பயனர் பேச்சு:முகில் பதிப்பகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மின்னஞ்சல் தொடர்பு[தொகு]

வணக்கம்,

நலமாக இருப்பீர்கள் என்று எண்ணுகிறோம். தங்களால் நாம் உருவாக்கிய பக்கம் நீக்கப் பட்டுள்ளது. அதற்கான காரணத்தை தெரிந்துக் கொள்ளலாமா?

அப்படி என்ன எழுத்தாளர் வித்யாசாகரின் மேல் கோபம் உங்களுக்கு? அல்லது ஏதேனும் உரித்த தகவல் இருப்பின் தெரிந்துக் கொள்ள விழைகிறோம்.

மிக்க நன்றிகளுடன்..

வித்யாசாகர்

வித்யாசாகர்,
உங்கள் மீது எந்த வித தனிப்பட்ட அபிப்பிராயமும் கிடையாது. ஒருவரை பற்றி அவரே (அல்லது அவரது வணிக நிறுவனம்) கட்டுரை எழுதுவதை விக்கியில் அனுமதிப்பதில்லை. அவ்வாறு எழுதுவது நடுநிலையாக இருக்க முடியாது என்பது விக்கியின் நிலை. இது உங்களை குறி வைத்து உருவான கொள்கையல்ல, இது போல பல பிற நபர்களுக்கும் நடந்துள்ளது. நீங்கள் உங்களைப் பற்றி உங்கள் பயனர் பக்கத்தில் எழுதினால் விக்கிக்கு ஒரு மறுப்பும் கிடையாது.- பயனர்:முகில் பதிப்பகம். நீக்கப்பட்ட பக்கத்தை உங்கள் பயனர் பக்கத்தில் இட வேண்டுமென்றால் சொல்லுங்கள் அதனை மீட்டு உங்கள் பயனர் பக்கத்தில் இட்டு விடுகிறேன்.--சோடாபாட்டில் 13:39, 5 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]


வணக்கம்,

தகவல் அறிந்தேன். விக்கியில் நம்மை பற்றி எழுதிக் கொள்ள வர்த்தக ரீதியாகவோ விளம்பரத் தனமாகவோ நமக்கு எந்த நோக்கமும் கிடையாது. நம் படைப்புகள் சார்ந்த விவரங்களை எல்லோரும் நேரிடையாக அறிய விக்கி ஒரு சரியான தளம் என்பது மட்டுமே எண்ணம்.

தவிர, அதை கூட திரு. நக்கீரன், கனடா, அவர்கள் பகுப்பு: தமிழ் எழுத்தாளர்கள் என்ற பக்கத்தில் தானே பதிந்து வைத்திருந்தாரகள். அதுபோல் இட்டாலும் கூட போதுமானது தான். பயனர்: முகில் பதிப்பகம் என்று தான் வர வேண்டும் என்றில்லை.

இதுபோல் அகற்றுவதை சற்று அந்த சம்மந்தப் பட்ட பக்கத்திற்கு ஒரு மின்னசல் தகவல் மூலம் தெரிவித்துவிட்டு நகர்த்துவது சற்று அவர்களுக்கு அகற்றப் பட்டதன் காரணம் அறிந்துக் கொள்ள ஏதுவானதாக இருக்கும்.

தவிர, ஒரு பதிப்பகத்தின் தகவலை தாங்கள் தவறான கருத்தை பகிர்ந்தது போல், ஆராயாமலே சந்தேகித்து மட்டும் அகற்றிவிடுவதும் அத்தனை சிறப்பொன்றும் இல்லை. தகவல் பரிமாறும் நோக்கத்தில் பதியப் பட்ட; சரியான தகவல் எனும்பட்சத்தில் அதை அனுமதிப்பதில் எந்த இடர்பாடுமில்லை. விக்கியின் பயன்பாட்டின் நோக்கமே சரியான தகவலை போதுவானவர்களிடம் பகிர்ந்துக் கொள்ளத் தானே. எனினும் அது விதி மீருதலுக்குட்பட்டு பதியப் பட்டுள்ளதெனில் அது அகற்றப் பட்டதாகவே இருக்கட்டும். (மின்னஞ்சல் செய்தி)

