பாசுபிரேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாசுபிரேன்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பாசுபிரேன்
முறையான ஐயூபிஏசி பெயர்
பாசுபேசைக்ளோபுரோப்பேன்
வேறு பெயர்கள்
பாசுபிரேன்
இனங்காட்டிகள்
6569-82-0
ChemSpider 10451470
InChI
  • InChI=1S/C2H5P/c1-2-3-1/h3H,1-2H2
    Key: UTMQOVWWMLZKRY-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 15786916
  • C1PC1
பண்புகள்
C2H5P
வாய்ப்பாட்டு எடை 60.04 g·mol−1
தோற்றம் நிறமற்ற வாயு
உருகுநிலை −121 °C (−186 °F; 152 K)
கொதிநிலை 36.5 °C (97.7 °F; 309.6 K)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பாசுபிரேன் (Phosphirane) என்பது C2H4PH என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். வணிக மதிப்பு இல்லாத கரிம பாசுபரசு சேர்மமான இது நிறமற்ற வாயு நிலையில் காணப்படுகிறது. ஓர் எளிமையான வளைய நிறைவுற்ற கரிமபாசுபரசு சேர்மமாக, பாசுபிரேன் சேர்மம் என்பது ஆராய்ச்சி சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், இது தொடர்புடைய சேர்மங்கள் குடும்பத்தின் ஒரு முன்மாதிரியும் ஆகும்.

பாசுபிரேன் முதன் முதலில் 1,2-இருகுளோரோயீத்தேன் சேர்மத்துடன் பாசுபீனின் இணை காரத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்து தயாரிக்கப்பட்டது.[2]

பாசுபிரேன்கள், அதாவது கரிம பதிலிகளை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஐதரசன்களால் பதிலீடு செய்யப்பட்ட பாசுபிரேன்கள் மூல பாசுபிரேனை விட மிகவும் பொதுவாக விவாதிக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Wagner, Ross I.; Freeman, LeVern D.; Goldwhite, H.; Rowsell, D. G. (March 1967). "Phosphiran". Journal of the American Chemical Society 89 (5): 1102–1104. doi:10.1021/ja00981a013. 
  2. François Mathey (1996). "Phosphiranes, Phosphirenes, and Heavier Analogues". Comprehensive Heterocyclic Chemistry II 1A. 277–304. DOI:10.1016/B978-008096518-5.00008-3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-08-096518-5. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசுபிரேன்&oldid=3955234" இலிருந்து மீள்விக்கப்பட்டது