பாஜன்சு-சாடி கதிரியக்க இடப்பெயர்ச்சி விதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Displacements resulting from various decay modes of a radionuclide. Horizontal axis: atomic number Z. Vertical axis: neutron number N

அணுக்கருவியலில் கதிரியக்க இடப்பெயர்ச்சி விதி (law of radioactive displacements) அல்லது பாஜன்சு-சாடி விதி (Fajans and Soddy law) என்பது கதிரியக்கத்தின் போது தனிமங்களின் அணுக்கரு மாற்றம் நிகழவை வரையறுக்கும் விதி ஆகும். பிரடெரிக் சாடி, காசிமிர் பாயன்சு ஆகியோர் தனித்தனியே 1913 ஆம் ஆண்டில் இவ்விதியைக் கண்டுபிடித்தனர்.[1][2]

ஒரு குறிப்பிட்ட வகை கதிரியக்கத்தின் போது எவ்வகையான தனிமம், மற்றும் ஓரிடத்தான் தோற்றுவிக்கப்படுகின்றன எனபதை இவ்விதி கூறுகிறது:

  • அல்ஃபா சிதைவு ஒன்றின் போது, அதாவது, கதிரியக்கமுடைய தனிமங்கள் α துகள் ஒன்றினை உமிழும் போது அது தனிம அட்டவணையில் இரு கட்டம் பின் செல்லும். அதன் அணு எண் ஆனது 2 ஆலும், திணிவெண் 4 ஆலும் குறைகிறது, எ+கா:
  • பீட்டா சிதைவு ஒன்றின் போது, அதன் திணிவெண் மாறாமல், அணுவெண் 1 ஆல் கூடி, தனிம அட்டவணையில் ஒரு கட்டம் முன் செல்லும். எ+கா:
  • பாஜன்சு, சாடி ஆகியோர் இவ்விதியை 1913 இல் முன்மொழிந்த காலத்தில் β சிதைவு மட்டுமே (இலத்திரன் உமிழ்வு) கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. பின்னர், 1930களில், β+ சிதைவு (பொசித்திரன் உமிழ்வு) கண்டுபிடிக்கப்பட்டது, இதன் போது அணுவெண் 1 ஆல் குறைகின்றது, எ+கா:

மேற்கோள்கள்[தொகு]

  1. Kasimir Fajans, "Radioactive transformations and the periodic system of the elements". Chemische Berichte|Berichte der Deutschen Chemischen Gesellschaft, Nr. 46, 1913, p. 422–439
  2. Frederick Soddy, "The Radio Elements and the Periodic Law", Chem. News, Nr. 107, 1913, p.97–99