>>இதுபோல் அகற்றுவதை சற்று அந்த சம்மந்தப் பட்ட பக்கத்திற்கு ஒரு மின்னசல் தகவல் மூலம் தெரிவித்துவிட்டு நகர்த்துவது சற்று அவர்களுக்கு அகற்றப் பட்டதன் காரணம் அறிந்துக் கொள்ள ஏதுவானதாக இருக்கும்.
இதை நான் செய்திருக்க வேண்டும். செய்யாமல் விட்டதற்கு வருந்துகிறேன்.
தவிர, ஒரு பதிப்பகத்தின் தகவலை தாங்கள் தவறான கருத்தை பகிர்ந்தது போல், ஆராயாமலே சந்தேகித்து மட்டும் அகற்றிவிடுவதும் அத்தனை சிறப்பொன்றும் இல்லை. தகவல் பரிமாறும் நோக்கத்தில் பதியப் பட்ட; சரியான தகவல் எனும்பட்சத்தில் அதை அனுமதிப்பதில் எந்த இடர்பாடுமில்லை.
இதில் தவறான கருத்து/சரியான கருத்தென்று பகுத்துப்பார்ப்பதில்லை. இக்கட்டுரையை நீக்கியதால் நீங்கள் செய்தது தவறு என்ற பிம்பம் உருவாகப் போவதுமில்லை. அதைப்போன்று ஒரு தோற்றத்தை உருவாக்குவது எனது நோக்கமுமல்ல. நான் முன் சொன்னது போல இதற்கு முன்னர் இது போல பலரது கட்டுரைகளை (எழுத்தாளர்கள்) உடபட பலரது கட்டுரைகளை நீக்கியுள்ளோம். மேலும், இதில் விதிமுறைகளை அனைவருக்கும் ஒரே போல கடைபிடிப்பதால் ஆராய்ச்சி என்பதும் சாத்தியமல்ல. விக்கி ஒரு நடுநிலைக் கலைக்களஞ்சியம் என்பதால், இது போல சற்றே கடுமையான விதிகளை பின்பற்ற வேண்டிய நிலையில் உள்ளோம். --சோடாபாட்டில் 14:26, 5 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]


//நான் முன் சொன்னது போல இதற்கு முன்னர் இது போல பலரது கட்டுரைகளை (எழுத்தாளர்கள்) உடபட பலரது கட்டுரைகளை நீக்கியுள்ளோம்//

தங்களின் உடனடி தகவலுக்கும் பொறுப்பேற்றளுக்கும் நன்றி. பிறகு நீக்குவதை மட்டுமே நீங்கள் செய்தால், அவர்களைப் பற்றிய தகவல்களை இங்கே எப்படி சேமிப்பது? நேரிடையாக பதிகிறார்கள் என்று அகற்றி மட்டுமே விட்டால் போதுமா? அதை தான் யார் வேண்டுமானாலும் செய்யலாமே? அதற்கு மாற்று வழி என்ன? முறையாக ஒரு படைப்பாளியை பற்றி நாம் ஒரு கட்டுரை அலல்து விவரத்தை விக்கியில் பதியவோ செகரிக்கவோ எண்ணினால், எண்ணுபவர்கள் பிறகு எப்படி செய்துக் கொள்வது?

விவரம் அறிந்துக் கொள்ளும் நோக்கில் மட்டுமே கேட்கிறேன். (மின்னஞ்சல் செய்தி)

