பள்ளி கொடுமைப்படுத்துதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பள்ளிக் கொடுமைப்படுத்துதல் (சித்தரிக்கப்பட்டது)[1]

பள்ளி கொடுமைப்படுத்துதல் (School bullying) அல்லது பள்ளி ஒடுக்குதல் என்பது பள்ளிச் சூழலுக்கு வெளியே மாணவர்களைக் கொடுமைப்படுத்துதல் போன்றது, பாதிக்கப்பட்ட மாணவரை விட உடல் அல்லது சமூக காரணிகள் அதிகம் கொண்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாணவர்கள் பிறரைத் தாக்குவதனைக் குறிக்கிறது. [2] [3] கொடுமைப்படுத்துதல் வாய்மொழியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ நடைபெறலாம். [2] [3] உடல், உணர்ச்சி மற்றும்/அல்லது வாய்மொழி ரீதியாகவோ ஒடுக்குமுறை நடைபெறலாம்.

பள்ளி வன்முறை பரவலாக பல நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால் பல கல்வித் தலைவர்கள் தங்களது செயல்பாடுகள் மூலமாக பள்ளிக் கொடுமைப்படுத்துதலைக் குறைப்பதில் வெற்றி கண்டுள்ளனர்.பள்ளிக் கொடுமைப்படுத்துதலைக் குறைக்க அல்லது தடுக்கப் பயன்படுத்தப்படும் சில உத்திகளில் மாணவர்களை கொடுமைப்படுத்துதல் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், வகுப்பறையில் பதிவு செய்யும் சாதனங்களை வைத்தல், பாதுகாப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் மற்றும் பள்ளி பாதுகாப்பு அதிகாரிகளை பணியமர்த்துதல் ஆகியவை அடங்கும். இருப்பினும், கொடுமைப்படுத்துதலுக்கு பள்ளிகள் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறது என்பது பரவலாக வேறுபடுகிறது. பள்ளி கொடுமைப்படுத்துதலால் பாதிக்கப்பட்டவர்கள் மீதான விளைவுகளில் மனச்சோர்வு, பதட்டம், கோபம், மன அழுத்தம், உதவியின்மை மற்றும் பள்ளி செயல்திறன் குறைதல் ஆகியவை அடங்கும் [4]

அளவுகோல்கள்[தொகு]

கொடுமைப்படுத்துதல் என்பது ஆக்கிரமிப்பு நடத்தையின் ஒரு துணைப்பிரிவாகும், இது விரோத மனப்பான்மை, மாணவர்களின் ஆற்றல் சமநிலையின்மை மற்றும் காலம் ஆகியவற்றினால் வகைப்படுத்தப்படுகிறது.[5][6][7] அன்றாடம் நடைபெறும் மாணவர்-மாணவர் மோதல்கள் மாணவர்களின் அதிகார சமநிலையின்மையுடன் தொடர்புடையவை அல்ல.சாதாரண மோதல்களைப் போல் அல்லாது, பள்ளிக் கொடுமைப்படுத்துதல் என்பவை பாதிக்கப்பட்ட மாணவர்களை கடுமையாகப் பாதிக்கலாம். [8]

சாதாரண சக மோதல்கள் மற்றும் கொடுமைப்படுத்துதல் , பலிவாங்கல் மற்றும் ஆசிரியர்களுக்கான தாக்கங்கள் ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடு கொடுக்கப்பட்டுள்ளது.[9]

அதிகார ஏற்றத்தாழ்வு[தொகு]

கொடுமைப்படுத்துதல் என்பது அதிகார சமநிலையின்மையை உள்ளடக்கியதாகும். [10] அளவு, பாலினம், வயது, சகாக்களின் கூட்டு மற்றும்/அல்லது பிற மாணவர்களின் உதவி போன்ற காரணங்களால் ஒரு கொடுமைப்படுத்துபவர் மற்றொரு மாணவர் மீது அதிகாரம் செலுத்துகிறார். [11] [12]

எச்சரிக்கை அடையாளங்கள்[தொகு]

ஒரு குழந்தை கொடுமைப்படுத்தப்படுவதைக் குறிக்கும் அறிகுறிகள் பின்வருமாறு:

  • விவரிக்க முடியாத காயங்கள்,
  • கவலை மற்றும் அதிர்ச்சிக்குப் பிறகான மன அழுத்தப் பாதிப்பு அறிகுறிகள்,
  • இழந்த அல்லது கிழிந்த ஆடை,
  • உணவுப் பழக்கத்தில் மாற்றங்கள்,
  • மதிப்பெண்கள் குறைவது,
  • தொடர்ந்து பள்ளி வர இயலாமை, ,
  • தற்கொலை எண்ணங்கள், மற்றும்
  • அதிகமாக மன்னிப்பு கேட்கும் தன்மை உடையவராக மாறுதல். [13] [14]

