பல்லேடியம்-ஐதரசன் மின்முனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பல்லேடியம்-ஐதரசன் மின்முனை (Palladium-hydrogen electrode) என்பது மின்வேதியியல் ஆய்வில் பயன்படுத்தப்படும் பொதுவான நோக்கீட்டு மின்முனைகளில் ஒன்றாகும். [1] இதன் பெரும்பாலான பண்புகள் நிலையான ஐதரசன் மின்முனையை ( பிளாட்டினத்துடன் ) ஒத்திருக்கும். ஆனால், பல்லேடியம் மூலக்கூறு ஐதரசனை உறிஞ்சும் (தன்னுள்ளே கரையச்செய்யும்) திறன் என்ற ஒரு குறிப்பிடத்தக்க அம்சத்தைக் கொண்டுள்ளது-. [2] [3]

மின்முனை செயல்பாடு[தொகு]

ஐதரசன் உறிஞ்சப்படும் போது பல்லேடியத்தில் இரண்டு நிலைகள் இணைந்து இருக்கலாம்:

  • பல்லேடியத்தின் ஒரு அணுவிற்கு 0.025 அணுக்களுக்கும் குறைவான ஐதரசன் செறிவினைக் கொண்ட ஆல்பா-நிலை
  • விகிதவியல் ஒவ்வா வாய்பாடான PdH 0.6 உடன் தொடர்புடைய ஐதரசன் செறிவினைக் கொண்ட பீட்டா நிலை

கரைசலில் H 3 O + அயனிகளுடன் சமநிலையில் உள்ள பல்லேடியம் மின்முனையின் மின்வேதியியல் நடத்தையானது மூலக்கூறு ஐதரசனுடன் பல்லேடியத்தின் நடத்தைக்கு இணையாக உள்ளது.

இவ்வாறு சமநிலையானது ஒரு சந்தர்ப்பத்தில் மூலக்கூறு ஐதரசனின் பகுதியளவு அழுத்தம் அல்லது வளிம விரிதன்மையாலும் மற்ற சந்தர்ப்பங்களில் - கரைசலில் H + -அயனிகளின் செயல்பாட்டின் மூலமும் கட்டுப்படுத்தப்படுகிறது,

பல்லேடியம் ஐதரசனால் மின்வேதியியல் ரீதியாக மின்னேற்றம் செய்யப்படும்போது, மீளக்கூடிய ஐதரசன் மின்முனையுடன் ஒப்பிடும்போது இரண்டு கட்டங்களின் இருப்பு தோராயமாக +50 mV நிலையான ஆற்றலால் வெளிப்படுகிறது. இந்த ஆற்றல் பரந்த அளவில் உறிஞ்சப்படும் ஐதரசனின் அளவிலிருந்து பாதிக்கப்படாததாக உள்ளது. இந்தப் பண்பு பல்லேடியம்/ஐதரசன் நோக்கீட்டு மின்முனையின் உருவாக்கத்தில் பயன்படுத்தப்பட்டது. இத்தகைய மின்முனையின் முக்கிய அம்சமானது, கரைசல் வழியாக மூலக்கூறு ஐதரசனனின் இடைவிடாத குமிழியிடல் இல்லாமலிருப்பது நிலையான ஐதரசன் மின்முனைக்கு முற்றிலும் அவசியம் என்பதாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Operation principle of Pd/H2 reference electrode" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2009-11-07.
  2. A palladium-hydrogen probe electrode for use as a microreference electrode
  3. Palladium-hydrogen electrodes for coulometric titration