பாகமண்டலா நாடு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாகமண்டலா நாடு
முன்னாள் மக்களவைத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நீக்கப்பட்டது தொகுதி1956
ஒதுக்கீடுபட்டியல் இனத்தவர்
மாநிலம்குடகு

பாகமண்டலா நாடு சட்டமன்றத் தொகுதி (Bhagamandala Nad Assembly constituency) என்பது கூர்க் சட்டமன்றத்தின் ஒரு தொகுதியாகச் செயல்பட்டது. இது 1952-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியாவின் குடகு மாநிலத்தின் சட்டமன்றமாகும்.[1] பாகமண்டலாப் பகுதியின் பொருளாதாரம் தேன் மற்றும் ஏலக்காய் ஏற்றுமதியால் ஆதிக்கம் செலுத்தியது.[2] 1956ஆம் ஆண்டில் இத்தொகுதி நீக்கப்பட்டது.

1952 தேர்தல்[தொகு]

மூன்று வேட்பாளர்கள் 1952 சட்டமன்றத் தேர்தலில் பாகமண்டல நாடு தொகுதிக்குப் போட்டியிட்டனர்:

  • இந்தியத் தேசிய காங்கிரசின் கொனானா தேவியா 2,347 வாக்குகள் (58.62%) பெற்று வெற்றி பெற்றார்.
  • பட்டமடா பொன்னப்பா, சுயேச்சை, 1,384 வாக்குகள் (34.57%)
  • ஜெயராம் சிங், சுயேச்சை, 273 வாக்குகள் (6.82%)[3]

சுமார் 80.3% வாக்காளர்கள் வாக்களித்த இத்தேர்தலில் வாக்களித்தனர். 1952ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில், இங்குதான் அதிக வாக்குகள் பதிவாகியிருந்தது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. India Votes. 1968. p. 355.
  2. Census of India, 1961. 1965. p. 30.
  3. Election Commission of India. STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1951 TO THE LEGISLATIVE ASSEMBLY OF COORG
  4. The March of India. 1957. p. 10.