விக்கிப்பீடியா என்பது ஒரு தகவல் களஞ்சியம். நேரடி ஆய்வுகளின்/தகவல்களின் தொகுப்பல்ல. சொந்த ஆயுவுகளும், கட்டுரைகளும் இங்கு ஏற்கப்படுவதில்லை (உலகளாவிய அனைத்து விக்கிப்பீடியாக்களிலும் இதுவே கொள்கை). ஏற்கனவே பிற ஊடகங்களில் (நூல்கள், தொலைக்காட்சி, இணைய இதழ்கள்) பதிவான தகவல்களைத் தொகுக்க மட்டுமே செய்கிறோம். ஒரு படைப்பாளியைப் பற்றி பிற ஊடகங்களில் வெளியானால் அவற்றின் அடிப்படையில் இங்கு கட்டுரைகள் எழுதப்படலாம்.
முறையாக ஒரு படைப்பாளியை பற்றி நாம் ஒரு கட்டுரை அலல்து விவரத்தை விக்கியில் பதியவோ செகரிக்கவோ எண்ணினால்
இதற்கு முதலில், நீங்கள் அப்படைப்பாளியுடன் தொடர்பில்லாதவராக இருத்தல் அவசியம். இரண்டாமது புறச்சான்றுகளின் அடிப்படையில் சேர்க்க வேண்டும். மற்ற விஷயங்களைப் பற்றி எழுதும் போதும் இதுவே நிலை - ஆதாய முரண் (conflict of interest) இல்லாதிருக்க வேண்டும்; சேர்க்கப்படும் தகவல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ள புறச்சான்றுகளின் அடிப்படையில் (சொந்த ஆய்வுகள் இல்லாது) இருக்க வேண்டும்.--சோடாபாட்டில் 14:52, 5 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

இக்கொள்கையை விரிவாக இங்கே படியுங்கள் - விக்கிப்பீடியா:தன்வரலாறு

விதிகளுக்கு மீறியது என்று நான் உங்களுக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே உங்களது கட்டுரையை மீண்டும் உருவாக்குகிறீர்கள். இதனை மீண்டும் நீக்குகிறேன். இத்தகு செயல்களைத் தயவு செய்து செய்யாதீர்கள்--சோடாபாட்டில் 14:57, 5 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]


அப்படி எல்லாமில்லை. எப்படி பதிவதென்பதைத் தான் பார்த்துக் கொண்டிருந்தேன். விவரம் அறியப் பட்டது. இருந்தாலும், மிக சிறுபிள்ளையை பரிகாசிப்பது போல் உள்ளது உங்களின் பதிவு நீக்கும் செயல்பாடுகளும், அதற்கு நீங்கள் எழுதும் காரணமும். போகட்டும். நாளை விழுந்து விழுந்து உலகம் எழுதும் காலம் வரும். நிச்சயம் வரும். (மின்னஞ்சல் செய்தி)

நான் முன்பு சொன்னதைப் போல இது உங்களுக்கும் எனக்குமான தனிப்பட்ட பிரச்சனை அல்ல. விக்கியின் விதிகளை பின்பற்றுகிறேன் அவ்வளவே. --சோடாபாட்டில் 15:58, 5 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

வித்யாசாகருக்கு வேண்டுகோள்[தொகு]

அருள்கூர்ந்து, பயனர் சோடாபாட்டில் செய்தது விக்கியின் கொள்கைகள், நடைமுறை முதலியவற்றைப் பின் பற்றியனவே என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டுகிறேன். பல்கலைக்கழக துணைவேந்தர் முதல் பெரும் எழுத்தாளர்கள் வரை பலருடைய சில கட்டுரைகளையும், அவை வழிமுறைகள் மீறி இருந்ததால் நீக்க வேண்டியிருந்தன. இச்செயற்பாடுகளை, அருள்கூர்ந்து தனிப்பட்ட முறையில் நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டாம். இங்கு உழைப்பவர்கள் நன்னோக்கத்துடனும் பொதுநலம் கருதியும், முறை சார்ந்தும் உழைக்கின்றார்கள். பங்களிக்கும் யாருடைய நடைமுறையோ அல்லது செயற்பாடோ தவறென்று நீங்கள் நினைத்தால் தொழிலிய நேர்த்தியுடன் உரையாடி சீர் செய்துகொள்ளலாம். சற்று பொறுமையுடன் அணுகுமாறு வேண்டிக்கொள்கிறேன். இக்கலைக்களஞ்சியம் ஒரு விளம்பரப் பலகை அல்ல தேர்வு செய்யாத "பொது தகவல் தளம்" அல்ல என்பதையும் புரிந்துகொள்ளுங்கள். உங்கள் கட்டுரை அபப்டிப்பட்டது என்று நான் கூறவில்லை, ஆனால் இக்கலைக்களஞ்சியத்தைப் பற்றிக் கூறுகின்றேன். கலைக்களஞ்சியத்துக்கு ஏற்றவாறு தகவல்களைச் எப்படிச் செதுக்கி இடலாம் என சிந்திக்க வேண்டுகிறேன்.--செல்வா 15:22, 6 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

