உள்ளடக்கத்துக்குச் செல்

பயாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பயாஸின் பூட்டிங்க் செயல்முறை (BIOS booting process)

பயாஸ் (BIOS) என்பது Basic Input/ Output System என்ற ஆங்கில சொற்றொடரின் சுருக்கம் ஆகும் . இது வன்பொருளுக்கும் (Hardware ) இயங்குதளத்துக்கும் (Operating System ) இடையே செயல்படும் ஒரு மென்பொருள் (Software ) ஆகும். இது முதன்முதலில் IBM PC கணினிகளில் பயன்படுத்தப்பட்டது .தற்பொழுது X86 கணினிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது .

ஒரு கணினிக்கு மின்சாரம் அளித்தவுடன் மைய செயலகம் முதன் முதலில் பயாஸின் கட்டளைகளேயே செயல்படுத்துகிறது .இதன் முக்கிய பணிகள்,

1. கணினியில் உள்ள வன்பொருட்களை சோதித்தல் மற்றும் அவற்றை உயிர்ப்பித்தல்.உதாரணமாக நினைவகம், விசைப்பலகை,வரைவியல் முடுக்கி (Graphics Card).

2. இயங்குதளத்திற்கு தேவையான கணிணியை பற்றிய விவரங்களை பட்டியலிட்டு , நினைவகத்தில் வைத்தல்.

3.வன்தட்டு நிலை நினைவகம் (Hard Disk Drive )அல்லது USB,அல்லது கணினி வலையமைப்பு(Computer_network) இருந்து இயங்கு தளத்தை நினைவகத்தில் ஏற்றுதல்.

மேலே கூறிய செயல் 3 முடிந்தவுடன் கணினி இயங்குதளத்தின் கட்டுபாட்டில் போய்விடும் .

பயாஸ் கணினியின் முக்கிய வன்பொருட்களில் பழுது இருப்பதை கண்டுபிடித்தால் அதை சிறு எச்சரிக்கை ஒலி மூலம் பயனருக்கு தெரிவிக்கின்றன.

பயாஸ் இயங்குதளத்திற்கு தேவையான,வன்பொருட்களை பற்றிய தகவல்களை,ஒரு கட்டமைக்கப்பட்ட, நெறிப்படுத்தப்பட்ட வழியில் தருகின்றது. இதனால் கணினி தயாரிப்பாளர்கள், தங்கள் கணினிக்கான பயாஸ்-ஐ மட்டும் கணினியின் அமைப்புக்கு ஏற்றவாறு வடிவமைத்தால் போதுமானது.இயங்கு தளங்களை மாற்றி அமைக்க தேவை இல்லை.

ஆரம்ப காலங்களில் பயனாளர் கணினியின் அமைப்புகளை மாற்றி அமைக்க(உதாரணமாக நிலைவட்டில் (HDD) உள்ள இயங்கு தளத்திருக்கு பதிலாகக குறுவட்டில் (CD) இருக்கும் இயங்கு தளத்தை துவக்க (Boot)செய்ய பயாஸ் எந்தவிதமான பயனர் தொடர்பு வழியையும் கொண்டு இருக்கவில்லை.

ஆனால் இப்போதைய பயாஸ்,ஒரு குறிப்பிட்ட விசையை அழுத்தினால்(BIOS setup key) உதாரணமக F1 அல்லது DEL விசை, பயனர் கணினியின் சில அமைப்புகளை மாற்றி அமைக்கும் திரைப்பக்கதை காட்டும். அங்கு பயனர் அவருக்கு தேவைக்கு தகுந்தவாறு அமைப்புகளை மாற்றிக்கொள்ளலாம். ஒரு கணினியின் பயாஸ் திரை படத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

பயாஸ் மென்பொருள், கணினியில், தாய்ப்பலகையில் உள்ள நிலை நினைவகத்தில்(Non -volatile Memory )வைக்கப்பட்டு இருக்கும். கிழே உள்ள படத்தை பார்க்கவும். இந்த நிலை நினைவதில் உள்ள மென்பொருளை வேண்டும் போது அழித்து மாற்றி எழத முடியும்.

