நிவேதிதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சகோதரி நிவேதிதா
Sister Nivedita

இந்தியாவில் நிவேதிதா
பிறப்பு 28 அக்டோபர், 1867
அயர்லாந்து
இறப்பு அக்டோபர் 13 1911 (அகவை 43)
டார்ஜிலிங், மேற்கு வங்காளம், இந்தியா

சகோதரி நிவேதிதா (அக்டோபர் 28, 1867 - அக்டோபர் 13, 1911),(இயற்பெயர்:மார்கரெட் எலிசபெத் நோபல்), சமூக சேவகியும் எழுத்தாளர் மற்றும் ஆசிரியையும் சுவாமி விவேகானந்தரின் முதன்மை சீடரும் ஆவார். ஆங்கில-ஐரியப் பெண்ணான இவர் 1895 ஆம் ஆண்டில் இலண்டனில் விவேகானந்தரை சந்தித்து அவருடைய கொள்கைகளால் கவர்ந்திழுக்கப்பட்டு 1898ஆம் ஆண்டு இந்தியாவில் கல்கத்தா நகருக்கு வந்தவர். மார்ச் 28, 1898 ஆம் ஆண்டு பிரம்மச்சரிய தீட்சைக் கொடுக்கும்போது விவேகானந்தர் தெய்வத்திற்கு அர்ப்பணிப்பு எனும் பொருள்படும் நிவேதிதா என்ற பெயரை அளித்தார். இவ்வாறு இந்து சமயத்தில் தீட்சை வழங்கப்பட்ட முதல் மேற்கத்திய பெண் இவராவார்.

அவரது சேவைகள்[தொகு]

சகோதரி நிவேதிதா துவங்கிய பள்ளி, பாக்பசார்,கொல்கத்தா

நவம்பர் 1898ஆம் ஆண்டில் நிவேதிதா வித்தியாலயம் என்னும் பெண்கள் பள்ளியை கல்வியறிவு மறுக்கப்பட்ட அனைத்து தரப்பினருக்குமாக துவங்கினார்.[1]

இரவீந்திரநாத் தாகூர், சகதீச சந்திர போசு முதலானவர்களுடன் மிகுந்த நண்பராக இருந்தார். இந்தியாவின் கலை புரிதலுக்கு மிகவும் துணை புரிந்துள்ளார்.

பின்னாளில் அரவிந்தருடன் இணைந்து இந்திய விடுதலை இயக்கத்திலும் பங்கேற்றார். தனது இந்த ஈடுபாட்டினால் ஆங்கில அரசு இராமகிருஷ்ண இயக்கத்தை முடக்காமல் இருக்க அவ்வியக்கத்தில் இருந்து தன் அதிகாரபூர்வ பிணைப்பை விலக்கிக் கொண்டார்.

அக்டோபர் 13, 1911 அன்று டார்ஜிலிங்கில் மரணமடைந்தார்.

சில நிகழ்வுகள்[தொகு]

மகாகவி பாரதியார் இவரைத் தமது குருவாகக் குறிப்பிடுவார். ஒரு முறை, பாரதியார் சகோதரி நிவேதிதாவை சந்தித்தபோது, அவரது மனைவியை அழைத்து வரவில்லையா என பாரதியாரிடம் கேட்டுள்ளார். அதற்கு பாரதியார், தான் அவரை வெளியில் எங்கும் அழைத்துச் செல்வதில்லை என குறிப்பிட்டார். இதை அறிந்த சகோதரி நிவேதா, பாரதியாரிடம், 'உங்கள் மனைவிக்கே நீங்கள் சம உரிமையும், விடுதலையும் கொடுப்பதில்லை. இந்நிலையில், நீங்கள் நாட்டுக்கு எவ்வாறு விடுதலை பெற்றுத்தர போகிறீர்கள்', என்று கேட்டார். இந்த உரையாடல் தான் பாரதியாரின் பெண்கள் பற்றிய சிந்தனையையே மாற்றி, பெண்ணுரிமைக்காக போராட தூண்டுகோலாக இருந்ததாம்.[சான்று தேவை]

மேலும் படிக்க[தொகு]

  • en:wikisource|The Complete Works of Swami Vivekananda/Volume 9/Excerpts from Sister Nivedita's Book
  • India’s 50 Most Illustrious Women (ISBN 81-88086-19-3) இந்திரா குப்தா

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sister Nivedita School". பார்த்த நாள் 2009-03-12.
"http://ta.wikipedia.org/w/index.php?title=நிவேதிதா&oldid=1595070" இருந்து மீள்விக்கப்பட்டது