பவன் குமார் கோயங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பவன் குமார் கோயங்கா
பிறப்புஅர்பால்பூர், மத்தியப் பிரதேசம், இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்இந்திய தொழில்நுட்பக் கழகம் கான்பூர் (தொழில்நுட்பவியல் இளையர்)
கோர்னெல் பல்கலைக்கழகம் (முனைவர்)
பணி
வாழ்க்கைத்
துணை
மம்தா கோயங்கா

பவன் குமார் கோயங்கா (Pawan Kumar Goenka) ஒரு இந்தியத் தொழிலதிபரும்,[1] மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட தானுந்து உற்பத்தி நிறுவனம் மகிந்திரா அண்டு மகிந்திராவின் ஓய்வுபெற்ற நிர்வாக இயக்குநரும், கொரியா, "சாங்யாங் மோட்டார் கம்பெனி" முன்னாள் தலைவரும் ஆவார். தற்போது, இவர் இந்தியாவின் விண்வெளித் திட்டத்தின் ஒரு பகுதியான "இன்சுபேசின்" தலைவராக உள்ளார்.[2] அத்துடன், சென்னை, இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் ஆளுநர் குழுவின் தலைவராகவும் உள்ளார்.[3]

ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்[தொகு]

கோயங்கா தனது பள்ளிப்படிப்பை கொல்கத்தா, ஸ்ரீ ஜெயின் வித்தியாலயத்தில் கொல்கத்தா பயின்றார், பின்னர், கான்பூர் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் இயந்திர பொறியியல் பட்டமும், கோர்னெல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம்மும் பெற்றார். இவர் ஆர்வர்டு வணிகப் பள்ளியில் ஆறு வார மேம்பட்ட மேலாண்மை திட்டத்தில் கலந்து கொண்டார். 1979 முதல் 1993 வரை அமெரிக்காவின் டெட்ராய்டில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆய்வும் விருத்தியும் மையத்தில் பணிபுரிந்தார். அதன் பின்னர் மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனத்தில் பொது மேலாளராகச் சேர்ந்தார்.[4]

தொழில்[தொகு]

கோயங்கா 1993 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மகிந்திரா நிறுவனத்தில் ஆய்வும் விருத்தியும் பொது மேலாளராகச் சேர்ந்தார். ஏப்ரல் 2003 இல் வாகனத் துறைக்கான தலைமை இயக்க அதிகாரியாக நியமிக்கப்பட்டார். செப்டம்பர் 2005 இல், வாகனத் துறையின் தலைவராக ஆனார், ஏப்ரல் 2010 இல் வாகன மற்றும் பண்ணை உபகரணங்கள் துறைகளின் தலைவராக இருந்தார். 2013 இல் மகிந்திரா அண்டு மகிந்திரா நிர்வாக இயக்குநரானார். ஏப்ரல் 2014 இல், இரு சக்கர வாகன வணிகத்தின் கூடுதல் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். நவம்பர் 2016 இல் எம்&எம் நிர்வாக இயக்குனராக பதவி உயர்த்தப்பட்டார்.[5]

கோயங்கா, சொசைட்டி ஆஃப் ஆட்டோமோட்டிவ் இன்ஜினியர்ஸ் இந்தியா மற்றும் ஆட்டோமோட்டிவ் ரிசர்ச் அசோசியேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் ஆளும் குழுவின் கடந்தகாலத் தலைவராக இருந்துள்ளார். ஆகத்து 2013 முதல் ஆகத்து 2014 வரை தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராக இருந்தார். இந்தியத் தொழில்துறைக் கூட்டமைப்பின் தேசியப் பேரவை உறுப்பினராகவும், இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை ஆளுநர் குழுவின் தலைவராகவும் உள்ளார்.[6] [7]செப்டம்பர் 2021 இல், நியமனத்திற்கான அமைச்சரவைக் குழு, இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்தின் தலைவராக கோயங்கா தேர்ந்தெடுக்கப்பட்டார்.[8]

