மேம்பட்ட அமைப்புவடிவாக்கமும் திறன் இடைமுகப்பும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மேம்பட்ட அமைப்புவடிவாக்கமும் திறன் இடைமுகப்பும் (ACPI; Advanced Configuration and Power Interface) என்பது இயங்குதளங்கள், கணினிகளில் உள்ள சாதனங்களை கட்டமைக்க மற்றும் திறன் மேலாண்மை செய்ய ஏற்டுத்தப்பட்ட திறந்த நிலை வரையறை ஆகும்.

இந்த வரையறை முதன் முதலில் 1996 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த இயங்குதளங்களைச் சாராத வரையறையானது கணினியில் உள்ள வன் பொருட்களை கண்டறிய, கட்டமைக்க, திறன் மேலாண்மை செய்ய மற்றும் கண்காணிக்க தேவையான இடைமுகங்களை தருகின்றது. இது Operating System-directed configuration and Power Management (OSPM) எனப்படும் இயங்கு தளத்தால் கட்டமைக்கப்படும் மற்றும் திறன் மேலாண்மை செய்யப்படும் கணினிகளில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது, இதன் மூலம் மேற்கூறிய பணிகள் தள நிரல்கள் மூலம் இல்லாமல் இயங்கு தளத்தினால் செய்யப்படும்.ஏனெனில் ஒரு கணினியில் இயங்குதளமே அதிக நேரம் இயங்குகின்றது , பயனர்களின் செயலிகளை இயக்குகிறது,எனவே இயங்குதளமே எப்பொழுது கணினிக்கு அதிக/குறைந்த திறன் தேவை என்பதை தீர்மானிக்க முடியும்.

ACPI ன் வரையறைகள் முதலில் இன்டெல், மைக்ரோசாப்ட் மற்றும் தோஷிபா ஆகிய நிறுவனங்கள் சேர்ந்து உருவாக்கின, பின்னர் ஹெச்பி, மற்றும் பீனிக்ஸ் சேர்ந்துகொண்டனர். சமீபத்திய பதிப்பு 5.0, டிசம்பர் 06, 2011 அன்று வெளியிடப்பட்டது

மேம்பட்ட அமைப்புவடிவாக்க திறன் இடைமுகப்பு வரையறையானது , மற்ற கட்டமைப்பு மற்றும் திறன் மேலாண்மை செய்ய உருவாக்கப்பட்ட வரையறைகளை(Advanced Power Management,MultiProcessor Specification ,Plug and Play BIOS Specification )ஒன்றாக தொகுத்தலையும் மற்றும் அவற்றை மேம்படுத்துவத்தையும் நோக்கமாக கொண்டுள்ளது . தற்போதைய வன் பொருட்கள் இந்த மேம்பட்ட அமைப்புவடிவாக்க திறன் இடைமுகப்பு வரையறையை பின்பற்றுவதன் மூலம் இயங்குதளங்கள் அவற்றை சிறப்பான முறையில் மேலாண்மை செய்ய உதவிபுரிகின்றன .

விண்டோசு 98 முதல் தற்போதைய இயங்குதளங்கள் அனைத்தும் வன் பொருட்களை கட்டமைக்க மற்றும் திறன் மேலாண்மை செய்ய இந்த வரைமுறைய பயன்படுத்துகின்றன .

தள நிரல் அல்லது பயாசின் பங்கு

தள நிரல்கள் ,ACPIயின் வரையறைகளைப் பின்பற்றி, கணினி வன் பொருட்களை கட்டமைக்க மற்றும் திறன் மேலாண்மை செய்ய தேவையான தகவல்களை பைட் கோட் வடிவத்தில் தருகின்றன. இந்த பைட் கோடானது AML - ACPI பொறி மொழி(ACPI Machine Language)என்று அழைக்கப்படும் , இது முதலில் ASL எனப்படும் ACPI மூல மொழியில்(ACPI Source Language) எழுதப்பட்டு பின்னர் தகுந்த நிரல்மொழிமாற்றிமூலம் பைட் கோடாக மாற்றப்படும்.

திறன் நிலைகள்

பொது நிலைகள்

ACPI வரையறையானது ஒரு கணினி அமைப்பிற்கு நான்கு பொது திறன் நிலைகளையும்(Gx)ஆறு தூங்கும் நிலைகளையும்(Sx)வகுத்துள்ளது.

