பயனர்:Ravidreams/தேனி சுப்பிரமணி நிருவாக அணுக்கல் நீக்கல் காலக்கோடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேனி சுப்பிரமணி நிருவாக அணுக்க நீக்கல் வாக்கெடுப்பு தொடர்பான காலக் கோடு. இச்சிக்கலைத் தொடக்கத்தில் இருந்து கவனித்துப் புரிந்து கொள்ள இயலவில்லை என்பவர்களின் வசதிக்காக இக்காலக் கோடு எழுதப்படுகிறது. இது தனி ஒருவரின் பார்வையில் இருந்து எழுதப்படுவது என்பதால் மாற்றுக் கருத்து / பார்வை உள்ளோர் இது போன்ற காலக்கோடுகளை தங்கள் பயனர் வெளியில் இட்டுக் கொள்ளலாம். சுருக்கம் கருதி சில தகவல், பின்னணி விடுபட்டிருக்கலாம். என்னுடைய பெயர்வெளியில் உள்ள பக்கத்தை வேறு யாரும் தொகுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

---

  • கடந்த சில ஆண்டுகளாகவே:

தன்னுடைய கட்டுரைகளில் இருந்து தனது வலைப்பக்கங்களுக்கு இணைப்பு தருதல், தன்னைப் பற்றியும் தன் நூல்களைப் பற்றியும் தானே எழுதுதல், தன்னுடைய நூல் விற்பனைத் தளங்களுக்கு இணைப்பு தருதல், அவருடன் தொழில்முறை உறவுள்ள பதிப்பகத்தாரின் நூல்களிலும் இவ்வாறே பங்களித்தல் என்று தேனி சுப்பிரமணி செயல்பட்டு வந்தார். இது விக்கிப்பீடியா கொள்கைகளின் படி தவறு. ஆனால், தற்போது தான் சுட்டிக்காட்டப்படுகிறது. சுட்டிக்காட்டினாலும் அவர் இவற்றைத் திருத்திக் கொள்ளவில்லை.

  • 2013 பிப்ரவரி - தேனிக்கு அருகே உள்ள மதுரை உலகத் தமிழ் மையத்தில் தமிழ் விக்கிப்பீடியா பரப்புரைக்கு ஒரு தனிப்பிரிவு கோரி தமிழக அரசு உயர் அலுவலர் மூலம் தமிழக அமைச்சுகளைத் தொடர்பு கொள்கிறார். யாரையும் கலந்து கொள்ளாமல், விக்கிப்பீடியாவில் வெளிப்படையாக உரையாடாமல் செய்த இந்த நகர்வு கவனத்துக்கு வந்து இறுதி நிமிடத்தில் அவர் இந்த முயற்சியைப் பின்வாங்குகிறார்.
  • 2013 நடுப்பகுதியில் - தமிழ் விக்கிப்பீடியர்கள் சிலரின் பணியை உண்மைக்கு மாறாக கூறி தமிழ் கம்பியூட்டர் இதழில் கட்டுரை எழுதுகிறார். மற்றவர்கள் உண்மை நிலையை எடுத்துக் கூறியும் கட்டுரைக்கு மறுப்பு வெளியிட மறுக்கிறார். இது தொடர்பாக விக்கிப்பீடியாவிலும் உரையாட மறுக்கிறார்.
  • 2013 அக்டோபர், நவம்பர், திசம்பர்

தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு நிகழ்வு நடத்தியது தொடர்பாக கடுமையான விமர்சனம், தனிமனிதத் தாக்குதலில் இறங்குகிறார். இவருடன் தொழில்முறை உறவிலும் நட்பிலும் உள்ள சேகரன் இன்னும் கடுமையான தாக்குதலில் இறங்குகிறார். இது கையாள் பயன்பாடு என்று முறையீடு பிற்காலத்தில் முன்வைக்கப்படுகிறது. ஆனால், யாரும் இதுவரை விசாரிக்கவில்லை.