சான்றுகள்[தொகு]

  1. U.S. National Center for Education Statistics. Student Reports of Bullying: Results From the 2001 School Crime Supplement to the National Crime Victimization Survey (PDF) (Report).
  2. 2.0 2.1 Nansel, Tonja R.; Overpeck, Mary; Pilla, Ramani S.; Ruan, W. June; Simons-Morton, Bruce; Scheidt, Peter (2001-04-25). "Bullying behaviors among U.S. youth: Prevalence and association with psychosocial adjustment". JAMA (American Medical Association) 285 (16): 2094–2100. doi:10.1001/jama.285.16.2094. பப்மெட்:11311098. 
  3. 3.0 3.1 Nansel, Tonja R.; Craig, Wendy; Overpeck, Mary D.; Saluja, Gitanjali; Ruan, W. June (2004-08-01). "Cross-national consistency in the relationship between bullying behaviors and psychosocial adjustment". Archives of Pediatrics & Adolescent Medicine (American Medical Association) 158 (8): 730–736. doi:10.1001/archpedi.158.8.730. பப்மெட்:15289243. 
  4. "The impact of bullying victimization in early adolescence on subsequent psychosocial and academic outcomes across the adolescent period: A systematic review". Journal of School Violence 20 (3): 351–373. 2021. doi:10.1080/15388220.2021.1913598. பன்னாட்டுத் தர தொடர் எண்:1538-8220. http://dx.doi.org/10.1080/15388220.2021.1913598. 
  5. Burger, Christoph; Strohmeier, Dagmar; Spröber, Nina; Bauman, Sheri; Rigby, Ken (October 2015). "How teachers respond to school bullying: An examination of self-reported intervention strategy use, moderator effects, and concurrent use of multiple strategies". Teaching and Teacher Education 51: 191–202. doi:10.1016/j.tate.2015.07.004. 
  6. Olweus, D. (1999). The nature of school bullying: A cross-national perspective. In P. K. Smith, J. Junger-Taqs, D. Olweus, R. Catalano, & P. Slee (Eds.), The nature of school bullying: A cross-national perspective (pp. 7–27). New York: Plenum.
  7. Goldsmid, S.; Howie, P. (2014). "Bullying by definition: An examination of definitional components of bullying". Emotional and Behavioural Difficulties 19 (2): 210–225. doi:10.1080/13632752.2013.844414.  வார்ப்புரு:Closed access
  8. "School bullying is not a conflict: The interplay between conflict management styles, bullying victimization and psychological school adjustment". International Journal of Environmental Research and Public Health 19 (18): 11809. 2022. doi:10.3390/ijerph191811809. பன்னாட்டுத் தர தொடர் எண்:1661-7827. பப்மெட்:36142079. 
  9. "School bullying is not a conflict: The interplay between conflict management styles, bullying victimization and psychological school adjustment". International Journal of Environmental Research and Public Health 19 (18): 11809. 2022. doi:10.3390/ijerph191811809. பன்னாட்டுத் தர தொடர் எண்:1661-7827. பப்மெட்:36142079.  Picture was copied from this source, which is available under a Creative Commons Attribution 4.0 International License.
  10. Meyer, Doug (December 2016). "The Gentle Neoliberalism of Modern Anti-bullying Texts: Surveillance, Intervention, and Bystanders in Contemporary Bullying Discourse". Sexuality Research and Social Policy 13 (4): 356–370. doi:10.1007/s13178-016-0238-9. 
  11. "Empathy and involvement in bullying in children and adolescents: a systematic review". Journal of Youth and Adolescence 44 (3): 637–657. 2015. doi:10.1007/s10964-014-0135-6. பன்னாட்டுத் தர தொடர் எண்:0047-2891. பப்மெட்:24894581. http://dx.doi.org/10.1007/s10964-014-0135-6. 
  12. Sylvester, Betty (1 January 2011). "Teacher as Bully: Knowingly or Unintentionally Bullying Students". The Delta Kappa Gamma Bulletin: The International Journal for Professional Educators 77 (2): 42–45. https://digitalcommons.cedarville.edu/education_publications/52/. 
  13. US Department of Health and Human Services (16 October 2012). "The Roles Kids Play". What is Bullying. பார்க்கப்பட்ட நாள் 25 September 2013.
  14. Fisher (2010). Encyclopedia of Victimology and Crime Prevention.