மிராஷி புவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மிராஷி புவா (Mirashi Buwa) என்று பொதுவாக அறியப்படும் யசுவந்த் சதாசிவ புவா (1883 - 1966 சனவரி 5) இவர் ஓர் இந்திய காவியப் பாடகரும் காயல் -பாணியின் இந்துஸ்தானி இசைப் பாடகருமாவார் . விஷ்ணு திகம்பர் பலூசுகருடன் குவாலியர் கரானாவின் பாலகிருட்டிணபுவா இச்சல்கரஞ்சிகரின் (1849-1926) புகழ்பெற்ற சீடராக இருந்தார். [1] [2] இவர் வேகமான குரலுக்காக அறியப்பட்டார். இவர் ஒரு நடிகராகவும் இருந்தார். மேலும் சங்கீத நாடகம், மராத்தி நாடகம் போன்ற பலவற்றில் நடித்துள்ளார் .

சுயசரிதை[தொகு]

இவர் மகாராட்டிராவின் தற்போதைய கோலாப்பூர் மாவட்டத்தில் இச்சல்கரஞ்சியில் 1883 இல் பிறந்தார். [3] 1911 முதல் 1932 வரை புனேவில் உள்ள "நாட்டியகலா பிரவர்தக் மண்டலி" என்ற நாடக நிறுவனத்தில் பணிபுரிந்தார். மேலும் ஏராளமான சீடர்களுக்கு இசையையும் கற்றுக் கொடுத்தார்.

1961 ஆம் ஆண்டில், இந்தியாவின் தேசிய இசை, நடனம் மற்றும் நாடக அகாதமியான சங்கீத நாடக அகாதமி தனது சங்கீத நாடக அகாதமி விருதினை இவருக்கு வழங்கியது. [4]

இவர் 1966 சனவரி 5இல் இறந்தார். [5]

சீடர்கள்[தொகு]

இவரது குறிப்பிடத்தக்க சீடர்களில் விநாயக்புவா உத்தர்கர், யசுவந்த்புவா ஜோசி மற்றும் மும்பையைச் சேர்ந்த ராஜரம்புவ பரட்கர் ஆகியோர் அடங்குவர் . [1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 Jeffrey Michael Grimes (2008). The Geography of Hindustani Music: The Influence of Region and Regionalism on the North Indian Classical Tradition. ProQuest. பக். 134. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-109-00342-0. https://books.google.com/books?id=8eoNVmfGBLoC&pg=PA134. பார்த்த நாள்: 17 July 2013. 
  2. Bonnie C. Wade (1984). Khyāl: Creativity Within North India's Classical Music Tradition. CUP Archive. பக். 42–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-25659-9. https://books.google.com/books?id=MiE9AAAAIAAJ&pg=PA42. பார்த்த நாள்: 17 July 2013. 
  3. Durga Das Pvt. Ltd (1985). Eminent Indians who was who, 1900-1980, also annual diary of events. Durga Das Pvt. Ltd.. பக். 368. https://books.google.com/books?id=bLEZAAAAYAAJ. பார்த்த நாள்: 17 July 2013. 
  4. "SNA: List of Akademi Awardees". Sangeet Natak Akademi Official website. Archived from the original on 2015-05-30.
  5. Eminent Indians who was who, 1900-1980, also annual diary of events. Durga Das Pvt. Ltd.. https://books.google.com/books?id=bLEZAAAAYAAJ. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிராஷி_புவா&oldid=3074226" இலிருந்து மீள்விக்கப்பட்டது