பயனர் பேச்சு:117.208.235.183/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பஞ்சவர்ணம் பதிப்பகம் (Panchavarnampathipagam)
வகைநூல்பதிப்பு, குறுந்தகடுகள் வெளியீடு
நிறுவுகைகடலூர் மாவட்டம், இந்தியா (2011)
நிறுவனர்(கள்)ஆர். பஞ்சவர்ணம்
தலைமையகம்பண்ருட்டி, இந்தியா

எண் 9.காமராஜர் தெரு,
கடலூர் மாவட்டம், பண்ருட்டி - 607 106.


தொலைபேசி: +91-4142 243123,
உற்பத்திகள்நூல்கள், மின்நூல்கள், குறுந்தகடுகள்
சேவைகள்நூல் பதிப்பு,வெளியீடு மற்றும் விற்பனை,
இணையத்தளம்பஞ்சவர்ணம் பதிப்பகத்திற்கான இணையதளம்

பஞ்சவர்ணம் பதிப்பகம் panchavarnampathipagam என்பது கடலூர்மாவட்டம் பண்ருட்டியில் அமைந்துள்ள நூல் வெளியீட்டு நிறுவனங்களில் ஒன்று . 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று ஆர். பஞ்சவர்ணம் என்பவரால் தொடங்கப்பட்ட இப்பதிப்பகத்தின் வழியாக நூல்கள், வருகின்றன.


பஞ்சவர்ணம் பதிப்பகம்[தொகு]

பதிப்பக ISBN - 978-81-923771 பஞ்சவர்ணம் பதிப்பகம், பஞ்சவர்ணம் எழுதும் நூல்களையும், தாவரத் தகவல்மையம் தொகுக்கும் நூல்களையும் வெளியிடும் பணியில் 2012-முதல் ஈடுபட்டுள்ளது.

பதிப்பகத்தின் முதல் நூலும், ஆசிரியர்ரின் முதல் நூலுமான "பிரபஞ்சமும் தாவரங்களும்" புத்தகம் சிறந்த நூலகவும், சிறந்த ஆசிரியராகவும் தேர்வு செய்து பாராட்டும் வகையில் அமைந்துள்ளது.

பிரபஞ்சமும் தாவரங்களும்[தொகு]

புத்தக ISBN - 978-81-923771-0-0

"பிரபஞ்சமும் தாவரங்களும்' என்ற நூலில் வானசாஸ்த்திரங்களுடன் தொடர்புடைய (நவகிரகங்கள், நட்சத்திரங்கள், ராசிகள், திசைகள்) தாவரங்களை இனம் கண்டு தமிழ் ,ஆங்கில தாவர இயல் பெயர்கள், மருத்துவத் தன்மை, எளிதில் அடையாளம் காண ஒளி படங்களுடன், வழக்கத்தில் இருந்து மறைந்து வரும் தாவரங்களை பற்றிய பழமொழிகள், விடுகதைகள், மருத்துவத் தொகைப் பெயர்கள், தலமரமாக உள்ள ஊர்கள் என அனைத்தையும் தொகுத்து 85-தாவரங்களின் வண்ண படங்களுடன் வடிவமைக்கப் பட்டுள்ளது.

கபிலரின் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்[தொகு]

புத்தக ISBN - 978-81-923771-1-7

சங்க இலக்கியத் தாவரங்களை தொகுக்கும் பணியில் முதற் கட்டமாக குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்களைப் புத்தகமாக வெளியிட முடிவெடுக்கப் பட்டுக் குறிஞ்சிப் பாட்டில் கபிலரால் பட்டியலிடப் பட்டுள்ள 112 தாவரங்களை தாவரவியல் விளக்கங்கள் மற்றும் ஒளிப் படங்களுடன் 'குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்' என்ற பெயரில் புத்தகம் வெளியிடப்படுகிறது. இதை முதன்மையாக வெளியிட்டதின் நோக்கம் சங்க இலக்கியங்களில் அறியப்பட்ட 240-க்கும் மேற்பட்ட தாவரங்களில் 112 தாவரங்கள் கபிலரால் குறிஞ்சிப் பாட்டுப் பாடலில் ஒரே பாட்டில் (261-வரிகளில்) 112 தாவரங்களின் பெயர்களை பயன்படுத்தியதுடன் 35 தாவரங்களை அடைமொழியுடன் இருசொற் பெயரை பயன்படுத்தி உள்ளதால் (குறிப்பாக 33 வரிகளில் 102 பூக்கள்) இதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. தொல்காப்பிய இலக்கணத்தின் அடிப்படையில் சங்க காலத்தில் பெயர்கள் அமைந்துள்ளதையும். 2 முதல் 5-ம் நூற்றாண்டுகளில் (2000-ஆண்டுகளுக்கு முன்பாக) மாநாடு கூட்டாமல், சட்டங்கள் வகுக்காமல் தமிழில் புறத்தோற்றப் பண்புகளை (Morphology character) வைத்து இரட்டைப் பெயரை பயன்படுத்தி உள்ளது தெரிய வந்ததையும். கபிலர் தனது குறிஞ்சிப் பாட்டில் பயன்படுத்திய 112 தாவரங்களில் 35 தாவரங்களுக்கு புறத்தோற்ற பண்புகளை அடைமொழியாக வைத்து இருசொற் பெயரை வழங்கி உலகிற்கு முன்னோடியாக இருந்ததையும் இந்த புத்தகம் உலகிற்கு உணர்த்துகிறது.

தொல்காப்பியரியன் தொல்காப்பியத் தாவரங்கள்[தொகு]

புத்தக ISBN – 978-81-923771-3-1


"தொல்காப்பியரியன் தொல்காப்பியத் தாவரங்கள்" என்ற இந்த நூலில் தொல்காப்பியர் நிலத்திணைகளின் பெயராகப் பயன்படுத்தியத் தாவரங்கள் : (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை) போர் முறை, போர் நிகழ்வு மற்றும் போர் வீரர்களுக்கு அடையாளமாகப் பயன்படுத்தியத் தாவரங்கள் : (உழிஞை, உன்னம், கரந்தை, காஞ்சி, தும்பை, நொச்சி, பாசி, போந்தை, வஞ்சி, வாகை, வெட்சி) மருந்தாகக் கூறப்படும் தாவரங்கள் : (கடு, வேம்பு) சொல்லாக்கத்திற்குப் பயன்படுத்திய 26 தாவரங்கள் : (அரை, ஆண்மரம், ஆல், ஆர், ஆவாரை, இல்லம், உதிமரம், எகின், ஒடுமரம், கடு, குமிழ், சார், சேமரம், ஞெமை, தளா, நமை, நெல், பனை, பிடா, பீர், புளி, பூல், மா, யா, விசை, வெதிர், வேல்) வழ்பாட்டு முறைக்குப் பயன்படுத்தியத் தாவரம் : (காந்தள்) கூத்து, ஓவிய முறைக்குப் பயன்படுத்தியத் தாவரங்கள் : (வள்ளி, வள்ளை) மரபுப் பெயராக புல் என 48 தாவரங்களை கண்டறிந்து தாவரங்களின் ஆங்கிலப்பெயர், வகைப்பாட்டியல், தாவர விளக்கங்கள், சொல்லாக்க விளக்கங்கள், தாவரங்களின் வண்ணப்படம் மற்றும் தொல்காப்பிய பாடல் முழுவதுமாக தொகுத்து இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]