திரு. செல்வா மற்றும் திரு. சோடாபாட்டில் அவர்களுக்கு[தொகு]

அன்பு வணக்கம்,

எல்லோரும் நலமொடிருக்க, எல்லோரும் எல்லாமும் பெற மனநிலை கொள்வோம். தாமத மடலிற்கு காரணம் இன்றே கான நேர்ந்தது என்றாலும்; வருந்துகிறேன். மேலுள்ள உரையாடலில் 'சோடாபாட்டில்' அவர்கள் என்னிடம் முன்பு பகிர்ந்து கொண்ட உரையாடல் (கீழுள்ளவை) சற்று திருத்தப் பட்டுள்ளது.

//விதிகளுக்கு மீறியது என்று நான் உங்களுக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே உங்களது கட்டுரையை மீண்டும் உருவாக்குகிறீர்கள். இதனை மீண்டும் நீக்குகிறேன். இத்தகு செயல்களைத் தயவு செய்து செய்யாதீர்கள்--சோடாபாட்டில் 14:57, 5 திசம்பர் 2010 (UTC)//

முன்பு அவர் //விதிகளுக்கு மீறியது என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வரலாறு எழுதுகிறார்// என்று எழுதியதாக நினைவு.

தவிர இத்தனை நீங்கள் வருத்தம் கொண்டு வேண்டுகோள் விடுக்க எல்லாம் வேண்டாம் மதிப்பிற்குரியோரே. அன்று நீக்கப் பட்டு விட்டதே ஏதேனும் தனிப் பட்ட நபர் சார்ந்த செயலோ என்று எண்ணிய வருத்தத்தில் தான் பொது இடத்தில் கூட இப்படி செய்கிறார்களே என்று முதல் மடல் வரைந்தேன். பிறகு பொறுப்பானவர் ஒருவரின் செயல் இப்படி இருக்கிறதே என்ற எண்ணத்தில் அலல்து உணர்சிவயத்தில் கடைசி மடல் வரைந்தேன். ஆனாலும் யார் மீதும் எனக்கெந்த தனிப்பட்ட வருத்தமில்லை. அவரின் பணியை அவர் செவ்வனே செய்திருக்கிறார். அதற்கு மெய்யூட்டும் வகையிலேயே இப்பதிவுகள். பகிர்தல்கள். என்றாலும் இது ஒரு படைப்பாளியை இப்படியும் பாதிக்கலாம் என்று உணர்கையில் அவ்வாறு அவர் தன் அடுத்த கட்ட பணியை அதன் போக்கிற்கு ஏற்றவாறு மாற்றி மேற்கொள்வதும் சற்று அவருக்கே மதிப்பு தானே கூட்டும்.

பயனர் சோடாபாட்டில், நீங்கள் மற்றும் யாரேனும் இம்மடல் காண்கையில் வருத்தமடையின் மன்னியுங்கள். ஒரு பொது இடத்தை பாதுகாக்க சில திடமான கட்டுப் பாடுகள் தேவை தான் அதை நான் என்றுமே மறுக்கவில்லை. எந்த எதிர்பார்ப்புமின்றி இதுவரை செய்துவரும் தமிழ் மற்றும் தமிழர் சார்ந்த பல பணிகளின் நிமித்தமே; ஒரு வருத்தம் வந்ததே அன்றி. அதை புரிந்துக் கொள்ளவோ, தங்களின் நியாயமான கட்டுப்பாட்டு விதியை ஏற்றுக் கொள்ளா அளவிற்கோ அல்ல.

எதுவாயினும், வருத்தமாக கருத்தில் கொள்ளாது, தங்களின் தமிழ் பணியை தொடருங்கள். தமிழாள்; அவளுக்காய் உழைப்போரை ஒரு காலும் இகழவோ இடரவோ விடமாட்டாள். நம்புவோம்..

மிக்க அன்பும், மிக்க நன்றியுணர்வும், தவறிருப்பின் அதனால் உள்ளம் வருந்தி இருப்பின் மன்னிப்பு கோரிய மன நிலையோடும்..

வித்யாசாகர்

www.vidhyasaagar.com

06/01/2011