பயன்பாட்டு கனிம வேதியியல் விருது
பயன்பாட்டு கனிம வேதியியல் விருது (Applied Inorganic Chemistry Award) தொழில் துறையுடன் தொடர்பு கொண்ட வேதியியலின் எந்தவொரு கிளையின் வளர்ச்சிக்காகவும் சிறப்பான பங்களிப்பு அளித்தவர்களுக்காக வழங்கப்படுகிறது.
2008 ஆம் ஆண்டில் இவ்விருது நிறுவப்பட்டது. ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்டு செயல்படும் இராயல் வேதியியல் கழகத்தின் டால்டன் பிரிவு இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை பயன்பாட்டு கனிம வேதியியல் விருதை வழங்கி வருகிறது. இவ்விருதைப் பெறும் அறிஞர் இங்கிலாந்தில் ஒரு விரிவுரை நிகழ்த்துவதற்கான சுற்றுப்பயணமும், £ 2000 பணமுடிப்பும் ஒரு பதக்கமும் பரிசாக வழங்கப்படுகின்றன.[1]
வெற்றியாளர்கள்[தொகு]
ஆதாரம்: [2]
- 2017, மேன்பிரட்டு போச்மான், கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகம். [3]
- 2015 இயி லு, இலினொய்சு பல்கலைக்கழகம், [4]
- 2013 ஆண்ட்ரு ஆர் பேரன், இரைசு பல்கலைக்கழகம். [5]
- 2011 இரசல் இ மோரிசு, செயிண்ட் ஆண்ட்ருசு பல்கலைக்கழகம். [6]
- 2009 யோனாதான் ஆர் தில்வொர்த்து, ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம். [7]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "RSC Applied Inorganic Chemistry Award". http://www.rsc.org/ScienceAndTechnology/Awards/AppliedInorganicChemistryAward.
- ↑ "Applied Inorganic Chemistry Award Previous Winners". http://www.rsc.org/ScienceAndTechnology/Awards/AppliedInorganicChemistryAward/previouswinners.asp.
- ↑ "Manfred Bochmann". https://people.uea.ac.uk/en/persons/m-bochmann.
- ↑ "Yi Lu receives 2015 RSC Applied Inorganic Chemistry Award". 31 May 2015. https://chemistry.illinois.edu/news/2015-05-31/yi-lu-receives-2015-rsc-applied-inorganic-chemistry-award.
- ↑ "People, papers and presentations". 17 February 2014. http://news.rice.edu/2014/02/17/people-papers-and-presentations-188/.
- ↑ Hasani, Ilire; Hoffmann, Robert. "Academy of Europe: Morris Russell". https://www.ae-info.org/ae/Member/Morris_Russell.
- ↑ "Item". http://www.st-annes.ox.ac.uk/about/news/item/article/rsc-award-for-applied-inorganic-che.