு வினையின் விளைபொருளான பைருவேட் நொதித்தல் மூலம் எத்தனால் மற்றும் கார்பன் டை ஆக்சைடாக மாறும். இவ்வினையில் உருவாகும் ஆற்றல் அளவு மிகக் குறைவு - அதாவது ஓரு குளுக்கோசு மூலக்கூறுக்கு இரண்டு ATP எனும் வீதத்தில்

உயிர்வளிச் செறிவு அதிகமாக இருக்கும் போது பைருவேட் அசிட்டைல் கோஏ வாக மாறி கிரெப் சுழற்சியில் பங்கேற்கும். இவ்வினையில் அதிக ஆற்றல் உருவாகிறது - அதாவது ஒரு குளுக்கோசு மூலக்கூறுக்கு 38 ATP எனும் வீதத்தில்

ஆற்றலைக் கணக்கில் கொண்டு பார்த்தால் கிரெப் சுழற்சியில் பங்கேற்பதே ஈஸ்ட்டுக்கு நல்லது. இதனால் அதிக ஆற்றல் உருவாகி விரைவாக வளரும்.

நடைமுறை உயிர்வேதியியல்

[தொகு]

சாராயம் (எத்தனால்) தயாரிக்கும் செயல்வினை முறைகள் எல்லாம் இதனாலேயே காற்றிலா நிலையில் நிகழ்த்தப்படுகின்றன. அதேசமயத்தில் உயிர்நிறைக்காக ஈஸ்ட்டு வளர்ப்பவர்களோ நன்கு காற்றூட்டப்பட்ட நிலையில் வளர்ப்பர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாஸ்டர்_விளைவு&oldid=4128607" இலிருந்து மீள்விக்கப்பட்டது