இரவி இந்த விமர்சனங்களுக்கான எதிர்வினை ஆற்றுகிறார்.

அதில் தேனி சுப்பிரமணி அரசு சலுகைகளை எதிர்பார்த்து இயங்குகிறார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்ததை அடுத்து தேனி சுப்பிரமணி தான் தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து விலகுவதாக அறிவிக்கிறார்.

அடுத்த இரு வாரங்களில் பயனர்கள் விக்கிப்பீடியா மூலமாகவும் தொலைப்பேசி மூலமாகவும் வேண்டுகோள் விடுத்து தேனி சுப்பிரமணியை அழைத்து வருகின்றனர்.

தேனியின் இந்த மீளவரவுக்குப் பிறகு திடீரென சில அடையாளம் காட்டாத பயனர்கள் தோன்றி தேனி மீது பல்வேறு கேள்விகளை அடுக்கிறார்கள்.

இராசன் என்றொரு புதிய பயனர் வந்து இவரை நிருவாக அணுக்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைக்கிறார். இந்த ஐயப்பாடு இரவி, புருனோ, சூரியா ஆகியோர் மீது சாட்டப்படுகிறது. ஏனெனில், இவர்கள் தான் தொடக்கத்தில் இப்பிரச்சினை குறித்து தீவிரமாக கருத்து கூறி வந்தவர்கள்.

தவிர, தேனி சுப்பிரமணிக்கு மின்மடல் மூலமாகவும் பல மோசமான கடிதங்கள் வந்ததாக முறையிடுகிறார். இந்தப் பழியும் இராசன் அல்லது அவருக்குப் பின்னே உள்ளதாக கருதப்படுபவர்கள் மேல் விழுகிறது.

இதற்கு இடையில் நடைபெற்று வந்த புதிய நிருவாகிகள் தேர்தலை ஒட்டி தோன்றிய இரண்டு புதிய பயனர்கள் இரவி மீது கடுமையான தனிமனிதத் தாக்குதலில் இறங்குகிறார்கள்.

தேனி சுப்பிரமணியே இவ்வாறு கையாட்கள் / கைப்பாவைகளைப் பயன்படுத்தி தாக்குதலில் இறங்கி இருக்கலாம் என்ற ஐயம் நிலைமையைச் சிக்கலாக்குகிறது.

இந்த கைப்பாவைகள் பற்றிய உண்மை அறியும் ஆய்வில், இப்பாவைகள் ஆங்காங்கு அருண் என்ற பயனரால் இயக்கப்படுகிறது என்று அறியப்பட்டு அவர் ஒரு வாரம் தடை செய்யப்படுகிறார். அதற்குப் பிறகு இவர் மீண்டும் பங்களிக்கவரவில்லை.

இந்நிலையில் இராசனும் ஒரு கைப்பாவையாக இருக்கலாம் என்று எண்ணி சோதனை செய்யப்படுகிறது. ஆனால், இராசனின் கணக்குக்கு ஏற்கனவே உள்ள எந்த ஒரு பயனரிடமும் தொடர்பு இல்லை என்று அறிக்கை வருகிறது. இருந்தாலும், இவருடைய செயற்பாட்டை முன்வைத்து இவர் ஏற்கனவே உள்ள ஒரு பயனரின் கையாள் / கைப்பாவையாகத் தான் இருக்க வேண்டும் என்று பலர் எண்ணுகிறார்கள்.

கைப்பாவை அறிக்கை வந்த பிறகும் இவ்வாறு கூற்றம் சாட்டுவது தவறு என்று கூறி இந்த அவதூறை நீக்கக் கோரி இரவி முறையிடுகிறார். ஆனால், விக்கிச் சமூகம் செவி சாய்க்கவில்லை.