  • G0 (S0) - இயங்கும் நிலை.இந்நிலையில் கணினியானது இயக்க நிலையில் இருக்கும்.
  • G1 - தூங்கும் நிலை.இந்நிலையில் கணினியானது இயக்கத்தை நிறுத்தி வைத்து இருக்கும்.இது மேலும் பின்வரும் நான்கு நிலைகளாக பிரிக்கப்படுகின்றது.
  • S1-இது கணினியின் தூக்க நிலைகளில் முதல் நிலையாகும். இந்நிலையிலிருந்து இயக்க நிலைக்கு திரும்ப குறைவான கால அவகாசமே தேவைப்படுகின்றது.இந்நிலையில் மைய செயலகத்தின் இடைமாற்றகதிற்கு (CPU Cache) செல்லும் மின்சாரம் துண்டிக்படுகின்றது மேலும் இடைமாற்றகதில் இருக்கும் தரவுகள் WBINVD கட்டளை மூலம் நினைவகத்திற்கு முடுக்கப்படுகின்றன. இநிலையில் மைய செயலகத்தின் இடைமாற்றகத்தை தவிர மற்ற வன் பொருட்களின் (நினைவகம்,மைய செயலகம் ) சூழல்கள்(Hardware Context )பாதுக்கப்படுகின்றன. கணினியின் அணைத்து மின்னணுக் கடிகாரங்களும் நிறுத்தப்படும் (RTC ஐ தவிர). மைய செயலகமானது STOP CLOCK STATE என்னும் மிகக்குறைந்த திறன் நிலைக்கு தள்ளப்படுகின்றது.
  • S2 - இது S1 நிலையை விட குறைவான மின்சாரத்தையே உட்கொள்கிறது.இந்நிலை பொதுவாக கணினிகளில் காணப்படுவதில்லை.
  • S3( Stand By) -இந்நிலையில் நினைவகத்தை தவிர மற்ற பாகங்களுக்கு செல்லும் மின்சாரம் துண்டிக்கபடுகின்றது.இந்நிலைக்கு போவதுற்கு முன்னால் இயங்கு தளமானது அதன் சூழழை நினைவகத்தில் சேமித்து வைக்கும்.S3 நிலையில் இருந்து மீண்டும் இயக்க நிலைக்கு வர கணினி Reset Vector எனப்படும் முதற்கட்டளை இடத்தில் இருந்தே துவங்குகின்றது.
  • S4 (Hibernation ) - இந்நிலையில் கணினியின் அணைத்து பாகங்களுக்கு செல்லும் மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது.இந்நிலைக்கு போவதுற்கு முன்னால் இயங்கு தளமானது அதன் சூழழை(Context) வன்தட்டு நிலை நினைவகத்தில் சேமித்து வைக்கும். S3 நிலையைப் போலவே மீண்டும் இயக்கத்திற்கு வர கணினி முதற்கட்டளை இடத்தில் இருந்தே துவங்குகின்றது.
  • G2(S5) -மென் நிறுத்தம்.இந்நிலையில் மின்சாரம் அளிக்கும் செயலகத்தை(Power Supply Unit) தவிர மற்ற அணைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் துண்டிக்கப்படும். இந்நிலையில் ,S3, S4 நிலைகளைப் போலில்லாமல், இயங்குதளத்தின் எந்தச் சூழலும் சேமித்து வைக்கப்பட்டு இருக்காதென்பதால் இயங்குதத்தில் புகுபதிகை(Log in ) செய்தவுடன் செயலிகளை (Application )மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.
  • G3 -முழு நிறுத்தம் (Mechanical Off)- இந்நிலையில் கணினிக்கு மின்சார தொடர்பு முற்றிலும் நிருத்தப்படுகின்றது .
  • குறிப்பு: G1,G2 போன்ற தூங்கும் நிலைகளில் இருந்து மீண்டும் இயக்க நிலைக்கு கணினியை எழுப்ப (To Wake)சில சமயம் வான் பொருட்கள் வழியே செய்வதுண்டு.உதரணமாக G1,G2 நிலைகளில் இருக்கும் கணினியை,USB சுட்டியை நகர்த்துவதன் மூலம் இயக்க நிலைக்கு கொண்டுவரலாம்.இவ்வாறு செய்ய தளநிரல் மற்றும் இயங்கு தளம் இரண்டும் துணை செய்யவேண்டும்.இது போன்ற சமயங்களில் தாய்ப்பலகையில் உள்ள USB தொகுப்பிற்கு மின்சார தொடர்பு துண்டிக்கப்படாது.மேலும் இந்நிலையில் USB தொகுப்பு மிகக்குறைந்த மின்சாரத்தையே உட்கொள்ளும்.