பாலகிருட்டிணபுவா இச்சல்கரஞ்சிகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாலகிருட்டிணபுவா இச்சல்கரஞ்சிகர்
பிறப்பு1849
பிறப்பிடம்மகாராட்டிரம், இந்தியா
இறப்பு1926 (வயது 77)
இசை வடிவங்கள்இந்துஸ்தானி இசை
தொழில்(கள்)இந்திய பாரம்பரிய இசையை பாடுதல்
இசைத்துறையில்1867–1920

பாலகிருட்டிணபுவா இச்சல்கரஞ்சிகர் (Balakrishnabuwa Ichalkaranjikar) (1849-1926) இவர் பாரம்பரிய இந்துஸ்தானி இசையின் கியால் வகையின் இந்தியப் பாடகர் ஆவார். குவாலியர் கரானாவை (பாடும் பாணி) கற்றுக் கொண்டு அதை மகாராட்டிராவிற்கு கொண்டு வந்தார். [1]

ஆரம்பகால வாழ்க்கையும் பின்னணியும்[தொகு]

பாலகிட்டிணபுவா இச்சல்கரஞ்சிகர் மகாராஷ்டிராவில் பிறந்தார். இவர் இந்திய பாரம்பரிய இசையின் கயல் வகையின் மெக்காவான குவாலியருக்குப் பயணம் செய்தார். மேலும் வாசுதோராவ் ஜோசியின் கீழ் கற்றுக்கொண்டார். பின்னர் மகாராட்டிரா திரும்பினார். மீரஜ் அருகில் வசித்து வந்தார்.

சீடர்கள்[தொகு]

இவரது பிரதான சீடர்களில் நீலகாந்த்புவா மிராஜ்கர், விஷ்ணு திகம்பர் பலூசுகர், தனது மகன் அன்னபுவா, அனந்த் மனோகர் ஜோசி (அந்து-புவா), மிராஷி புவா , வாமன்புவ சாபேகர் ஆகியோர் அடங்குவர். அன்னபுவா இவருக்கு முன்னரே இறந்து போனார். மகனின் மரணம் அவரது இறுதி ஆண்டுகளில் அவருக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது.

குறிப்புகள்[தொகு]

  1. Susheela Misra (1981). Great masters of Hindustani music. Hem Publishers. பக். 71. https://books.google.com/books?id=Li4uAAAAMAAJ. பார்த்த நாள்: 17 July 2013.