இயங்கு தளத்திற்கு பயாஸ் அளிக்கும் சேவைகளில் சில

1) MS DOS போன்ற பழைய இயங்குதளங்கள் உள்ளீடு, வெளியீடு சேவைகளுக்கு பயாசை முற்றிலும் நம்பி இருந்தன.

2)வன் தட்டு, நெகிழ் வட்டுகளில் (Floppy Disk)இருந்து தரவுகளை படிக்க அல்லது அவற்றில் எழுத பயஸ் தரும் சேவைகளையே(Int 13h) நம்பி இருந்தன.

ஆனால் இப்போதைய இயங்குதளங்கள் மேற்கூறிய அடிப்படைச் சேவைகள் 1 மற்றும் 2 ஐ பயன்படுத்துவதில்லையெனினும், இயங்குதளத்தின் முதல் பகுதியை வன்தட்டில் இருந்து நினைவகத்திற்கு ஏற்ற மற்றும் இயங்குதளத்தின் முதல் பகுதியை துவக்கும் போதும் (Boot Process)தேவையான உள்ளீடு மற்றும் வெளியீடுகளுக்கு பயாசின் சேவைகள் தேவைபடுகின்றன.

3)இயங்குதளத்திற்கு கணினியில் நிறுவப்பட்டு இருக்கும் நினைவகத்தின் அளவை சொல்லுதல்.

4)இயங்குதளத்திற்கு கணினியில் உள்ள வன்பொருட்களை திறன் மேலாண்மை செய்ய (Power Management) தேவையான தகவல்களை அளித்தல்(ACPI Tables)

5)கணினியில், முக்கிய வன்பொருட்கள (உதாரணமாக நினைவகம்) தவறாக இயங்கும் போது, இயங்குதளத்திற்கு அதைப்பற்றி அறிவித்தல் (Run-time error handling)

பயனர் தொடர்பு அமைப்பு :

பயாசின் பயனர் தொடர்பு பக்கத்திற்குகணினி துவங்கும் போது விசைப்பலகையில் ஒரு குறிப்பிட்ட விசையை அழுத்தி செல்லலாம். இங்கு பட்டியலிடப்பட்ட விருப்பத் தேர்வுகள் இருக்கும். இதில பயனர் தனக்கு தேவையானவற்றை தேர்ந்தெடுக்கலாம்.

ஒவ்வொரு கணினி தயாரிப்பாளர் மற்றும் பயாஸ் தயாரிப்பாளரை பொருத்து இந்த பட்டியல் மாறுபடும்.

இங்கு பயனர் பொதுவாக செய்யக்கூடிய செயல்கள் சில

1)வன்பொருளை கட்டமைக்க முடியும். எ.கா வன்தட்டு இயக்கத்தை AHCI அல்லது IDE அல்லது RAID முறையில் செயல்பட வைத்தல், குறிப்பிட்ட மையச்செயற்பகுதிகளை மட்டும் இயங்க வைத்தல், இன்னும் பல

2)வன்பொருள் ஒன்றை செயல்படாமல் தடுக்க முடியும்.

3)பயாஸ் பயனர் பக்கத்தை அணுக தேவையான கடவு சொல்லை (BIOS Password) மாற்ற முடியும்.

4)கணினி கடிகாரத்தின் அதிர்வெண்களை கூட்ட குறைக்க முடியும்.

5)எந்தச் சாதனதில் இருந்து இயங்குதளத்தை துவக்குவது என்ற வரிசையை மாற்ற முடியும்.(Changing Boot device order)

ஒருங்கிணைந்த நீடித்த தளநிரல்: (Unified Extensible Firmware Interface)

இன்டெல் மற்றும் பல நிறுவனங்கள் இணைந்து ஒருங்கிணைந்த நீடித்த தளநிரலை வரையறுத்தனர். இது முன்னர் இயங்கி வந்த வரையறுக்கபடாத (non-standard) பயாசுக்கு மாற்றாக வந்துள்ளது .

இணைப்புகள்

[தொகு]

பயாஸ் தயாரிக்கும் நிறுவனங்கள்

புறச்சுட்டிகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயாஸ்&oldid=3704891" இலிருந்து மீள்விக்கப்பட்டது