பாவனா புண்டுலிக்ராவ் கவளி
பாவனா புண்டுலிக்ராவ் கவளி, மகாராட்டிர அரசியல்வாதி. இவர் சிவ சேனா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1973-ஆம் ஆண்டின் மே 23-ஆம் நாளில் பிறந்தார். இவர் வாசிம் மாவட்டத்தின் ரிசோடு என்னும் ஊரில் பிறந்தார். இவர் யவத்மாள்-வாசிம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]
பதவிகள்[தொகு]
கீழ்க்காணும் பதவிகளை ஏற்றுள்ளார்.[1]
- 1999: பதின்மூன்றாவது மக்களவையில் உறுப்பினர்
- 2004: பதினான்காவது மக்களவையில் உறுப்பினர்
- 2009: பதினைந்தாவது மக்களவையில் உறுப்பினர்
- மே, 2014 : பதினாறாவது மக்களவையில் உறுப்பினர்
சான்றுகள்[தொகு]
- ↑ 1.0 1.1 "உறுப்பினர் விவரம் - [[இந்திய மக்களவை]]". 2014-10-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-11-28 அன்று பார்க்கப்பட்டது.