பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்/இந்திய விக்கிகளும் தமிழ் விக்கியும் ஓர் ஒப்பீடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலையாள விக்கிப்பீடியரான Shiju Alex அனைத்து இந்திய விக்கிகளின் நிறை குறை பற்றி நன்கு அறிந்தவர். அவரது உதவியை நாடலாம். http://shijualex.in/analysis-of-the-indic-language-statistical-report-2012/ கட்டுரை நிறைய விவரங்களைத் தருகின்றது. தமிழின் நிறை குறைகளைத் தாராளமாக அலசலாம். ஆனால், பிற விக்கிகளின் குறைகளாகச் சுட்டுவனவற்றைப் பெரும்பாலும் தரவு அடிப்படையில் செய்வது நல்லது. அகவயமான கருத்துகளை அந்தந்த விக்கியின் உறுப்பினர்களிடம் உறுதி செய்து கொண்டு அவர்கள் கூற்றாகவே மேற்கோள் காட்டுவது சிறந்தது. இது தொடர்பாக மலையாளம், வங்காளம், தெலுங்கு, கன்னட மொழி விக்கிகளில் உள்ள நண்பர்களை அறிமுகப்படுத்தித் தர முடியும். நன்றி.--இரவி (பேச்சு) 07:35, 29 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

நன்றி இரவி! மேற்கூறிய உதவிகளைக் கேட்க எண்ணியிருந்தேன். நீங்களே முன்வந்து கூறிவிட்டீர். ஓவ்வொரு மொழி விக்கியிலும் தலா இரண்டு பயனர்களை அறிமுகப்படுத்தினால் நலம். கருத்துகளை உறுதி செய்திடுவேன். புள்ளிவிவரங்களை அலசுவதில் உதவி தேவைப்படும். அப்போது கேட்கிறேன். அவ்வப்போது நான் எழுதியுள்ளவற்றைக் கண்டு, அவற்றில் பொருத்தமற்ற, ஆதாரமற்ற தகவல்களைச் சுட்டிக் காட்டவும். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:34, 29 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]


மலையாளம், தமிழ், இந்தி விக்கிப்பீடியாக்களின் இன்றைய நிலை --Natkeeran (பேச்சு) 13:35, 11 செப்டம்பர் 2013 (UTC)