பாதர் விரைவு இரயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாதர் விரைவு இரயில்
Badar Express
கண்ணோட்டம்
வகைநகரங்களிடை இரயில்
முதல் சேவை1986
நடத்துனர்(கள்)பாக்கித்தான் இரயில்வே
வழி
தொடக்கம்லாகூர் சந்திப்பு
முடிவுபைசலாபாத் சந்திப்பு
ஓடும் தூரம்140 கிலோமீட்டர்
சராசரி பயண நேரம்2 மணி, 15 நிமிடங்கள்
சேவைகளின் காலஅளவுதினசரி
தொடருந்தின் இலக்கம்111யுபி (லாகூர்→பைசலாபாத்)
112டி என் (பைசலாபாத்→லாகூர்)
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)சிக்கனம்
படுக்கை வசதிஇல்லை
உணவு வசதிகள்இல்லை
தொழில்நுட்பத் தரவுகள்
பாதை1676 மி.மீ
பாதை உரிமையாளர்பாக்கித்தான் இரயில்வே

பாதர் விரைவு இரயில் (Badar Express) லாகூருக்கும் பைசலாபாத்துக்கும்[1] இடையில் செல்லும் பயணிகள் இரயில் ஆகும். பாக்கித்தான் இரயில்வே நிர்வாகம் இந்த பயணிகள் இரயிலை இயக்குகிறது. இரு நகரங்களுக்கிடையிலான 140 கிலோமீட்டர் (87மைல்) தொலைவை இந்த இரயில் தோராயமாக 2 மணி 15 நிமிடங்களில் கடக்கிறது. பாக்கித்தானின் பிரதானமான இரயில் வழித்தடங்களில் ஒன்றான கராச்சி-பெசாவர் இரயில் பாதை, சாக்தாரா பாக் – சாங்லா மலை கிளைப்பாதை, கானேவால்-வாசிராபாத் நீட்சிப் பாதைகளில் பாதர் விரைவு இரயில் பயணம் செய்கிறது.

பாதை[தொகு]

  • லாகூர் சந்திப்பு-சாக்தாரா பாக் சந்திப்பு : வழி: கராச்சி-பெசாவர் இரயில் பாதை '
  • சாக்தாரா பாக் சந்திப்பு-சாங்லா மலை சந்திப்பு: வழி: சாக்தாரா பாக் சந்திப்பு-சாங்லா மலை கிளை பாதை'
  • சாங்லா மலை சந்திப்பு-பைசலாபாத் சந்திப்பு, வழி: கானேவால்-வாசிராபாத் கிளை பாதை

நிறுத்தங்கள்[தொகு]

  • லாகூர் சந்திப்பு
  • குயிலா சேக்புரா
  • பாருக் அபாத்
  • பாகாலைக்
  • சாப்தராபாத்
  • சாங்லா மலை சந்திப்பு
  • சாக் சும்ரா சந்திப்பு
  • பைசலாபாத் [2]

வசதிகள்[தொகு]

சிக்கனக் கட்டணச் சேவையாக இப்பயணிகள் இரயில் இயக்கப்படுகிறது >.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாதர்_விரைவு_இரயில்&oldid=3370759" இலிருந்து மீள்விக்கப்பட்டது