பாசுபோமாலிப்டிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாசுபோமாலிப்டிக் அமிலம்
பெயர்கள்
வேறு பெயர்கள்
மாலிப்டோபாசுபாரிக் அமிலம்; பன்னிருமாலிப்டோ பாசுபாரிக் அமிலம்
இனங்காட்டிகள்
12026-57-2 Y
51429-74-4 (ஐதரேட்டு) N
EC number 234-713-5
ம.பா.த அமிலம் பாசுபோமாலிப்டிக் அமிலம்
பப்கெம் 53384541
பண்புகள்
H3PMo12O40
வாய்ப்பாட்டு எடை 1825.25 கி/மோல்
அடர்த்தி 1.62 கி/மி.லி
உருகுநிலை 79-90 °செ
கரையும்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் ஆக்சிசனேற்றி
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

பாசுபோமாலிப்டிக் அமிலம் (Phosphomolybdic acid) என்பது H3PMo12O40 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பன்னிருமாலிப்டோபாசுபாரிக் அமிலம் என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. மேசான் முக்குரோம் கறையின் பகுதிக்கூறாக பாசுபோமாலிப்டிக் அமிலம் உள்ளது. மஞ்சளும் பசுமையும் கலந்த நிறத்திலுள்ள இச்சேர்மம் தண்ணீரிலும் எத்தனால் போன்ற முனைவுக் கரிமக் கரைப்பான்களிலும் நன்றாக கரைகிறது. பாலிபீனால்கள், ஐதரோகார்பன் மெழுகுகள், ஆல்க்கலாய்டுகள், சிடீராய்டுகள் போன்றவைகளுக்கான மென்படல வண்ணப்பிரிகை முறையில் இதைப் பயன்படுத்துகிறார்கள்.

பாசுபோமாலிப்டிக் அமிலத்தை இணையான மற்றும் நிறைவுறாத சேர்மங்கள் மாலிப்டினம் நீலமாக ஒடுக்கமடையச் செய்கின்றன. கறையாக்கப்பட வேண்டிய மூலக்கூறில் இரட்டைப் பிணைப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஏற்ப வண்ணம் செறிவாகிறது[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Reduction of Phosphomolybdic Acid by Compounds Possessing Conjugated Double Bonds, S. Burstein, Anal. Chem., 1953, 25 (3), pp 422–424