பாக்கித்தான் சர்க்கரை ஆலைகள் சங்கம்
பாக்கித்தான் சர்க்கரை ஆலைகள் சங்கம் (Pakistan Sugar Mills Association) பாக்கித்தான் நாட்டின் இசுலாமாபாத்து நகரத்தில் அமைந்துள்ளது.
சர்க்கரைத் துறையின் பிரதிநிதிகளின் முதல் கூட்டம் லாகூரில் உள்ள அம்பாசிடர் விடுதியில் 1964 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 30 ஆம் தேதியன்று தாச் முகம்மது கன்சாதா தலைமையில் நடைபெற்றது. செயல்வீரர்கள் நியமனம், வங்கி கணக்கு துவக்கம், தணிக்கையாளர்கள் நியமனம் மற்றும் பிற தீர்மானங்கள் இங்கு நடைபெற்றன.
1964 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பாக்கித்தான் சர்க்கரை ஆலைகள் சங்கம் பதிவு செய்யப்பட்டது, பாக்கித்தான் நாட்டிலுள்ள அனைத்து சர்க்கரை ஆலைகளின் பிரதிநிதி அமைப்பாக இது நிறுவப்பட்டது. பாக்கித்தான் சர்க்கரை ஆலைகள் சங்கம், பாக்கித்தான் அரசாங்கத்தின் கொள்கையின் அளவுருக்களுக்குள் சர்க்கரை ஆலைகள் மற்றும் சர்க்கரை சார்ந்த தொழில்களின் சிறந்த நலனில் மேம்பாடு மற்றும் செயல்திறனைப் பெறுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பின்னர் பாக்கித்தான் சர்க்கரை ஆலைகள் சங்கத்தின் முதல் வருடாந்திர பொதுக் கூட்டம் (AGM) 28 மார்ச் 1965 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 28 ஆம் தேதியன்று நடைபெற்றது. டாக்காவில் உள்ள சாபாக்கு விடுதியில் 17 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.[1]