பல்ஜிந்தர் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பல்ஜிந்தர் சிங்
தனித் தகவல்கள்
தேசியம்இந்தியர்
பிறந்த நாள்18 செப்டம்பர் 1986 (1986-09-18) (அகவை 35)
பிறந்த இடம்தேரா பாசி, பஞ்சாப், இந்தியா
விளையாட்டு
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)20கி.மீ பந்தயநடை

'பல்ஜிந்தர் சிங் (Baljinder Singh) (பிறப்பு: 18 செப்டம்பர் 1986) ஓர் இந்திய தடகள வீரர் ஆவார். இவர் 20 கி.மீ பந்தய நடையில் போட்டியிடுகிறார். இவர் இலண்டனில் நடந்த 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுகளில் 1:25:39 நேரச் சாதனை படைத்தவர். இவரின் இதுவரையிலான சிறப்பான சாதனை 1:22:12 நேர அளவாகும்.[1]

இவர் இலண்டனில் நடந்த 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுகளில் 1:25:39 நேரச் சாதனை படைத்து ஆடவர் 20 கி.மீ பந்தயநடைப் போட்டியில் 43 ஆம் இடத்தைப் பிடித்தார்.

சொந்த வாழ்க்கை[தொகு]

இவர் பஞ்சாப் மாநில, மோகலி மாவட்டத்தில் சண்டிகார் நகருக்கு அருகமைந்த தேரா பாசியில் பிறந்தார். இவர் தன் விளையாட்டுப் பயிற்சியை பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய மையத்தில் இராம கிருஷ்ணன் காந்தியிடம் பெற்றார்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Biography of Baljinder Singh". International Association of Athletics Federations (IAAF). 24 ஆகஸ்ட் 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 10 July 2012 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. "An introduction to Indian long distance walkers". The Hindu. 9 July 2012 அன்று பார்க்கப்பட்டது.
  3. "The loneliness of the long-distance walkers". The Hindu. 7 July 2012. Archived from the original on 4 பிப்ரவரி 2013. https://archive.today/20130204063607/http://www.thehindu.com/arts/magazine/article3613051.ece. 

வெளி இனைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்ஜிந்தர்_சிங்&oldid=3360161" இருந்து மீள்விக்கப்பட்டது