பாப்ஸி ஜெயின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தனது புத்தகங்களுடன் பாப்ஸி ஜெயின்

பாப்ஸி ஜெயின், மேற்கு வங்காளத்தின் கல்கத்தாவைச் சேர்ந்த இந்திய தொழிலதிபர் மற்றும் லக்கி எவ்ரிடே என்ற நாவலின் ஆசிரியரும் ஆவார், ஆச்சரியமான வாழ்க்கைச் சவால்களை எதிர்கொள்ளும் ஒரு பெண்ணின் ஆன்மீகப் பயணத்தைச் சித்தரிக்கும் வகையில் இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது. [1]

வாழ்க்கை வரலாறு[தொகு]

பாப்ஸி ஜெயின், இந்தியாவின் கல்கத்தாவில் உள்ள தொழிலதிபரின் குடும்பத்தில் பிறந்தவர். தமிழ்நாட்டின் கொடைக்கானலில் உள்ள பிரசன்டேஷன் கான்வென்ட்டில் பள்ளிப் படிப்பை முடித்த இவர், மஹாராஷ்டிரத்தின் மும்பையில் உள்ள சிடன்ஹாம் வணிகவியல் மற்றும் பொருளாதாரக் கல்லூரியில் கல்லூரிப்படிப்பை முடித்துள்ளார். தொடர்ந்து நிதித்துறையில் கணக்கு தணிக்கை கல்வியைக் கற்க ஐக்கிய ராச்சியத்திற்கு சென்று படித்து முடித்து இங்கிலாந்து & வேல்ஸில் உள்ள பட்டயக் கணக்காளர்களின் நிறுவனத்தில் உறுப்பினராகியுள்ளார்.

1985 ம் ஆண்டு நவம்பர் 23 ம் தேதியில் நிதிஷ் ஜெயின் என்பவரை மணந்துள்ளார். இத்தம்பதியினருக்கு  இரண்டு மகன்கள் உள்ளனர். துபாய், மும்பை, சிங்கப்பூர் மற்றும் சிட்னியில் எஸ்பி ஜெயின் ஸ்கூல் ஆஃப் குளோபல் மேனேஜ்மென்ட் என்ற பெயரில் பாப்சி மற்றும் நிதிஷ் ஜெயின் இருவரும் இணைந்து வணிகப் பள்ளிகளை அமைத்து நடத்தி வருகின்றனர். மருத்துவக் காரணங்களுக்காகப் பெரும்பாலான நேரத்தைப் படுக்கையிலே கழித்ததால் எழுதத் தொடங்கிய இவர், முதலாவதாக லக்கி எவ்ரிடே என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

எழுத்து வாழ்க்கை[தொகு]

பத்து வருடங்களாக எழுதப்பட்டு, அறிமுகப் புத்தகமாக பென்குயின் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட தி பிளைண்ட் பில்கிரிம், இந்தியாவில் அதிகம் விற்பனையானதைத் தொடர்ந்து, மார்ச் 2009 ம் ஆண்டில், இப்புத்தகத்தின் உலகளாவிய உரிமையை பென்குயின் பதிப்பகம் பெற்றது, அதன்பின்பே லக்கி எவ்ரிடே என்று புதிய தலைப்பிட்டு இந்தப் புத்தகத்தை உலகம் முழுவதும் வெளியிட்டது. 2015 ஆம் ஆண்டில் அவர் எ ஸ்டார் கால்டு லக்கி என்ற தலைப்பில் அதன் இரண்டாம் பாகத்தையும் வெளியிட்டார். பப்ளிஷர்ஸ் வீக்லி இவரது முதல் நாவலை "அதிகப்படியான தகவல்களால் நிரம்பியது" என்றும், அதன் முடிவை "ஏமாற்றமளிக்கிறது" என்றும் விமர்சித்தது, ஆனால் இதன் இரண்டாம் பாகத்தை மென்மையாகவே விமர்சித்துள்ளது. [2] [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Lucky Everyday Invokes a Spirit of Resilience for Today's Challenging World - Bapsy Jain's Novel Named Bestseller by Mike Bryan, CEO and President, Penguin Books". prweb.com. 26 January 2010. பார்க்கப்பட்ட நாள் 1 June 2012.
  2. "Lucky Everyday: Bapsy Jain, Author. Penguin $14 (309p) ISBN 978-0-14-311535-9". Publishers Weekly. 6 April 2009. https://www.publishersweekly.com/9780143115359. 
  3. "A Star Called Lucky: Bapsy Jain. Vook, $11.99 trade paper (246p) ISBN 978-1-63295424-4". Publishers Weekly. 27 April 2015. https://www.publishersweekly.com/9781632954244. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாப்ஸி_ஜெயின்&oldid=3680907" இலிருந்து மீள்விக்கப்பட்டது