பால்போர் சாற்றுதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பால்போர் பிரகடனம்
பால்போர் பிரகடனம்
பால்போர் பிரகடனம்
உருவாக்கப்பட்டது 2 நவம்பர் 1917
இடம் இங்கிலாந்து (பிரித்தானியா)
கைச்சாத்திட்டோர் ஆர்த்தர் சேம்சு பால்போர்
நோக்கம் யூத மக்களுக்கு தாய் நாடு பாலத்தீன நிலத்தில் உருவாக மேதகு பேரரசரின் (பிரித்தானிய) அரசின் உருதுணையை உறுதி செய்தல்.

பால்போர் சாற்றுதல் (Balfour Declaration) அல்லது பால்போர் பிரகடனம் என்பது 1917 நவம்பர் 2 அன்று அப்போதைய பிரித்தானிய அரசின் வெளியுறவு அமைச்சர் ஆர்த்தர் சேம்சு பால்போர் பிரித்தானிய யூதர்களின் தலைவர் வால்டர் ரோத்சுசைல்டுக்கு எழுதிய மடலைக் குறிக்கும். இதில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது:

மேதகு பேரரசரின் அரசு பாலத்தீன நிலத்தில் யூதர்களுக்கு நாடு அமைக்க ஆதரவாகவுள்ளது. நாடு அமைக்கும் நன்முயற்சிக்கு வழி வகை செய்ய ஆதரவாக இருப்பதாக முடிவெடுத்துள்ளது. பாலத்தீனத்தில் உள்ள யூத சமூகம் அல்லாதவர்களின் மத விவகாரம் பாதிக்கப்படாது என்று உறுதியாக நம்பப்படுகிறது, அது போலவே மற்ற நாடுகளில் உள்ள யூதர்களின் உரிமையும் அரசியல் நிலையும் பாதிக்காது என நம்புகிறது.[1][2]}

இந்த மடல் ஒரு வாரம் கழித்து 9 நவம்பர் 1917 அன்று நாளேடுகளில் வெளியிடப்பட்டது. பால்போர் சாற்றுதல் என்பது பின்பு ஒட்டாமான் பேரரசுடன் ஏற்பட்ட அமைதி உடன்படிக்கையிலும் பாலத்தீன நில உரிமையிலும் பயன்படுத்தப்பட்டது. சாற்றுதலின் உண்மைப்படிவம் பிரித்தானிய நூலகத்தில் பாதுகாக்கப்படுகிறது.

மெக்காவின் செரிப் உசைன் இபின் அலி அல் அசிமியும் மற்ற அரபு தலைவர்களும் இச்சாற்றுதல் மெக்மோகன் உசைன் கடிதப்போக்கிற்கு மாறாக உள்ளதாகக் கருதினர். இந்தக் கடிதப்போக்குவரத்தில் பாலத்தீன் பற்றி தனியாக குறிப்பிடப்படவில்லை, மேலும் அரபுக்கள் முழுவதும் இல்லாத நிலப்பகுதிகளும் மெக்மோகன் உசைன் மடலாடல்களில் குறிப்பிடப்படவில்லை. எனினும் வரலாற்று ரீதியில் பாலத்தீனம் சிரியாவின் ஒரு பகுதியாக விளங்கியது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Balfour Declaration". 2013. http://www.mfa.gov.il/mfa/foreignpolicy/peace/guide/pages/the%20balfour%20declaration.aspx. 
  2. Malcolm Yapp (1 September 1987). The Making of the Modern Near East 1792–1923. Harlow, England: Longman. பக். 290. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-582-49380-3. https://archive.org/details/makingofmodern00yapp. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்போர்_சாற்றுதல்&oldid=3582508" இருந்து மீள்விக்கப்பட்டது