உள்ளடக்கத்துக்குச் செல்

பரமேக்காவு இராசேந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரமேக்காவு இராசேந்திரன்
இனம்ஆசிய யானை
பால்ஆண்
பிறப்புசுமார் 1943
நிலம்பூர் வனப்பகுதி, கேரளம்
இறப்பு15 அக்டோபர் 2019
பரமேக்காவு
நாடு இந்தியா
அறியப்படுவதற்கான
 காரணம்
திருச்சூர் பூரம், பிற பூரங்கள்
உரிமையாளர்பரமேக்காவு பகவதி கோயில்
உயரம்2.83 m (9 அடி 3 அங்)
Named afterஇராசேந்திரன்

பரமேக்காவு இராசேந்திரன் (Paramekkavu Rajendran ; சுமார் 1943 - 15 அக்டோபர் 2019) கேரளாவைச் சேர்ந்த யானையாகும். 50 ஆண்டுகளுக்கும் மேலாக அதிக எண்ணிக்கையிலான திருச்சூர் பூரங்களில் பங்கேற்று சாதனை படைத்துள்ளது. [1]

பின்னணி

[தொகு]

மற்ற மாநிலங்களில் இருந்து கேரளாவிற்கு கொண்டு வரப்படும் மற்ற யானைகளைப் போலல்லாமல், இராசேந்திரன் நீலம்பூர் காடுகளை சேர்ந்தது. மேலும், அதன் அம்சங்களைப் பொருத்தவரை ஒரு வழக்கமான கேரளாவைச் சேர்ந்த யானையாகும். [2] இராசேந்திரன் யானைப் பிரியர்களிடையே 'இராஜுமோன்' என்று அன்புடன் அழைக்கப்பட்டது. மேலும் மிகவும் புகழ் பெற்ற கேரளத்து யானையான குருவாயூர் கேசவனுடன், குறிப்பாக பெரிய அகன்ற காதுகளுடன் ஒற்றுமை இருப்பதாக நம்பப்படுகிறது. [3] 1955ஆம் ஆண்டு பரமேக்காவு பகவதிக்கு இராசேந்திரனை காணிக்கையாக அளிப்பதற்காக அதன் முன்னாள் அர்ச்சகர் வேணாடு பரமேசுவரன் நம்பூதிரி பக்தர்களிடம் இருந்து ரூ.4000 வசூலித்ததை அடுத்து, தனது 12வது வயதில் இராசேந்திரன் கோயிலுக்குச் சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர், இந்த யானை 1967 முதல் திருச்சூர் பூரத்தின் ஒரு பகுதியாக ஆனது. [4]

சிறப்பு

[தொகு]

1982ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற அனுபவத்திற்காக இராசேந்திரன் ஒரு தனித்துவமான யானையானது. 1982 ஆசிய விளையாட்டு தொடக்க விழாவிற்கு திருச்சூரிலிருந்து தில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்ட 34 பேர் கொண்ட யானைக் குழுவில் இதுவும் ஒன்றாக இருந்தது. [5] திருச்சூர் மாவட்டத்திலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடக்கும் ஆண்டு விழாக்களில், குறிப்பாக ஆறாட்டுப்புழா-பெருவனம் பூரம் போன்ற பல்வேறு விழாக்களில் தெய்வங்களின் சிலைகளை சுமந்து செல்வதற்கும் இது அறியப்படுகிறது.

இறப்பு

[தொகு]

வயது தொடர்பான பிரச்சினைகளால், இராசேந்திரன் அக்டோபர் 2019 15 அன்று இறந்து போனது. [6]

சான்றுகள்

[தொகு]
  1. "Paramekkavu Rajendran, the tusker with maximum Thrissur Pooram participation, dies - The New Indian Express". www.newindianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 2021-01-10.
  2. "Thrissur: Tusker Paramekkavu Rajendran dies - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-10.
  3. "ആനകേരളത്തിൻ്റെ ഗജകാരണവർ; പാറമേക്കാവ് രാജേന്ദ്രൻ ചെരിഞ്ഞു". malayalam.samayam.com (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-10.
  4. "Tusker Paramekkavu Rajendran, a favourite among elephant lovers, passes away". Mathrubhumi (in ஆங்கிலம்). Archived from the original on 2021-01-12. பார்க்கப்பட்ட நாள் 2021-01-10.
  5. "Once a majestic symbol of Thrissur pooram, tusker 'Rajendran' is no more". www.onmanorama.com. பார்க்கப்பட்ட நாள் 2021-01-10.
  6. "Temple elephant Paramekkavu Rajendran passes away". ASIANET.IN (in ஆங்கிலம்). 2019-10-14. Archived from the original on 2021-01-12. பார்க்கப்பட்ட நாள் 2021-01-10.