அளசிங்கப் பெருமாள்
அளசிங்கப் பெருமாள் | |
---|---|
பிறப்பு | 1865 சிக்கமகளூர் |
இறப்பு | மே 11, 1909 (அகவை 43–44) |
இயற்பெயர் | மண்டியம் சக்கரவர்த்தி அளசிங்கப் பெருமாள் |
தேசியம் | இந்தியா |
தத்துவம் | வேதாந்தம் |
குரு | சுவாமி விவேகானந்தர் |
அளசிங்கப் பெருமாள் (1865-1909) என்பவர் சுவாமி விவேகானந்தரின் அருமைச் சீடர் ஆவார். இவர் சுவாமி விவேகானந்தரை அமெரிக்காவிற்கு அனுப்புவதற்காக நிதி திரட்டியவர்களுள் ஒருவர். சுவாமி விவேகானந்தர் சிகாகோ மாநாடு ஆரம்பிப்பதற்கு ஒரு மாதத்திற்கும் முன்னதாகவே அமெரிக்காவிற்கு சென்று விட்டதால் நிதி பற்றாக்குறை ஏற்பட்டது. சுவாமி விவேகானந்தர்,’பட்டினி கிடக்கிறேன்; பணம் செலவாகிவிட்டது. திரும்பி வருவதற்காவது பணம் அனுப்பு’ என்று 1893 ஆகஸ்ட் 20 அன்று தமது சென்னை இல்லறச் சீடர் அளசிங்கப் பெருமாளுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்[1]. நிலைமையை சீர்செய்ய மாதம் 70 அல்லது 80 ரூபாய் சம்பளம் மட்டுமே பெற்ற அளசிங்கர், ஒரு வியாபாரியிடம் ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினார். தன் மனைவியின் நகைகளை விற்றார். விரைவுத் தந்தியில் 1100 ரூபாயை சுவாமி விவேகானந்தருக்கு அனுப்பினார்.[2][3]
மே 11, 1909 அன்று தனது நாற்பத்தி நான்காவது வயதில் மரணமடைந்தார்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "20 August 1893 letter". Ramakrishna—Vivekananda Info. பார்க்கப்பட்ட நாள் 16 மே 2013.
- ↑ அளசிங்கப் பெருமாள் சுவாமி விவேகானந்தரின் அருமைச் சீடர்; ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை; பக்கம் 108
- ↑ "The man who made it possible: Vivekananda's Chicago visit". Madra Musings. 1—15. Archived from the original on 14 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 14 May 2013.
{{cite web}}
: Check date values in:|date=
and|year=
/|date=
mismatch (help); Unknown parameter|month=
ignored (|date=
suggested) (help) - ↑ The Vedanta Kesari. Sri Ramakrishna Math. 2007. p. 304. பார்க்கப்பட்ட நாள் 13 மே 2013.