உள்ளடக்கத்துக்குச் செல்

பலூசிஸ்தான் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பலூசிஸ்தான் பல்கலைக்கழகம்
بلوچستان ء یونیورسٹی
குறிக்கோளுரைرَبِّ زدْنيِ عِلْماً
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
இறைவனே, என் அறிவை அதிகப்படுத்து
வகைபொது பல்கலைக்கழகம்
உருவாக்கம்1970 (1970)
வேந்தர்பலூசிஸ்தானின் ஆளுநர்
துணை வேந்தர்டாக்டர் சபிக்-உர்-ரகுமான்
பதிவாளர்வாலி ரகுமான்
மாணவர்கள்11,000+
அமைவிடம், ,
வளாகம்நகர்ப்புறம்
200 ஏக்கர்கள் (0.81 km2)
நிறங்கள்நீலம், அம்பர், மற்றும் வெள்ளை
        

பலூசிஸ்தான் பல்கலைக்கழகம் (The University of Balochistan சுருக்கமாக UB), பாக்கித்தானின் பலூசிஸ்தானில் குவெட்டா நகர மையப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பொதுப் பல்கலைக்கழகம் ஆகும்.[1][2] இது 1970 இல் பலூசிஸ்தானில் நிறுவப்பட்ட மிகப் பழமையான உயர் கல்வி நிறுவனமாகும்.

வரலாறு

[தொகு]

பலூசிஸ்தான் ஆளுநர் ரியாசு உசேன் பிறப்பித்த கட்டளை மூலம் 1970 அக்டோபரில் இந்த பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. சூன் 1996 இல், பலூசிஸ்தான் மாகாண சட்டமன்றத்தில் 1996 பலுசிஸ்தானிய பல்கலைக்கழக சட்டம் நிறைவேற்றியது. இவ்வாறு இப்பல்கலைக்கழகம் மாகாணத்தின் ஒரே பொதுப் பல்கலைக்கழகமாக மாறியது, கலை, அறிவியல், வர்த்தகம், மனிதநேயம் ஆகியவற்றில் உயர் கல்வியை வழங்கியது.

இது இயற்பியல், வேதியியல் மற்றும் புவியியல் ஆகிய மூன்று துறைகளுடன் தொடங்கியது. காலப்போக்கில் அறிவியல் மேலாண்மை, உயிர் வேதியியல், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மொழிகள், இலக்கியம் ஆகியவற்றுக்கு புதிய துறைகள் நிறுவப்பட்டன. கனிமவியல் சிறப்பு மையம், பாக்கித்தான் ஆய்வு மையம், பகுதி ஆய்வு மையம், பலூசிஸ்தான் ஆய்வு மையம், உயர்கல்வி ஆராய்ச்சிக்கான தடுப்பூசியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப மேம்பட்ட ஆய்வுகளுக்கான மையம் என ஐந்து சிறப்பு மையங்களுள்ளது,

ஒரு சட்டக் கல்லூரி நான்கு துணை வளாகங்களில் மஸ்துங், கரான், பிசின், கில்லா சைபுல்லா என பல இணைக்கப்பட்ட கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் அதிகாரங்கள்

[தொகு]

பல்கலைக்கழகத்தின் அதிகாரங்கள் பின்வருமாறு:

  1. பல்கலைக்கழகப் பேரவை
  2. செயலவை
  3. கல்விக் குழு
  4. பாடப்புலங்கள் வாரியம்
  5. கல்வி வாரியம்
  6. தேர்வு வாரியம்
  7. மேம்பட்ட கல்வி மற்றும் ஆராய்ச்சி வாரியம்
  8. நிதி மற்றும் திட்டமிடல் குழு
  9. இணைப்புக் குழு
  10. ஒழுக்கக் குழு

பாடப்புலங்கள் மற்றும் துறைகள்

[தொகு]

பாடப்புலங்கள் மற்றும் துறைகள்/திட்டங்களின் பட்டியல்:

1. மேலாண்மை அறிவியல், வணிகம் மற்றும் தகவல் அறிவியல் பாடப்புலங்கள்

  • வர்த்தகம்
  • மேலாண்மை அறிவியல்
  • பொருளாதாரம்
  • கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை
  • நூலகம் மற்றும் தகவல் அறிவியல்

2. சமூக அறிவியல் பாடப்புலங்கள்

  • அரசியல் அறிவியல்
  • சமூகவியல்
  • சமூக பணி
  • அனைத்துலக தொடர்புகள்
  • சட்டம்
  • பாக்கித்தான் ஆய்வு மையம்
  • பலூசிஸ்தான் ஆய்வு மையம்
  • பேரிடர் மேலாண்மை மற்றும் மேம்பாட்டு கல்வி

3. கல்வி மற்றும் மனிதநேய பாடப்புலங்கள்

  • ஊடகவியல்
  • பாலின ஆய்வுகள்
  • வரலாறு
  • தத்துவம்
  • உளவியல்
  • நுண்கலைகள்
  • இசுலாமிய கல்வி
  • பகுதி ஆய்வு மையம்
  • கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்

4. இலக்கியம் மற்றும் மொழிகள் பாடப்புலங்கள்

5. அடிப்படை அறிவியல் பாடப்புலங்கள்

  • இயற்பியல்
  • வேதியியல்
  • கணிதம்
  • புள்ளியியல்

6. பூமி மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் பாடப்புலங்கள்

  • புவியியல்
  • நிலவியல்
  • சுற்றுச்சூழல் அறிவியல்
  • கனிமவியலில் சிறந்து விளங்கும் மையம்
  • புதுப்பிக்கத்தக்க ஆற்றல

7. வாழ்க்கை அறிவியல் பாடப்புலங்கள்

  • உடற்பயிற்சி சிகிச்சை
  • உயிர் வேதியியல்
  • தாவரவியல்
  • விலங்கியல்
  • மருந்தகம்
  • நுண்ணுயிரியல்
  • தடுப்பூசி மற்றும் உயிரி தொழில்நுட்பத்தில் மேம்பட்ட ஆய்வுகளுக்கான மையம்

இணைந்த கல்லூரிகள்

[தொகு]

இப்பல்கலைக்கழகத்தில் ஒரு சட்டக் கல்லூரி மற்றும் பலூசிஸ்தான் உழவியல் கல்லூரி உட்பட 88 இணைந்த கல்லூரிகள் உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ranking of University of Balochistan (Ranked at no. 11 in Pakistan)". Higher Education Commission of Pakistan website. Archived from the original on 27 June 2013. பார்க்கப்பட்ட நாள் 22 March 2023.
  2. "Location of Balochistan University". Google Maps website. பார்க்கப்பட்ட நாள் 22 March 2023.