பாத்ஷாஹி நினைவு மண்டபம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாத்ஷாஹி நினைவு மண்டபம்
உள்ளூர் பெயர் அஷூர்கானா
பாத்ஷாஹி நினைவு மண்டபம்
அமைவிடம்ஐதராபாத்து, இந்தியா
கட்டப்பட்டது1594

பாத்ஷாஹி நினைவு மண்டபம் ( Badshahi Ashurkhana ) ன்பது இந்தியாவின் ஐதராபாத்தில் உள்ள சார்மினார் அருகே உள்ள நினைவு சடங்குகளின் துக்கத்திற்கான ஒரு கூட்ட மண்டபமாகும். இது இமாம் உசேனின் தியாகத்தின் நினைவாக கட்டப்பட்டது. இது முஃகர்ரமின் துக்க காலத்தில் பயன்படுத்தப்படுகிறது. [1]

அஷுர்கானா, இமாம்பர்கா அல்லது இமாம்பரா என்றும் அழைக்கப்படும் இது சியா முஸ்லிம்களின் நினைவு விழாக்களுக்கான ஒரு சபை மண்டபமாகும். குறிப்பாக முஃகர்ரம் துக்கத்துடன் தொடர்புடையது.[2] இதன் பெயர் முகம்மது நபியின் பேரனான உசேன் இப்னு அலி என்பவரிடமிருந்து பெறப்பட்டது.[3]

இது இப்போது ஒரு பாரம்பரிய தளமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மூதாதையரின் பரம்பரை முத்தவல்லி முஜாவர் மிர் நவாஜிஷ் அலி மூஸ்வி 11 தலைமுறை பாதுகாவலராக இருக்கிறார். இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் கீழ் பராமரிக்கப்படுகிறது.

வரலாறு[தொகு]

இது சார்மினார் கட்டிய மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 1594இல் முஹம்மது குலி குதுப் ஷா அவர்களால் கட்டப்பட்டது.  1611ஆம் ஆண்டில் அப்துல்லா குதுப் ஷாவின் கீழ் அற்புதமான வண்ண ஓடு-மொசைக் அலங்காரம் முடிக்கப்பட்டது. அதேசமயம், 1764ஆம் ஆண்டில் இரண்டாம் நிசாம் அலி கான் என்பவரால் மரக் கொலோனேடுகள், வெளிப்புற அரங்குகள், நுழைவு வாயில்கள் ஆகியன சேர்க்கப்பட்டன. [4]

நினைவுச்சின்னம்[தொகு]

இங்கு நியாஸ் கானா (பிரசாதம் வழங்கும் இடம்), நகார் கானா (முரசு இசைக்குமிடம்), சராய் கானா ( பக்தர்கள் ஓய்வெடுக்குமிடம் ) அப்தார் கானா (குடிநீர் வழம்க்குமிடம்), லங்கர் கானா (உணவு பரிமாறும் இடம்), மாகன்-இ-முஜாவர் ( முஜாவர் குடியிருப்பு), தப்தார்-இ-முஜாவர் (முஜாவர் அலுவலகம்), அலவா சபுத்ரா, காவலர் அறை போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடம் நான்கு நூற்றாண்டுகளுக்குப் பிறகும் பளபளப்பான மற்றும் துடிப்பான வண்ணங்களைத் தக்கவைத்துள்ள பற்சிப்பி ஓடுகளுடன் இன்றும் நிற்கிறது. அறுகோணங்களில் உள்ள சிக்கலான வடிவமைப்பு நேர்த்தியானக் காணப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Badshahi Ashurkhana
என்பதின் ஊடகங்கள் உள்ளன.