உள்ளடக்கத்துக்குச் செல்

பறக்கும் புலிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1st American Volunteer Group
Flying Tigers personnel
செயற் காலம்20 December 1941 – 4 July 1942
நாடு சீனா
 ஐக்கிய அமெரிக்கா
பற்றிணைப்புஐக்கிய அமெரிக்கா American volunteers
கிளைArmy Air Corps
வகைFighter group
அளவு3 squadrons;
60 aircraft average
சுருக்கப்பெயர்(கள்)"The Flying Tigers"
தளபதிகள்
குறிப்பிடத்தக்க
தளபதிகள்
Claire Chennault

சீன விமானப் படை 1941-1942-ன் முதல் அமெரிக்க தன்னார்வ அமை்பின் செல்லப் பெயர் பறக்கும் புலிகள் ஆகும். பறக்கும் புலிகள் அமெரிக்காவின் தரைப்படை, விமானப்பைட, கப்பற்படை மற்றும் கடற்படை ஆகியவை இணைந்து அமைக்கப்பெற்ற ஒரு அமைப்பு ஆகும். இந்த அமைப்பானது குடியரசுத் தலைவருக்குக் கீழ் இயங்கும் அமைப்பாகும். கிலேயர் லீ சென்னால்ட் இவ்வமைப்பிற்கு தலைமை ஏற்கிறார். சுறா முகம் மூக்கு வடிவம் கொண்ட உருவம் ஒவ்வொரு தனி போர் படை விமானமும், இரண்டாம் உலகப்போரில் தனியாக இனங்கானக்கூடியதாக இருக்கிறது.

ஒவ்வொரு குழுவிலும் 30 போர் விமானங்கள் இருக்கும். அமெரிக்கா இரண்டாம் உலகப்போருக்குள் நுழைவதற்கு முன்னால் இவ்விமானங்களுக்கு சீனாவில் பயிற்சி அளிக்கப்பட்டது. அமெரிக்கப்படை சீனாவிற்கு உதவுவதற்காக ஜப்பானை எதிர்த்துப் போரிட்டன. இந்த குழுவில் உள்ள உறுப்பினர்கள் ஒப்பந்த அடிப்படையில் பழுதுபார்ப்பவர்கள் மாதம் 250 டாலர் சம்பளமும்,படைத்தளபதிகளுக்கு 750 டாலர் சம்பளமும் வழங்கப்பட்டது.இது அவர்கள் அமெரிக்கப் படையில் பெற்றதைவிட மூன்று மடங்கு அதிகம்.இந்த அமைப்பு தனது ஊழியர்களை அமெரிக்க இராணுவத்திலிருந்து தேர்ந்தெடுத்தது.முத்துத்துறைமுகம்,ஜப்பானால் தாக்கப்பட்ட 12 நாட்களுக்குப்பிறகு 1941,டிசம்பர் 20-ல் இக்குழு போரைச் சந்தித்தது.இக்குழு புதுவித யுக்திகளை கையாண்டு இப்போரில் அமெரிக்கா வெற்றியடைய உதவியது.[1][2][3]

அமெரிக்கத் தன்னார்வக் குழு விமான இயக்குபவர்களுக்கு அதிகாரி அந்தஸ்து அளித்தது.இப்போரில் 296 எதிரி விமானங்களை அழித்ததால்,இவர்களுக்கு போரில் பங்குபெற்றமைக்கான கொடையூதியம் வழங்கப்பட்டது.1942 ஜூலை 4-ல் இந்த அமைப்பு கலைக்கப்பட்டது.இந்த அமைப்பிற்குப் பதிலாக அமெரிக்க விமானப்படையைச் சார்ந்த 23-வது போர்ப்படைக் குழுக்கள் நியமிக்கப்பட்டன.பின்னர் இவை 14-வது அமெரிக்க விமானப்படையுடன் இணைக்கப்பட்டது. ஜெனரல் சென்னால்டு தன் தளபதியாவார்.அமெரிக்கத் தன்னார்வ அமைப்பைப் போன்றே 23-வது போர்ப்படைக் குழுவும் வெற்றியைத் தொடர்ந்தது.

மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ford 1991, pp. 30–34.
  2. "American Volunteer Group: Claire L. Chennault and the Flying Tigers – HistoryNet". 12 June 2007. Archived from the original on 2 July 2016. பார்க்கப்பட்ட நாள் 25 June 2016.
  3. Schaller, Michael (1976), "American Air Strategy in China, 1939–1941: The Origins of Clandestine Air Warfare", American Quarterly, 28 (1): 3–19, எண்ணிம ஆவணச் சுட்டி:10.2307/2712474, JSTOR 2712474

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பறக்கும்_புலிகள்&oldid=4100615" இலிருந்து மீள்விக்கப்பட்டது