உள்ளடக்கத்துக்குச் செல்

பாலன் (நக்சலைட் தலைவர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தருமபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாயில் அமைக்கப்பட்டுள்ள பாலன, அப்பு ஆகியோரின் நினைவுச் சின்னம் மற்றும் சிலைகள்
பாலன, அப்பு ஆகியோரின் நினைவுச் சின்னத்தில் பதிக்கப்பட்டுள்ள கல்வெட்டு

பாலன் இடதுசாரி தீவிரவாத இயக்கத்தைச் சார்ந்தவர். தமிழ் நாட்டின் தருமபுரி மாவட்டத்தில் 1977ல் உருவான நக்சலைட் இயக்கத்தை முன்னின்று வழிநடத்திய இருதலைவர்களில் ஒருவர். இன்னொருவர் அப்பு. சீரியம் பட்டி என்ற கிராமத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்களிடையே பொதுக்கூட்டத்தில் உரையாடிக் கொண்டிருந்தபோது காவல் துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டார். மேடையிலேயே கைதுசெய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டு, அடித்து உதைத்து எலும்புகள் நொறுக்கப்பட்டது. தப்பியோட முயன்றபோது விழுந்து அடிபட்டதாக சொல்லி மருத்துவ மனையில் சேர்த்தனர்.[1]

உடல் சற்று தேறிய நிலையில் 1980 செப்டெம்பர் 17 அன்று வால்டர் தேவாரம் தலைமையிலான போலீஸ் படையால் சென்னையில் கைதுசெய்யப்பட்டார். இவர் நீண்ட சித்திரவதைக்குப்பின்னர் கொல்லப்பட்டார் என்று கூறப்டுகிறது. இன்றும் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலிலேயே இருக்கிறார்கள். இவர்களின் நினைவுச்சின்னம் இப்போது நாயக்கன் கொட்டாய் என்ற ஊரில் உள்ளது. இடதுசாரிகளால் செப்டெம்பர் 17 அன்று இவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது

மேற்கோள்கள்[தொகு]

  1. மக்களின் துணையோடு மரணத்தை வென்றேன், புலவர் கலியபெருமாள், பக்.109
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலன்_(நக்சலைட்_தலைவர்)&oldid=3360341" இலிருந்து மீள்விக்கப்பட்டது