உள்ளடக்கத்துக்குச் செல்

தயன் கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தயன் கான் (Dayan Khan) என்பவர் வடக்கு யுவான் அரசமரபின் ஒரு கான் ஆவார். இவரது இயற்பெயர் படு மோங்கே ஆகும். இவர் 1479 - 1517இல் ஆட்சி புரிந்தார். இவரது ஆட்சியின் போது செங்கிஸ் கானின் வழித்தோன்றல்களின் கீழ் மங்கோலியர்களை இவர் மீண்டும் ஒன்றிணைத்தார். இவரது பட்டமான "தயன்" என்பதற்கு "ஒட்டு மொத்த"[1] அல்லது "நீண்ட காலத்திற்கு நீடித்து இருக்கிற" என்று மங்கோலிய மொழியில் பொருள். ஏனெனில், ஒன்றிணைந்த மங்கோலியர்களின் நீண்ட காலம் ஆட்சி செய்த கான் இவர் தான்.

தயன் கானும், இவரது இராணி மந்துகையும் ஒயிரட் சக்தியை ஒடுக்கினர். உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் போர்ப் பிரபுக்களால் பயன்படுத்தப்பட்ட தைசி அமைப்பை நீக்கினார். தலன் தெர்கின் என்ற இடத்தில் தயன் கான் பெற்ற வெற்றியானது மங்கோலியர்களை மீண்டும் ஒன்றிணைத்தது. செங்கிஸ் கானின் மக்களாக அவர்களது அடையாளத்தை உறுதிப்படுத்தியது. கிழக்கு மங்கோலியாவின் ஆறு தியூமன்களை இவரது மகன்களுக்கான ஒட்டு நிலங்களாக இவர் பிரித்த முடிவானது மையப்படுத்தப்படாத ஆனால் நிலையான போர்சிசின் ஆட்சியை மங்கோலியப் பீடபூமி மீது ஒரு நூற்றாண்டுக்கு ஏற்படுத்தியது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Б, Даваасүрэн (2000). Батмөнх Даян хаан. உலான் பத்தூர், Mongolia.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)

ஆதாரங்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தயன்_கான்&oldid=3935554" இலிருந்து மீள்விக்கப்பட்டது