பரேசு இரத்வா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரேசு இரத்வா வரைந்த பித்தோரா ஓவியம்

பரேசு இரத்வா (Paresh Rathwa) இந்தியாவின் குசராத்து மாநிலம் சோட்டா உதய்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பாரம்பரிய பித்தோரா ஓவியர் ஆவார்.[1] பித்தோரா என்பது இரத்வா, பில்சு மற்றும் பிலாலா பழங்குடியினரால் சுவர்களில் வரையப்பட்ட ஒரு சடங்கு ஓவியமாகும். 1968 ஆம் ஆண்டு ஆக்த்து மாதம் 17 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.[2] பொருளாதார சிக்கல் காரணமாக 10 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தார்.

இளம் வயதிலேயே பித்தோரா கலைஞர்களுடன் கிராமம் கிராமமாகச் சென்று பயிற்சி எடுக்க ஆரம்பித்தார். 22 ஆவது வயதில் இரத்வா சமூகத்தில் இவருக்கு பித்தோரா கலைஞராக அங்கீகாரம் கிடைத்தது. 1990 ஆம் ஆண்டுவரை கிராமம் கிராமமாக பித்தோரா ஓவியத்தை வரைந்து கொண்டிருந்த இவர் பல்வேறு பன்னாட்டு, தேசிய, மாநில பழங்குடியினர் திருவிழாக்களில் கலந்து கொள்ளத் தொடங்கினார். குறிப்பாக 1995 ஆம் ஆண்டு சப்பானில் நடைபெற்ற பன்னாட்டு ஓவியக் கண்காட்சி மற்றும் 2000 ஆம் ஆண்டில் இத்தாலியில் நடைபெற்ற கண்காட்சி ஆகியவற்றை கூறலாம்.

2023 ஆம் ஆண்டு பரேசு இரத்வாவிற்கு இந்தியாவின் நான்காவது உயரிய குடிமக்கள் விருதான பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "TEDP Beneficiary Paresh Rathwa Gets Prestigious Award". APN News.
  2. "Shri Paresh Rathwa" (PDF). www.padmaawards.gov.in. பார்க்கப்பட்ட நாள் 13 June 2023.
  3. "Padma Awards 2023 announced". www.pib.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-01-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரேசு_இரத்வா&oldid=3757721" இலிருந்து மீள்விக்கப்பட்டது