இதற்கு இடையில் இரவி பல்வேறு கேள்விகளைத் தேனி சுப்பிரமணியின் பக்கத்தில் முன்வைக்கிறார். முறையான பதில் கிடைக்காவிட்டாலும், விக்கிச் சமூகத்தின் நிலையைச் சிக்கலாக்கக்கூடாது என்று பல முறையீடுகளைத் தானே முன்வந்து விலக்கிக் கொள்வதாக அறிவிக்கிறார். விக்கிசமூகம் இதனைக் கவனித்துத் தேவையான மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகிறார். ஆனால், இந்த வேண்டுகோள் கவனிக்கப்படவில்லை.

இந்தச் சிக்கலைத் தீர்க்கும் முகமாக சுந்தர் பிணக்குத் தீர்வு முறை, சமுதாய முறையீட்டுக் கூடங்களைப் பரிந்துரைக்கிறார்.

இதனைத் தொடர்ந்து இராசன் முன்வைத்த முறையீடுகள் தேனி சுப்பிரமணி நிருவாக அணுக்கம் குறித்து நடிவடிக்கை எடுக்க போதுமானவை தானா என்று பரிந்துரைக்க ஒரு ஐவர் குழுவை நற்கீரன் அமைக்கிறார்.

ஐவர் குழு இராசனின் பெரும்பான்மையான முறையீடுகளைத் தள்ளுபடி செய்து சில பரிந்துரைகளை மட்டும் தேனி சுப்பிரமணி முன் வைக்கிறது:

  • தடித்த சொற்களைப் பயன்படுத்த மாட்டேன் என்று உறுதி
  • இதழில் வெளியான கட்டுரையின் தகவலைத் திருத்தி மறுப்பு வெளியிடுவது.
  • நலமுரண் செயற்பாடுகளில் ஈடுபடாதிருப்பது.

இந்தப் பரிந்துரை வரும் அதே வேளையில் அன்டன், தேனி சுப்பிரமணி மீது இன்னொரு நிருவாக அணுக்கல் நீக்கல் முறையீட்டை முன்வைக்கிறார். இதில், அவர் விக்கி கொள்கைகளை மீறி தனது தளங்களுக்கு இணைப்பு தருவது ஒரு முக்கிய குற்றச்சாட்டாக இருக்கிறது.

தேனி சுப்பிரமணி ஐவர் குழு பரிந்துரை பற்றி எந்த எதிர்வினையும் ஆற்றாமல் ஒட்டுமொத்தமாகப் பங்களிப்புகளை நிறுத்திக் கொள்கிறார்.

அதே வேளை தமிழ் விக்கிப்பீடியா தொடர்பாக தொடர்ந்து மேடைகளில் பேசுவதையும், இதழ்களில் எழுதுவதையும் அவற்றை நூலாக ஆக்குவதையும் தொடர்கிறார்.

தேனி சுப்பிரமணி எதிர்வினை ஆற்றாமல் இருப்பதால், ஐவர் குழு பரிந்துரைக்கு ஒப்ப நிருவாக அணுக்கல் நீக்கல் நடவடிக்கையைத் தொடருமாறு இரவி கோருகிறார். ஆனால், ஐவர் குழு அமைத்த நற்கீரன் உட்பட யாரும் இதற்கு முன்வரவில்லை.

2013 இறுதி

எனவே, நிருவாக அணுக்க நீக்கல் கொள்கை உருவாக்கும் பணியையும் அதற்கடுத்து வாக்கெடுப்பு நடத்தும் பணியையும் இரவி ஏற்றுக் கொள்கிறார்.

இது தொடர்பான கொள்கை அனைவரின் கருத்துகளையும் உள்வாங்கி, திறந்த முறையில், ஒரு மனதாக நிறைவேற்றப்படுகிறது.

2014 தொடக்கம்

தற்போது இது தொடர்பாக வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. பின்வரும் காரணங்களைச் சுட்டி நிருவாக அணுக்கத்தை நீக்க வேண்டும் என்று கோரப்படுகிறது.

