பஷீர் அகமது சயீத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பஷீர் அகமது சயீத்
பிறப்பு20 பிப்ரவரி 1900
இறப்பு7 பிப்ரவரி 1984
தேசியம்இந்தியா

பஷீர் அகமது சயீத் (Basheer Ahmed Sayeed) என்பவர் 1900 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி முதல் 1984 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி வரை வாழ்ந்த ஓர் இந்திய நீதிபதியாவார். இந்திய அரசியல்வாதியாகவும் கல்வியாளராகவும் திகழ்ந்தார். மதராசு சட்டமன்றத்தில்  உறுப்பினராக பணியாற்றினார். மேலும் தென்னிந்திய கல்வி அறக்கட்டளையின் நீதிதியரசர் பஷீர் அகமது சயீது மகளிர் கல்லூரி நிறுவனராகவும உறுப்பினராகவும்  பணியாற்றினார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

சயீத் 1900 ஆம் ஆண்டில் பிப்ரவரி 20 அன்று சென்னை மயிலாப்பூரில் நவாயாத் பரம்பரையில் உள்ள ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை சென்னை மகாணத்தில் சக்திவாய்ந்த நிலப்பிரபுவாக இருந்தார். சயீத் மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரியில் பட்டம் பெற்றார். இவர் மெட்ராஸ் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார், இவர் பட்டப்படிப்பை முடித்து 1925 ஆம் ஆண்டில் வழக்கறிஞராகச் சேர்ந்தார்.

சமூக மற்றும் அரசியல் வாழ்க்கை[தொகு]

சயீத் என்பர் 1926 ஆம் ஆண்டு முஸ்லீம் லீக்கின் வேட்பாளராக சென்னை சட்ட சபைக்கு பரிந்துரைக்கப்பட்டார். முஸ்லீம் லீக்கில் 1936 வரை பணியாற்றினார். 1937 தேர்தலில், இவர் லீக் வேட்பாளராக சென்னை சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். சுதந்திரம் நெருங்க நெருங்க, சயீத் முஸ்லீம் லீக்கை விட்டு வெளியேறி இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார். இவர் 1949 ஆம் ஆண்டு ஜூலை சயீத் சென்னை உயர்நீதிமன்றத்தின் செயல் நீதிபதியாகவும், ஜனவரி 1950 இல் சாதாரண நீதிபதிகளில் (puisne judge) ஒருவராகவும் நியமிக்கப்பட்டார். இவர் 1960 ஆண்டு ஓய்வு பெறும் வரை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார்.

சயீத், தென்னிந்திய கல்வி அறக்கட்டளையின் நிறுவனராகவும் உறுப்பினராகவும் இருந்தார. இவரின் மிக உயர்வான எண்ணமானது  தென்னிந்திய முஸ்லிம்களிடையே கல்வி மற்றும் கல்வியறிவை மேம்படுத்துவதே முக்கிய நோக்கமாக இருந்தது. இவரது அறக்கட்டளையால் 1955 ஆம் ஆண்டில் SIET மகளிர் கல்லூரியை நிறுவியது. சயீத் மெட்ராஸ் லைப்ரரி அசோசியேஷன் மற்றும் மெட்ராஸ் மியூசிக் அகாடமியின் துணைத் தலைவராகவும் இருந்தார். மியூசிக் அகாடமியின் துணைத் தலைவராக இருந்த இவர், அகாடமிக்கு சொந்தக் கட்டிடத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றினார்.

இறப்பு[தொகு]

சயீத் தனது 83வது வயதில் 1984 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி சென்னையில் காலமானார்.

மரபு[தொகு]

சயீதின் பெயரில் உள்ள ஒரு நன்கொடையானது மதராஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள இஸ்லாமிய ஆய்வுகளுக்கான JBAS மையத்திற்கு ஆதரவளித்து வருகிறது.[1] சென்னை தேனாம்பேட்டையில் உள்ள SIET மகளிர் கல்லூரி அவரது நினைவாக நீதியரசர் பஷீர் அகமது சயீது மகளிர் கல்லூரி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[2] பஷீர் அகமது சயீத் மற்றும் சக வழக்கறிஞரும் அரசியல்வாதியுமான கே. பாஷ்யம் ஐயங்கார் ஆகியோரின் நினைவாக இவர்கள் வாழ்ந்த சாலைக்கு பாஷ்யம்-பஷீர் அகமது சாலை என பெயரிடப்பட்டது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "JBAS Centre for Islamic Studies".
  2. https://www.jbascollege.edu.in/article/about-jbas.html. {{cite web}}: Missing or empty |title= (help)
  3. "A road straddling two religions". The Hindu (in Indian English). 1 January 2013.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பஷீர்_அகமது_சயீத்&oldid=3847792" இலிருந்து மீள்விக்கப்பட்டது