நீதியரசர் பஷீர் அகமது சயீது மகளிர் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீதியரசர் பசீர் அகமது சயீது மகளிர் கல்லூரி
Jbas logo.png
வகைதன்னாட்சி
உருவாக்கம்1951 (1951)
தலைவர்மூசா ராசா
முதல்வர்முனைவர்.(திருமதி.) ஷாநாஸ் அகமது
அமைவிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
சேர்ப்புசென்னைப் பல்கலைக்கழகம்
இணையதளம்www.jbascollege.edu.in

நீதியரசர் பசீர் அகமது சயீது மகளிர் கல்லூரி (Justice Basheer Ahmed Sayeed College for Women), முன்னதாக தென் இந்திய கல்வி அறக்கட்டளை மகளிர் கல்லூரி அல்லது எஸ்.ஐ.ஈ.டி மகளிர் கல்லூரி (S.I.E.T Women’s College) 1955ஆம் ஆண்டில் மகளிருக்கு உயர்கல்வி வழங்கும் நோக்குடன் நிறுவப்பட்ட கல்லூரியாகும்[1]. இது சென்னையின் தேனாம்பேட்டை பகுதியில் அமைந்துள்ளது. நீதியரசர் பசீர் அகமது சயீது நிறுவிய தென்னிந்திய கல்வி அறக்கட்டளை இதனை நிர்வகித்து வருகின்றது. இது சென்னைப் பல்கலைகழகத்திற்கு இணைந்த தன்னாட்சி பெற்ற கல்லூரியாகும்.

வரலாறு[தொகு]

வழக்கறிஞர் பசீர் அகமது சயீத் (20 பெப்ரவரி 1900 - 7 பெப்ரவரி 1984) 1959இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதியரசரானார். பொருளாதார, சமூகநிலைகளில் பிற்படுத்தப்பட்ட இனத்தினரின் பெண்களுக்கு உயர்கல்வி வழங்கும் நோக்குடன் தென்னிந்தியக் கல்வி அறக்கட்டளை ஒன்றை நிறுவினார். இதன் மூலம் எஸ்.ஐ.ஈ.டி மகளிர் கல்லூரி நிறுவப்பட்டது.

பாடதிட்டங்கள்[தொகு]

இங்கு கீழ்வரும் பாடதிட்டங்கள் வழங்கப்படுகின்றன [2]:

பட்டப்படிப்பு
 • இளங்கலை பொருளியல்
 • இளங்கலை ஆங்கிலம்
 • இளங்கலை வரலாறு
 • இளங்கலை அரசு அறிவியல்
 • இளநிலை அறிவியல் உயிரிவேதியியல்
 • இளநிலை அறிவியல் தாவரவியல்
 • இளநிலை வேதியியல்
 • இளநிலை அறிவியல் மனையியல்
 • இளநிலை அறிவியல் இயற்பியல்
 • இளநிலை அறிவியல் மனவியல்
 • இளநிலை அறிவியல் விலங்கியல்
 • இளநிலை வணிகம் (வழமை)
பட்ட மேற்படிப்பு
 • முதுகலை ஆங்கிலம்
 • முநிலை வணிகம் (வழமை)
 • முதுநிலை அறிவியல் ஆடையலங்கார தொழினுட்பம்
 • முதுநிலை அறிவியல் நெசவும் ஆடையும்
 • முதுநிலை அறிவியல் விலங்கியல்
ஆய்வு
 • எம்.பில் வணிகம்
 • எம்.பில் மனவியல்
 • எம்.பில் விலங்கியல்
 • முனைவர் விலங்கியல்

குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவிகள்[தொகு]

 • தாகுபாட்டி புரந்தேசுவரி, முன்னாள் நடுவணரசு இணை அமைச்சர் (வணிகமும் தொழிலும்)
 • புவனா நடராசன், மொழிபெயர்ப்பாளரும் சிறுகதை எழுத்தாளரும்
 • சிவசங்கரி
 • உமா ரமணன், பின்னணிப் பாடகி

மேற்சான்றுகள்[தொகு]

 1. "Justice Basheer Ahmed Sayeed College for Women". http://www.collegesintamilnadu.com/. 8 பெப்ரவரி 2016 அன்று பார்க்கப்பட்டது. External link in |publisher= (உதவி)
 2. "Courses Offered". http://www.collegesintamilnadu.com/. 8 பெப்ரவரி 2016 அன்று பார்க்கப்பட்டது. External link in |publisher= (உதவி)