  • நூற்றுக் கணக்கான பக்கங்களில் கட்டுரைப் பக்கங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட கொள்கை மீறல்கள். சுட்டிக் காட்டியும் திருத்தி எழுத முன்வராமை. *நிருவாக அணுக்க நீக்கம் மற்றும் பல சிக்கல்கள் குறித்தான தமிழ் விக்கிப்பீடியர்களின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காமை.
  • தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உண்மைக்குப் புறம்பான செய்தியை மாத இதழ் ஒன்றில் எழுதுதல். அதன் தவறைச் சுட்டிக் காட்டி மறுப்பு வெளியிடக் கோரியும் எதிர்வினை ஆற்றாமை.
  • தமிழ் விக்கிப்பீடியா தொடர்பாக அரச நிறுவனங்களுடனான தொடர்பாடல் குறித்த வெளிப்படைத் தன்மையின்மை.
  • உடன் பங்களிக்கும் ஒருவரை ஒருமையிலும் முட்டாள் என்றும் விளித்தது. இது முறையற்றது என்று சுட்டிக்காட்டியும் வருத்தம் தெரிவிக்க மறுப்பது.
  • பயனர்களின் வேண்டுகோளுக்கு மாறாக தனது பேச்சுப் பக்கத்தைப் பூட்டி வைத்துக் கொண்டது நிருவாக அணுக்கத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகும்.

நிருவாக அணுக்கத்தை நீக்கக்கூடாது என்று கோருபவர்கள் பின்வரும் வாதங்களை வைக்கிறார்கள்:

  • பல ஆண்டுப் பிரச்சினைகளை ஒன்றாக குவிக்கக்கூடாது.
ஆனால், இப்பிரச்சினைகளைத் தனித்தனியாகச் சுட்டிக்காடியும் போதுமான காலம் கொடுத்துவம் அவற்றைத் திருத்திக் கொள்ள தேனி சுப்பிரமணி முன்வரவில்லை.
  • தேனியின் ஒத்துழையாமைக்கு அவர் மட்டும் காரணம் கிடையாது. இராசன், அடையாளம் காட்டாத பயனர்களின் சீண்டலும் ஒரு காரணம்.
ஆனால், இராசன் ஒரு வார காலம் தடை செய்யப்பட்டார். அதன் பிறகு அவர் மீண்டும் வரவில்லை. அடையாளம் காட்டாத பயனர்கள் பலர் தடுக்கப்பட்டார்கள். மீண்டும் வரவில்லை. இவர்களின் வருகைக்கும் போக்குக்கும் முன்பும் பின்பும் உள்ள பல பிரச்சினைகளிலும் கூட தேனி சுப்பிரமணி தன்னுடைய தவறை உணர்ந்து திருத்திக் கொள்ள மறுக்கிறார்.

இக்குற்றச்சாடுகளை முன்வைக்கும் மற்ற பயனர்களின் நடவடிக்கைகளில் நிறைவு இல்லை என்றால் அவர்கள் மீதான நடவடிக்கைகளைத் தனியாக கோர வேண்டும். அதன் காரணமாக தேனியின் ஒத்துழையாமைச் செயற்பாட்டைத் தள்ளுபடி செய்ய முடியாது.

  • பத்தாண்டு நிகழ்வின் கடுமையான விமரிசனத்துக்காக பழி தீர்க்கும் செயல் இது
நடைபெற்று வரும் வாக்கெடுப்பில் பலரும் நிருவாக அணுக்கத்தை நீக்க வேண்டும் என்றும் நடுநிலையாகவும் வாக்கிட்டு வருகிறார்கள். இவர்களில் பலருக்கு இச்சிக்கலில் நேரடித் தொடர்பில்லை. எனவே, இதனைப் பழி தீர்க்கும் செயலாகச் சித்தரிப்பது தவறு.