உள்ளடக்கத்துக்குச் செல்

பால பாரதம் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

’பால பாரதம்’ சிறுவர்களுக்காக விவேகானந்தரின் ஆசியோடு டாக்டர் நஞ்சுண்டராவால் ஆரம்பிக்கப்பட்ட பத்திரிக்கை.

நஞ்சுண்டராவ்[தொகு]

டாக்டர் என்று சுருக்கமாக சுவாமி விவேகானந்தரால் அழைக்கப்பட்ட இவர் தீவிர தேச பக்தர். சுவாமி விவேகானந்தரின் சீடரான அளசிங்கரின் நண்பர். சுவாமி விவேகானந்தரின் ’பிரம்மவாதின்’ என்னும் லட்சிய பத்திரிக்கையை வெளியிடும் பொறுப்பை ஏற்றவர். சாதாரண மக்களுக்காக ’பிரபுத்த பாரதம்’ பத்திரிக்கையை சுவாமி விவேகானந்தரின் ஆசியோடு கொண்டு வர விரும்பியவர்.

பால பாரதம் (சிறுவர் பாரதம்)[தொகு]

தங்கள் மதத்தை சரியாக தெரிந்து கொண்ட இளம் தலைமுறையினர் வழிதவற மாட்டார்கள் என்ற நம்பிக்கையோடு இவர் ஆரம்பித்த சிறுவர் பத்திரிக்கையே ’பால பாரதம்’.

சிறுவர் பத்திரிக்கைக்கான தமது கருத்துக்களை சுவாமி விவேகானந்தருக்கு எழுதினார் டாக்டர் நஞ்சுண்டராவ். ’சிறுவர்களுக்கான உங்கள் பத்திரிக்கைத் திட்டத்தை நான் பூரணமாக ஆமோதிக்கிறேன், அதற்கு என்னாலானவற்றைச் செய்கிறேன்’ என்ற சுவாமி விவேகானந்தரின் பதிலைப் பெற்ற பின்னர் ’பால பாரதம்’ (சிறுவர் பாரதம்) என்ற பத்திரிக்கையை தொடங்கினார். பின்னர் அப்பத்திரிக்கை அளசிங்கரின் மருமகனார் கைக்கு மாறியது. சகோதரி நிவேதிதையிடமும் கட்டுரைகள் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன் பின் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அதன் ஆசிரியர் ஆனார்.

எனினும் பால பாரதம் விரைவில் நிறுத்தப்பட்டது. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. அளசிங்கப் பெருமாள் சுவாமி விவேகானந்தரின் அருமைச் சீடர்; ஸ்ரீராமகிருஷ்ண மடம்; பக்கம் 8,9

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பால_பாரதம்_(இதழ்)&oldid=1714161" இலிருந்து மீள்விக்கப்பட்டது