பாதுகாப்பு அடையாள விண் பகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாதுகாப்பு அடையாள விண் பகுதி (ADIZ- Air Defense Identification Zone) என்பது அந்நிய விண் ஊர்திகள் தங்களது விண் எல்லையைக் கடக்கும் பொழுது அவ்வூர்திகளின் அடையாளத்தைத் தெரியப்படுத்தும் விதத்தில் சில தகவல்களை அளிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை ஒரு நாடு விதித்திருக்கும் பகுதியாகும். அதாவது ஒரு நாட்டின் எல்லைக்குள் இருக்கும் விண் பகுதியில் மற்றொரு நாட்டின் விண் ஊர்திகள் பறப்பதற்கு முன் அல்லது பறக்கும் பொழுது சில நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் அல்லது இசைவு பெற வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருக்கும் விண் பகுதியே பாதுகாப்பு அடையாள விண் பகுதி ஆகும்.

உலக வரைபடத்தில் புவியியல் என்றும் அரசியல் என்றும் இரண்டு வேறுபாடுகளை நாம் பார்த்திருக்கிறோம். புவியியல் என்பது இயற்கையானது. அரசியல் என்பது மனிதன் உருவாக்கியது. மனிதனின் ஆளுமையின் திறனே அரசியல் எல்லைகளை முடிவு செய்கிறது. அந்த எல்லைகளைப் பூமியுடன் நிறுத்திக்கொள்ளாமல் விண்வெளியிலும் வரையறுத்துக் கொண்டதன் விளைவே பாதுகாப்பு அடையாள விண் பகுதி ஆகும். உலகில் உள்ள பெரும்பாலும் அனைத்து நாடுகளுமே இது போல் தங்களுக்கென்று தனித் தனி பாதுகாப்பு அடையாள விண் பகுதிகளைக் கொண்டுள்ளன.