விருதுகள் மற்றும் கௌரவங்கள்[தொகு]

  • SAE இந்தியா அறக்கட்டளையின் பொறியியல் சிறப்பு விருது 2012 [9]
  • அப்பல்லோ சிவி விருதுகள் வழங்கும் சிவி மேன் ஆஃப் தி இயர் 2012[10]
  • ஆட்டோகார் தொழில் வல்லுநரால் 2007 மற்றும் 2011 ஆம் ஆண்டின் சிறந்த மனிதர்[11][12]
  • 2004 இல் SAE இன்டர்நேஷனல் ஃபெலோ[13]
  • 2004 இல் INAE (இந்திய தேசிய பொறியாளர் அகாடமி) ஃபெலோ
  • 2004 இல் இந்திய தொழில்நுட்பக் கழகம் கான்பூர் சிறந்த முன்னாள் மாணவர் விருது. [14]
  • 1997 இல் SAE இன் சிறந்த சர்வதேச ஆலோசகர் விருது[15]
  • 1985 & 1991 ஆண்டுகளுக்கான சார்லஸ் எல். மெக்குயன் சாதனை விருது
  • 1986 இல் ஜெனரல் மோட்டார்ஸின் அசாதாரண சாதனைக்கான விருது.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

மம்தா கோயங்காவை மணந்தார், இவர் புற்றுநோயாளிகளுக்கு ஆலோசனை வழங்கவும், அவர்களுக்கு முறையான சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய கவனிப்பைப் பெறவும் தனது நேரத்தைத் தன்னார்வத் தொண்டு செய்கிறார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mahindra and Mahindra elevates Pawan Goenka as MD; Mahindra redesignated - The Economic Times". The Economic Times. http://economictimes.indiatimes.com/news/company/corporate-trends/mahindra-and-mahindra-elevates-pawan-goenka-as-md-mahindra-redesignated/articleshow/55374204.cms. 
  2. "Pawan Goenka is Anand Mahindra's go-to man in Mahindra & Mahindra". Economic Times. 27 November 2012. பார்க்கப்பட்ட நாள் 2014-05-13.
  3. "Governing Board of IIT Madras". IIT Madras. 3 November 2022. பார்க்கப்பட்ட நாள் 2023-11-02.
  4. "How Mahindra & Mahindra came to dominate the Indian automotive industry". Forbes India. 23 April 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-05-13.
  5. 5.0 5.1 "Mahindra Rise - Who We Are: Leadership". Mahindra.com. 2014. பார்க்கப்பட்ட நாள் 2015-04-10.
  6. "Every industry has to innovate disruptions: Pawan Goenka". The Hindu. 23 April 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-05-13.
  7. "Mahindra's Pawan Goenka appointed as Chairman of Board at IIT Madras". Gaadi.com. 23 April 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-05-13.
  8. Mishra, Sanjeev (September 12, 2021). "Ex-M&M MD Pawan Goenka named chairperson of space regulator IN-SPACe". Business Today.
  9. "mahindra & mahindra-spon gdr". Bloomberg Business. 23 April 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-05-13.
  10. "Dr Pawan Goenka receives CV Man of the Year award". Mahindra Rise. 23 April 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-05-13.
  11. "Auto-Motive to Success". India's Greatest. 23 April 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-05-13.
  12. "Man of the Year 2011: Pawan Goenka". Autocar Professional. 23 April 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-05-13.
  13. "Dr. Pawan K. Goenka Named SAE Fellow". SAE International. 23 April 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-05-13.
  14. "Pawan Kumar Goenka". IIT Kanpur. 23 April 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-05-13.
  15. "Spotlight on India Panel: Providing Engineering Solutions for the Commercial Vehicle Industry". SAE INternational. 23 April 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-05-13.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பவன்_குமார்_கோயங்கா&oldid=3901559" இலிருந்து மீள்விக்கப்பட்டது