பல் மீளுருவாக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பல் மீளுருவாக்கம் (Tooth regeneration) என்பது இழையப் பொறியியல் மற்றும் குருத்தணு உயிரியல் துறையில் குருத்தணு அடிப்படையிலான மீளுருவாக்க மருத்துவ செயல்முறை ஆகும். இது சேதமடைந்த அல்லது இழந்த பற்களை தன்னொட்டு குருத்தணுவிலிருந்து மீண்டும் வளர்ப்பதன் மூலம் மாற்றுகிறது.[1]

புதிய உயிர் பொறியியல் முறையில் உருவாக்கப்படப் பற்களின் ஆதாரமாக, உடலக குருத்தணு சேகரிக்கப்பட்டு, தூண்டப்பட்ட பலதிற குருத்தணு செல்லாகத் தூண்டப்படுகின்றன. இவை நேரடியாகப் பல் மென் அடுக்கில் வைக்கப்படலாம் அல்லது புதிய பல்லின் வடிவத்தில் மீண்டும் உறிஞ்சக்கூடிய உயிரியப் பல்படிமமாக[2] வைக்கப்படுகின்றன.[3]

வரலாறு[தொகு]

யங் மற்றும் பலர்[4] முதன்முதலில் 2002-ல் உயிரணுக்களிலிருந்து பற்களை மீண்டும் உருவாக்க முடியும் என்பதை நிரூபித்தார்.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Keishi Otsu; Mika Kumakami-Sakano; Naoki Fujiwara; Kazuko Kikuchi; Laetitia Keller; Hervé Lesot; Hidemitsu Harada (February 4, 2014). "Stem cell sources for tooth regeneration: current status and future prospects". Frontiers in Physiology 5: 36. doi:10.3389/fphys.2014.00036. பப்மெட்:24550845. 
  2. Biopolymer methods in tissue engineering
  3. Hill, David J. (2012-05-10). "Toothless no more – Researchers using stem cells to grow new teeth". Singularity Hub. பார்க்கப்பட்ட நாள் June 16, 2014.
  4. "Tissue engineering of complex tooth structures on biodegradable polymer scaffolds.". J Dent Res 81 (10): 695–700. 2002. doi:10.1177/154405910208101008. பப்மெட்:12351668. https://www.ncbi.nlm.nih.gov/entrez/eutils/elink.fcgi?dbfrom=pubmed&tool=sumsearch.org/cite&retmode=ref&cmd=prlinks&id=12351668. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்_மீளுருவாக்கம்&oldid=3846431" இலிருந்து மீள்விக்கப்பட்டது