பர்ஸ் போலுட் சினோங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பர்ஸ் போலுட் என்பவர் வடக்கு யுவான் அரசமரபின் ஒரு கானாவார். இவர் 1517 - 1519இல் ஆட்சி புரிந்தார். பிறகு 1519 - 1531இல் சினோங்காகப் பதவி வகித்தார்.[1] இவரது பெயரான பர்ஸ் போலுட் என்பதற்கு மங்கோலிய மொழியில் "எஃகு புலி" என்று பொருள் ஆகும்.

ஆட்சி[தொகு]

பர்ஸ் போலுட் சினோங் தயன் கானின் மூன்றாவது மகன் ஆவார். தயன் கான் தன்னுடைய பேரனான போடி அலக் கானைத் தனக்குப் பிந்தைய ஆட்சியாளராக நியமித்தார். போடி அலக் கான் தயன் கானின் இரண்டாவது மகனின் மூத்த மகன் ஆவார். தயன் கானின் இறப்பிற்குப் பிறகு பர்ஸ் போலுட் சினோங் பெரிய கானாகத் தன்னைத் தானே அறிவித்துக் கொண்டார். போலுட் கான் மிகவும் இளையவராக இருப்பதாகவும், பெரிய மங்கோலியப் பேரரசை ஆட்சி செய்யச் சிறிதும் அனுபவமற்றவராக இருப்பதாகவும் கூறித் தன்னைக் கான் என்று அறிவித்துக் கொண்டார். சண்டை, ஒன்றிணைப்பு மற்றும் செழிப்பு ஆகியவை இறுதியாக மந்துகை மற்றும் தயன் கானின் ஆட்சியின் போது அடையப்பட்ட பிறகு அவை இழக்கப்படலாம் என்ற பயம் மங்கோலிய மக்களில் சிலர் இடையே இருந்தது. ஒரு மிகுந்த அனுபவமுடைய தலைவர் தேவை என்று அவர்கள் எண்ணினர். இதன் காரணமாகப் பர்ஸ் போலுட் தனக்கான ஆதரவைத் திரட்ட முடிந்தது. எனினும், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தயன் கானின் நான்காவது மகனான தன்னுடைய சித்தப்பாவுடன் போடி அலக் கான் கூட்டணி வைத்தார். பர்ஸ் போலுட் சினோங்கின் ஆட்சிக்குச் சவால் விடுத்தார். சொந்த மங்கோலியர்கள் மத்தியில் இரத்தம் சிந்துவதைத் தவிர்ப்பதற்காக ஒரு முடிவுக்கு இரு பிரிவினரும் வந்தனர். பர்ஸ் போலுட் சினோங் மகுடத்தைக் கைவிடுவார், போடி அலக் கான் மங்கோலியர்களின் புதிய பெரிய கானாவார் என்ற முடிவுக்கு வந்தனர். அதே நேரத்தில் போடி அலக் கானின் மகன்களும் வெவ்வேறு கான்களாகப் பெயரிடப்பட்டனர். எனினும், மங்கோலியர்களின் பெரிய கான் மகுடத்தை இழந்தது பர்ஸ் போலுட்டுக்கு மிகுந்த இழப்பாக இருந்தது. இதற்குப் பிறகு சீக்கிரமே இவர் இறந்து விட்டார். இவர் அல்டன் கானின் தந்தையாவார். அல்டன் கான் வடக்கு யுவானின் மிகச் சிறந்த தலைவர்களில் ஒருவராவார். பர்ஸ் போலுட் ஒயிரட்களுக்கு மற்றும் பிற மங்கோலியப் பிரிவுகளுக்கு எதிராக எதிரான தனது தந்தையின் படையெடுப்புகளின் போது தன் துணிச்சல் மற்றும் சிறந்த இராணுவத் திறமைகளுக்காக மிகப் பரவலாக அறியப்பட்டவர் ஆவார்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்ஸ்_போலுட்_சினோங்&oldid=3638394" இலிருந்து மீள்விக்கப்பட்டது