பயனர் பேச்சு:Mojosaurus
வாருங்கள்!
வாருங்கள், Mojosaurus, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
--Natkeeran 15:39, 31 ஆகஸ்ட் 2008 (UTC)
நல்வரவு
[தொகு]உங்களின் பங்களிப்புக்கு நன்றி. உங்களின் தொன்மா தொடர்பான கருத்தை முதனமை கட்டுரையாளர் கருத்தில் எடுத்து பதில் தருவார் என்று எதிர்பாக்கலாம். எந்த தயக்கமும் இல்லாமல் நீங்கள் இங்கு பங்களிக்கலாம். நன்றி. --Natkeeran 15:39, 31 ஆகஸ்ட் 2008 (UTC)
- உங்கள் குறிப்புக்களை வைத்துப் பார்க்கும்போது உங்களுக்கு அறிவியலிலும் குறிப்பாக தொல்லுயிரியலிலும் ஆர்வம் இருப்பது புலப்படுகிறது. உங்களைப் போன்றவர்களின் பங்களிப்பு தமிழ் விக்கிப்பீடியாவுக்குத் தேவை. எழுதுங்கள். மயூரநாதன் 15:51, 31 ஆகஸ்ட் 2008 (UTC)
- நன்றி Natkeeran, மயூரநாதன். சில மாதங்களாக தமிழ் விக்கியை படித்து மட்டும் கொண்டிருந்தேன். பங்குபெறும் ஆர்வம் மிக்க உள்ளதால், தொகுத்தலை தொடங்கியுள்ளேன். தங்களைப்போன்ற பழம்பயனிகளைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி :) --Mojosaurus 16:01, 31 ஆகஸ்ட் 2008 (UTC)
விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் உயிரியல்
[தொகு]விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் உயிரியல் திட்டத்தை தொடங்கியாச்சு:) இத்திட்டத்தில் உங்களின் பங்களிப்பு பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது--கார்த்திக் 17:13, 19 ஜூலை 2009 (UTC)
marsupial
[தொகு]marsupial - பைப்பாலூட்டி --Karthi.dr 14:55, 24 ஜூலை 2010 (UTC)
- நன்றி, Karthi.dr :) --Mojosaurus 15:07, 24 ஜூலை 2010 (UTC)
- அ.கி.மூர்த்தியின் அறிவியல் அகராதி மதலைப்பை விலங்கு என்கிறது. placenta என்பதை சூல்கொடி, சூலொட்டு என்கிறது. கூட்டுச்சொற்களில் சூலமைவு என்றும் கூறுகின்றது.--செல்வா 15:13, 24 ஜூலை 2010 (UTC)
- மேலும் சில கருத்துகளை பேச்சு:பாலூட்டி என்னும் பக்கத்தில் இட்டுள்ளேன்.--செல்வா 15:31, 24 ஜூலை 2010 (UTC)
- அ.கி.மூர்த்தியின் அறிவியல் அகராதி மதலைப்பை விலங்கு என்கிறது. placenta என்பதை சூல்கொடி, சூலொட்டு என்கிறது. கூட்டுச்சொற்களில் சூலமைவு என்றும் கூறுகின்றது.--செல்வா 15:13, 24 ஜூலை 2010 (UTC)
நஞ்சுக்கொடி
[தொகு]நஞ்சுக்கொடி (placenta) சரியான நேரத்தில் மருத்துவர்களால் வெளியேறவோ அல்லது வெளியேற்றப்படாமல் கருப்பையிலேயே தங்கிவிடும்போது (retained placenta) குருதி ஓட்டமின்மையாலும் தொற்றுக்களாலும் அழுகி நச்சுத்தன்மையைஉண்டு பண்ணும். நச்சானது ரத்தத்தில் உறிஞ்சப்படும்பெழுது (septicemia) அவை மற்ற உறுப்புகளுக்குச் சென்று பாதிப்பை ஏற்படுத்தும். DIC - disseminated intravascular coagulation எனும் நிலை ஏற்பட்டு உயிரிழப்பை உண்டாக்கலாம்.
placenta குழந்தை பிறக்கும் வரை குழந்தையின் வாழ்வாதாரம். குழந்தை பிறந்த பின்னோ தாய்க்கு நஞ்சு! அது மட்டுமின்றி விலங்கினங்களில் அது சேயின் உயிரையும் பாதிக்கும். (placenta வின் மணத்தால் predators கவரப்படும். அதைத் தவிர்க்கும் பொருட்டு தாய் விலங்கே placenta வைத் தின்று விடும். சிற்றூர்களில் மாடுகளின் நஞ்சுக்கொடியை மணம் வெளியாகாமல் நன்கு கட்டி மரங்களில் தொங்க விடும் வழக்கமுண்டு)--Karthi.dr 18:15, 24 ஜூலை 2010 (UTC)
பங்களிப்பு வேண்டுகோள்
[தொகு]தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 08:28, 21 சூலை 2011 (UTC)
இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011 |
---|
வணக்கம் Mojosaurus,
முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது. மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது. நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி. உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். |