பாக்கிரைனோசோரஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாக்கிரைனோசோரஸ்
புதைப்படிவ காலம்:பிந்திய கிரீத்தேசியக் காலம்
பாக்கிரைனோசோரஸ் கனடென்சிஸ்
புதைபடிவம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
பெருவரிசை:
வரிசை:
துணைவரிசை:
உள்வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
சிற்றினம்:
பேரினம்:
பாக்கிரைனோனோசோரஸ்

இனங்கள்
  • ப. கனடென்சிஸ் ஸ்டேர்ன்பேர்க், 1950 (வகை)

பாக்கிரைனோசோரஸ் வட அமெரிக்காவின் பிந்திய கிரீத்தேசியக் காலத்தைச் சேர்ந்த செராடொப்சிட் தொன்மாப் பேரினம் ஆகும். இதன் முதல் எடுத்துக்காட்டு, சார்லஸ் எம். ஸ்டேர்ன்பேர்க் என்பவரால், 1946 ஆம் ஆண்டில், கனடாவின் ஆல்பேர்ட்டாவில் கண்டுபிடிக்கப்பட்டது. 1950 இல் இதற்குப் பெயரிடப்பட்டது. முழுமையற்ற 12 மண்டையோடுகளும், பெருந்தொகையான பிற பகுதிப் புதைபடிவங்களும் ஆல்பேர்ட்டாவிலும் ஐக்கிய அமெரிக்காவின் அலாஸ்காவிலும் கண்டுபிடிக்கப்பட்டன. இக் கண்டுபிடிப்புக்களின் பெரும்பகுதி 1980கள் வரை ஆய்வுக்குக் கிடைக்கவில்லை. இதனால், பாக்கிரைனோசோரஸ் பற்றிய ஆர்வம் மிகவும் தாமதமாகவே உருவானது. கொம்புகளுக்குப் பதிலாக இவற்றின் மண்டையோடுகளில் தட்டையான பெரிய அமைப்புக்கள் காணப்படுகின்றன. இவற்றுள் பெரியது மூக்கின் மேல் அமைந்துள்ளது. இவை ஆக்கிலூசோரஸ் இனத்துக்கு மிகவும் நெருங்கியவை.

பச்சிரினோசோரஸ் 5.5 மீட்டர் தொடக்கம் 7 மீட்டர்கள் (18 - 23 அடி) வரை நீளமானவை. இவை நான்கு தொன்கள் வரை எடை கொண்டவை. இத் தொன்மாக்கள் தாவர உண்ணிகள். இவற்றின் கன்னப் பற்கள் கடினமான நார்த்தன்மை கொண்ட தாவரங்களைச் சப்புவதற்கு ஏற்ற வகையில் வலுவுள்ளவையாகக் காணப்படுகின்றன.

1972 ஆம் ஆண்டில் ஆல்பேர்ட்டாவைச் சேர்ந்த அறிவியல் ஆசிரியரான அல் லாகுஸ்தா என்பவர் ஆல்பேர்ட்டாவில், ஒரு பெரிய எலும்புப் படுகையைக் கண்டுபிடித்தார். 1986 ஆகும் 1989 க்கும் இடையில் இப்பகுதியில் அகழ்வாய்வு செய்தபோது, வியக்கத்தக்க அளவில் எலும்புகள் கிடைத்தன. அதிகப்படியாக ஒரு சதுர மீட்டருக்கு 100 எலும்புகள் வீதம் மொத்தம் 3500 எலும்புகளும், 14 மண்டையோடுகளும் கிடைத்தன. இது பல தொன்மாக்கள் ஒரேயடியாக இறந்துபட்ட ஒரு இடமாக இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. வெள்ளப் பெருக்கின்போது கூட்டமாக ஆற்றைக் கடக்க முற்பட்ட போது இது ஏற்பட்டிருக்கலாம். இங்கு காணப்பட்ட எலும்புகளில், இளம் வயது முதல் நன்கு வளர்ந்தவை வரை, நான்கு தெளிவான வயதுக் குழுக்களைச் சேர்ந்த தொன்மாக்களின் எலும்புகள் இருந்தன. இது இத் தொன்மாக்கள் தமது குட்டிகளைப் பராமரித்து வந்ததைக் காட்டுகிறது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாக்கிரைனோசோரஸ்&oldid=2741935" இலிருந்து மீள்விக்கப்பட்டது