உள்ளடக்கத்துக்குச் செல்

பாய் மன்வீர் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாய் மன்வீர் சிங் (Bhai Manvir Singh) இந்தியாவைச் சேர்ந்த ஒரு சீக்கிய அறிஞர் மற்றும் கலைஞர் ஆவார். [1] 1985 ஆம் ஆண்டு இவர் பிறந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

பாய் மன்வீர் சிங் 1985 ஆம் ஆண்டு ஆக்சுபோர்டுசையரில் பிறந்தார். [2] [3] கிங்சு கல்லூரியின் கூட்டிணைப்பில் சமயப் படிப்புகள் மற்றும் தத்துவத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். சீக்கிய ஆய்வுகளில் முதுகலை தத்துவப் பட்டமும் பெற்றார். [2] [3] இவரது கல்விப் பணி சீக்கிய வரலாறு, தத்துவம் மற்றும் மானுடவியல் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது. [2]

முன்னதாக, சிங் ஐக்கிய இராச்சிய சீக்கியக் குழுவிலும் பிரிட்டன் பஞ்சாபிகள் அனைத்து நாடாளுமன்றக் குழுவிலும் உறுப்பினராக இருந்தார். [2] இந்த அமைப்புகளில் இவரது ஈடுபாடு சீக்கிய சமூக விவகாரங்களில் இவருக்கு இருந்த ஆர்வத்தை பிரதிபலித்தது. [2]

ஐரோப்பிய ஒன்றியத்துடனான பிரெக்சிட்டின் தாக்கம் குறித்தும் ஐரோப்பா கண்டத்தில் சீக்கிய சமூகம் எதிர்கொள்ளும் சவால்களை குறித்தும் சிங் ஆய்வு செய்தார். [2] ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள சீக்கிய சமூகம், பிரிட்டனில் உள்ள அவர்களது சகாக்களுடன் ஒப்பிடும்போது, அரசியல் அமைப்புகளில் குறைவாகவே ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர். இது பிரெக்சிட்டிற்குப் பிந்தைய சிரமங்களுக்கு வழிவகுக்கும் என்று அவர் வாதிட்டார். [2] இந்த நிகழ்வில் சிங்கின் கருத்துக்கள் மற்றும் ஆராய்ச்சிகள் பிரித்தானிய மற்றும் சீக்கிய ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன. [2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Bhai Manvir Singh - SikhNet Play".
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 "The Effects of the divorce between the European Union and Britain on the lives of the Sikh Community". March 24, 2022.
  3. 3.0 3.1 "A bright light in a spiritually dim society". March 12, 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாய்_மன்வீர்_சிங்&oldid=3844108" இலிருந்து மீள்விக்கப்பட்டது