பள்ளிகளில் செல்லிடத் தொலைபேசிகளின் பயன்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Photograph of a phone cage used for storing students' phones during school hours
பள்ளி நேரங்களில் மாணவர்களின் தொலைபேசிகளை அவர்களிடம் இருந்து விலக்கி வைக்கப் பயன்படுத்தப்படும் தொலைபேசிக் கூண்டு.

பள்ளிகளில் செல்லிடத் தொலைபேசிகளின் பயன்பாடு (Mobile phone use in schools) என்பது மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளால் விவாதிக்கப்படும் ஒரு சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ளது.

மாணவர்களின் பாதுகாப்பிற்கு இவை அவசியமானவை என்றும் குழந்தைகள் தங்கள் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுடன் தொடர்பு கொள்ள வாய்ப்பாக உள்ளது என்றும், பல பள்ளி விடயங்களை எளிதாக்க முடியும், மேலும் புதிய ஊடகங்களை எவ்வாறு சரியாகக் கையாள்வது என்பதை குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள் என்று செல்லிடத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதை ஆதரிக்கும் மக்கள் கருதுகிறார்கள்.

பள்ளி நடைபெறும் போது மாணவர்கள் மொபைல் போன்களைப் பயன்படுத்துவதை எதிர்ப்பவர்கள், செல்லிடத் தொலைபேசி கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் தேர்வு முறைகேடு, தேவையற்ற புகைப்படங்களை எடுப்பது, [1] தொலைபேசியில் விளையாட்டுக்களை விளையாடுதல் போன்ற தகாத செயல்பாடுகளில் பயன்படுத்தப்படலாம் என்றும் நம்புகின்றனர். ஆசிரியர்கள் மீது கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, மாணவர்கள் தங்கள் தொலைபேசிகளால் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள்.

மொபைல் போன்களால் ஏற்படும் கவனச்சிதறல்களைத் தடுக்க, சில பள்ளிகள் பள்ளி நேரங்களில் மாணவர்கள் தங்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் கொள்கைகளை அமல்படுத்தியுள்ளன. சில பள்ளி நிர்வாகிகள் குமையினைப் பயன்படுத்தியுள்ளனர், ஆனால் இந்த நடைமுறை சில அதிகார வரம்புகளில் சட்டவிரோதமானதாகக் கருதப்படுகிறது. கவனச்சிதறல்களைக் குறைக்கவும், தேவையற்ற பயன்பாட்டைத் தடுக்கவும் தொலைபேசி பயன்பாட்டைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் மென்பொருள் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், இந்த ஒழுங்குமுறை முறைகள் தனியுரிமை மீறல் மற்றும் அதிகார வரம்பு மீறல் பற்றிய கேள்விகளை எழுப்புகின்றன. [2] [3]

சான்றுகள்[தொகு]

  1. Essex, Nathan L. (2013). The 200 Most Frequently Asked Legal Questions for Educators. Simon and Schuster. பக். 64–66. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-62087-520-9. 
  2. Magid, Larry (April 14, 2016). "School Software Walks The Line Between Safety Monitor And 'Parent Over Shoulder'". Forbes. https://www.forbes.com/sites/larrymagid/2016/04/14/straddling-the-line-between-spying-and-protecting-students/#1cc212097df9. 
  3. Cook, Henrietta (July 16, 2017). "How schools are tracking students using their mobile phones". The Age. https://www.theage.com.au/national/victoria/how-schools-are-tracking-students-using-their-mobile-phones-20170714-gxb6qq.html. 

வெளி இணைப்புகள்[தொகு]