உள்ளடக்கத்துக்குச் செல்

பாபிலோன் (மென்பொருள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாபிலோன்
உருவாக்குனர்பாபிலோன் நிறுவனம்.
அண்மை வெளியீடு7.0.0 / 11 அக்டோபர் 2007
இயக்கு முறைமைவிண்டோஸ்
மென்பொருள் வகைமைமொழிபெயர்ப்பு
உரிமம்Proprietary
இணையத்தளம்பாபிலோன்

பாபிலோன் சுட்டி (மவுஸ்) இன் துணைகொண்டு சொற்களை மொழிபெயர்ப்பதும் அகராதி வசதி கொண்டதுமான ஒரு மென்பொருள் ஆகும். இதைப் பொதுவாக சொற்களைப் புரிந்து கொள்ளும் (OCR) தொழில்நுட்பமூடாக ஆங்கிலம் உட்பட பல ஐரோப்பிய மொழிகளை உணர்ந்துகொள்ளும் என்றாலும் தமிழ்மொழியை இன்றுவரை சரியாகச் சொற்களைப் புரிந்துகொள்ளாது. இம்மென்பொருளானது ஏறத்தாழ எல்லா விண்டோஸ் பிரயோகங்களிலுமே வேலைசெய்யும் எனினும் அடோபி அக்ரோபாட் PDF கோப்புக்களில் நகலெடுக்கப்படுவது தடைசெய்யப்பட்டிருந்தால் இதுவும் வேலை செய்யாது. இதை உயிர்பூட்டியதும் (Activate) திரையில் சிறியதோர் சாளர்ரத்தில் (விண்டோஸ்) அதன் பொருளை விளக்குவதாகவோ அல்லது மொழிபெயர்ப்பையோ காட்டும். புதிய 7 வது பதிப்பில் இருந்து தமிழ் உட்பட ஏறத்தாழ எல்லா இந்தியமொழிகளிலுமே ஒருங்குறி முறையில் அகராதியை உருவாக்குவது சாத்தியம் ஆகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாபிலோன்_(மென்பொருள்)&oldid=2159684" இலிருந்து மீள்விக்கப்பட்டது