பாடி மாதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாடி மாதா/சமரியா மாதா (Badi Mata)[1][2][3] என்பவர் நோய்களிலிருந்து சுகமாக்கும் ஓர் இந்து தெய்வம்.பாடி மாதா, இது போன்ற ஏழு சகோதரி தெய்வங்களின் குழுவில் ஒன்றாகும். சாமரிய மாதா/பாடி மாதா சமர்களுடன் நட்பு கொண்டவர் ஆவார்.[3][2][1] சகாரியா, சாமர் மற்றும் கமர் போன்ற சில பழங்குடியினரால் பாடி மாதா வழிபடப்படுகிறது.[4][5] இவரது கோபம் மக்களைப் பெரியம்மை நோயால் பாதிக்கச் செய்கிறது என்று இவரை வணங்குபவர்கள் நம்புகிறார்கள்.[5] மாதாவை வழிபடுபவர்கள் மாதாவினைக் கோபத்திலிருந்து சமாதானப்படுத்த ஆடுகளைப் பலியிடுகிறார்கள்.[4]

பாடி மாதாவின் சகோதரிகள் சீத்தலா தேவி, புல் மாதா, பன்சாகி மாதா, குசுலியா மாதா, கன்கர் மாதா மற்றும் மல்பால்.[6] இவர் சின்னம்மையுடன் தொடர்புடைய சோட்டி மாதா மற்றும் தட்டம்மை நோயுடன் தொடர்புடைய சென்ட்ரி மாதா ஆகியோருடன் தொடர்புடையவர்.[7]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாடி_மாதா&oldid=3880268" இலிருந்து மீள்விக்கப்பட்டது